தென்காசியை தொடர்ந்தே சிவகங்கை நேற்று அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் 11 பேர் உயிரிழந்தனர். அந்த சம்பவம் மறைவதற்குள் மற்றொரு விபத்து நடந்துள்ளது. செங்கல்பட்டு கல்பாக்கம் அருகே அரசு பேருந்து மற்றும் வேன் நேருக்கு நேர் மோதியதில் இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கல்பாக்கம் அடுத்த குன்றத்தூர் கிழக்கு கடற்கரை சாலையில் அரசு பேருந்து மற்றும் வேன் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.
சென்னையிலிருந்து புதுச்சேரி நோக்கி சென்ற அரசு பேருந்தும் ஆலந்தூரில் உள்ள தனியார் நிறுவனத்திற்கு ஆட்களை ஏற்றிச் சென்ற வேனும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டதில் தனியார் நிறுவனத்தின் தொழிலாளர்கள் இருவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர். மேலும் 10க்கும் மேற்பட்டோர் பலத்த காயங்களுடன் நீக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளன. முதல் கட்ட விசாரணையில் உயிரிழந்தவர்கள் 40 வயதான உமா மற்றும் 24 வயதான பானு என்பது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக தற்போது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சிம்லாவில் அமைந்துள்ள துணை ஆணையர் அலுவலக வளாகத்தில் எதிர்பாராத விதமாகத் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. வங்கியில் பணத்தைச் செலுத்துவதற்காக ஒருவர்…
விஜயவாடா கிருஷ்ணலங்கா பகுதியில் உள்ள ராமையா தங்கும் விடுதி அறையில், பைடிசெட்டி எர்ரம்மா என்ற பெண் மர்மமான முறையில் கொலை…
வாரங்கல் நகரின் கரிமாபாத் பகுதியில் பட்டப்பகலில் ஐயப்ப பக்தர்கள் போல் வேடமணிந்து வந்த இருவர், பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து…
நவம்பர் 10-ம் தேதி குருகிராமில், முன்பகை காரணமாக நிதின் என்ற 25 வயது இளைஞர் கும்பல் ஒன்றால் கொடூரமாகத் தாக்கப்பட்ட…
பாலிவுட் நடிகர் சரத் கபூர், தனது குடும்பத்தைப்போல வளர்த்து வந்த நான்கு செல்லப் பிராணிகளான நாய்களை மும்பையில் உள்ள விலங்குகள்…
குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் உள்ள மேட்பூர் கிராமத்தில், சாதி மறுப்பு காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து 21 வயது மகளைத்…