முதியவர்களுக்கே இந்த நிலையா..? வீட்டிற்குள் புகுந்து 60 வயது.. மூதாட்டிக்கு பாலியல் துன்புறுத்தல்.. மீண்டும் அதிகாலையில் வந்து அத்துமீறல்… கள்ளக்குறிச்சியில் பரபரப்பு…!!

Spread the love

கள்ளக்குறிச்சி மாவட்டம் வடபொண்பரப்பி காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில், வீட்டில் தனியாக உறங்கிக் கொண்டிருந்த 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவரிடம் நள்ளிரவில் வாலிபர் ஒருவர் அத்துமீறி நுழைந்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த மூதாட்டி சத்தம் போடவே, அருகில் இருந்தவர்கள் ஓடி வருவதைக் கண்டு அந்த வாலிபர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட மூதாட்டி தரப்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இப்புகாரின் பேரில் உடனடியாகச் செயல்பட்ட வடபொண்பரப்பி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின் முடிவில், மூதாட்டியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட நபர் அதே பகுதியைச் சேர்ந்த அலெக்ஸ் பாண்டியன் என்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, போலீசார் அவர் மீது பாலியல் வன்கொடுமை மற்றும் பாலியல் சீண்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, அவரை அதிரடியாகக் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட அலெக்ஸ் பாண்டியனை போலீசார் சங்கராபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி அவரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டதைத் தொடர்ந்து, அவர் சிறையில் அடைக்கப்பட்டார். பாதுகாப்பு இல்லாத சூழலில் வீட்டில் தனியாக இருந்த முதியவர் ஒருவரிடம் வாலிபர் நள்ளிரவில் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதும், அவர் கைது செய்யப்பட்டதும் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Swetha

Recent Posts

“மத்திய அமைச்சர் பதவி கொடுத்தா அதிமுகவை பாஜகவிடம் விற்றுவிடுவார்”.. எடப்பாடியை அசிங்கப்படுத்திய தவெக நிர்மல் குமார்..!!

அதிமுக தலைமையின் மீதான கடுமையான நம்பிக்கையின்மையால் தான், அக்கட்சியைச் சேர்ந்தவர்கள் தற்போது தங்களை மாற்றிக்கொண்டு தானாகவே தவெகவில் இணைந்து வருவதாக…

24 minutes ago

“டெல்லியை உலுக்கும் மெகா புரட்சி.. ‘காக்கரோச் ஜனதா கட்சி’ போராட்டத்தில் குதித்த AISA மற்றும் SFI மாணவ இயக்கங்கள்.. மத்திய அரசுக்கு புதிய நெருக்கடி”..!

நீட் (NEET-UG 2026) வினாத்தாள் கசிவு மற்றும் சிபிஎஸ்இ (CBSE) தேர்வு குளறுபடிகளுக்கு எதிராக, நாட்டின் கல்வித்துறையையும் லட்சக்கணக்கான மாணவர்களின்…

45 minutes ago

“சச்சினின் 36 ஆண்டுகால அசுர சாதனை அவுட்.. இந்திய கிரிக்கெட்டை ஆள வந்த 15 வயது சிறுவன் வைபவ் சூர்யவன்ஷி.. பிசிசிஐ-யின் அன்லிமிடெட் அதிரடி பிளான்..!!

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு ஒரு மாபெரும் வரலாற்றுச் சாதனை இன்று நிகழ்த்தப்பட்டுள்ளது. அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து…

56 minutes ago

“ரயில்வே சாப்பாட்டுல இனிமேல் இந்த தப்பு நடக்காது.. ஏஐ தொழில்நுட்பத்தின் மாஸ் என்ட்ரி.. ஐஆர்சிடிசி-யின் அதிரடி ஆக்ஷன்”..!!

ரயில் பயணிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம் மற்றும் சுகாதாரத்தை 100 சதவீதம் உறுதி செய்யும் நோக்கில், இந்திய ரயில்வே உணவு…

1 மணத்தியாலம் ago

“அன்று விஜய்யை 3 மணி நேரம் அலையவிட்ட அமைச்சர்!.. இன்று தவெக வாசலில் மணிக்கணக்கில் காத்திருந்த கொடூரம்.. காலம் கொடுத்த மரண அடி”..!!

தமிழக அரசியலில் இன்று ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அதிரடித் திருப்புமுனை நிகழ்ந்துள்ளது. ஒருகாலத்தில் தமிழகத்தின் அசுர பலம் வாய்ந்த…

1 மணத்தியாலம் ago

“டிகிரி முடிச்சிருக்கீங்களா?.. 7,150 காலிப்பணியிடங்கள்.. கடைசி தேதி நீட்டிப்பு.. மிஸ் பண்ணிடாதீங்க.. SBI அதிரடி அறிவிப்பு”..!!

வங்கித் துறையில் பணிபுரிய ஆர்வமுள்ள நம்ம ஊர் இளைஞர்களுக்கு ஒரு புதிய வேலைவாய்ப்புச் செய்தியை இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான…

1 மணத்தியாலம் ago