சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடும் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நேற்று தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், தமிழகம் என்பது படிக்காத தற்குறிகள் நிறைந்த மாநிலம் அல்ல என்பதை மக்கள் நிரூபிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இந்தி திணிப்பு, ஜிஎஸ்டி மற்றும் நீட் தேர்வு போன்ற விவகாரங்களில் இந்தியாவிலேயே தமிழகம் மட்டுமே துணிச்சலாக எதிர்த்து நின்றதைச் சுட்டிக்காட்டிய அவர், இங்குள்ள மக்களின் ரத்தத்தில் இன்றும் போர் குணம் மாறாமல் இருப்பதே இதற்குக் காரணம் என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
தேர்தல் வெற்றி தோல்விகள் குறித்துப் பேசிய சீமான், “எனக்கு ஓட்டு போடுங்கள் அல்லது போடாமல் போங்கள், அது உங்கள் விருப்பம். நான் புதிதாகத் தோற்றவன் அல்ல, ஏற்கனவே நான்கு முறை தோல்வியைத் தழுவியவன் தான். தோல்வியைக் கண்டு நான் ஒருபோதும் துவண்டதில்லை” என்று அதிரடியாகத் தெரிவித்தார். பணத்தை அடிப்படையாகக் கொண்ட அரசியல் வளர்ந்தால், மக்கள் சேவையும், பண்பாடும், ஒழுக்கமும் அழிந்துவிடும் என்று எச்சரித்த அவர், தமிழர்களின் சிறப்புகளைத் தமிழர்கள் சொன்னால் புரியாது என்றும், வெளிநாட்டுப் பயணி யுவான் சுவாங் போன்றவர்கள் சொன்னால்தான் நம்புவார்கள் என்றும் சாடினார்.
வாக்காளர்களுக்குப் பணம் மற்றும் டோக்கன் கொடுக்கும் கலாச்சாரத்தைக் கடுமையாகச் விமர்சித்த சீமான், உணவகங்களுக்குச் சென்றால்தான் டோக்கன் வாங்க வேண்டுமே தவிர, வாக்களிக்க டோக்கன் வாங்கக் கூடாது என்று அறிவுறுத்தினார். இந்தத் தேர்தலில் உண்மையான போட்டி என்பது திமுகவுக்கும், நாம் தமிழர் கட்சிக்கும் இடையேதான் நிலவுவதாகக் குறிப்பிட்ட அவர், மத்தியில் ஆளும் பாஜகவிற்குத் தமிழகத்தில் இடமே இல்லை (No Where, No More) என்று திட்டவட்டமாகக் கூறித் தனது உரையை நிறைவு செய்தார்.
டாஸ்மாக் துறையில் தவெக அரசு மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். இத்துறையில் ஆண்டுக்கு 3,600 கோடி ரூபாய்…
உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், 21 வயது வாலிபர் ஒருவர் தனது சொந்தத்…
ராஜஸ்தான் மாநில காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு, ஏழை மற்றும் மைனர் பெண்களைப் பொய் வாக்குறுதிகள் அளித்து ஏமாற்றி, அவர்களை…
ஆந்திரப் பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தில், புது தில்லியிலிருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கிராண்ட் டிரங்க் (ஜிடி) எக்ஸ்பிரஸ் இரயில் மீது…
நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக சந்தித்த தோல்விக்கு உதயநிதி ஸ்டாலினின் தலைமையே முழு முதற்காரணம் என்று காங்கிரஸ்…
ஐஐஎம் பட்டதாரி ஒருவர், தனது முதல் பெருநிறுவன சம்பளத்தை பெற்ற கையோடு, அதனைத் ரொக்கமாக மாற்றித் தனது பெற்றோருக்குக் கொடுத்து…