புருஷனுக்கு பக்கவாதம், 22 வயதில் மகள்.. கள்ளக்காதலனுடன் இருவரையும் தீர்த்துக்கட்டி நாடகமாடிய பெண்… அமானுஷ்ய சடங்குகளால் வெளிவந்த உண்மை…!

Spread the love

தெலுங்கானா மாநிலம் பூபால பள்ளி மாவட்டம் ஒடிதலா கிராமத்தை சேர்ந்த குமாரசாமி (58) தன் முதல் மனைவி இறந்த பிறகு கவிதா என்ற பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு வர்ஷினி மற்றும் ஹன்சிகா என்ற இரண்டு மகள்கள் உள்ளன. இளைய மகள் ஹன்சிகாவுக்கு திருமணம் ஆகி வெளியூரில் கணவருடன் வசித்து வருகிறார். கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு குமாரசாமிக்கு பக்கவாத நோய் ஏற்பட்டதால் வீட்டில் முடங்கினார். இந்நிலையில் அதே கிராமத்தை சேர்ந்த திருமணம் ஆகாத ராஜ்குமார் என்பவருடன் கவிதாவுக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டதால் இருவரும் அடிக்கடி தனிமையில் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.

மனைவியின் கள்ளக்காதல் விவகாரம் குமாரசாமிக்கு தெரிய வந்ததால் அவரை கண்டித்துள்ளார். இதனால் கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. கள்ள காதலுக்கு இடையூறாக இருந்த கணவரை தீர்த்து கட்ட கவிதா முடிவு செய்த நிலையில் வீட்டில் மகள் இல்லாத போது ராஜ்குமாரை வீட்டுக்கு வரவழைத்து கணவரின் கால்களை பிடித்து கொண்டார் கவிதா. பிறகு ராஜ்குமார் குமாரசாமியின் கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளார். பின்னர் கணவர் உடல் நலக்குறைவால் இறந்து விட்டதாக நாடகமாடியுள்ளார். ஐந்து ஆண்டுகளாக உடல் நலக்குறைவாக இருந்த தந்தை எப்படி திடீரென இறந்து விட்டார், ராஜ்குமார் ஏன் அடிக்கடி நமது வீட்டுக்கு வந்து செல்கிறார் என வர்ஷினி தாயிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

கணவர் குறித்து கேள்வி எழுப்பியதால் மகளையும் கொலை செய்ய கவிதா முடிவு செய்த நிலையில் கடந்த மாதம் இரண்டாம் தேதி வர்ஷினி நள்ளிரவு ஆழ்ந்த உறக்கத்திலிருந்து உள்ளார். அப்போது கவிதா தன்னுடைய கள்ளக்காதலனை வீட்டுக்கு வரவழைத்து கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளார். பிறகு மகளின் பிணத்தை சாக்கு மூட்டையில் கட்டி கிராமத்தின் புறநகர் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு பின்புறம் இருந்த முள்புதரில் வீசியுள்ளார். மகள் காணாமல் போனதாக போலீசில் புகார் அளித்து நாடகமாடியுள்ளார்.

பிறகு கள்ளக்காதல் என் ராஜ்குமார் கடந்த மாதம் 25ஆம் தேதி முள் புதரில் இருந்த வர்ஷினியின் பிணத்தை மீண்டும் மூட்டை கட்டினார். பின்னர் பிணத்தை தன்னுடைய பைக்கில் வைத்து எடுத்துச் சென்று சாலையோரம் வர்ஷணியின் பிணத்தை வைத்து பிணத்தின் மீது மஞ்சள் குங்குமம் உடலை சுற்றிலும் பூக்களை தூவினார். ஆணிகளை அடித்து அமானுஷ்ய சடங்கு செய்து வர்ஷினியை யாரோ கொலை செய்ததாக சித்தரிக்க முயற்சி செய்தார். வர்ஷினியின் பிணத்தினருகே ஆதார் அட்டையை வீசி விட்டு வந்தார்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கவிதாவுக்கு போன் செய்த நிலையில் தனது மகளை யாரோ கொலை செய்து விட்டதாக கதறி எழுது நாடகம் ஆடினார். உடனே கவிதாவின் நடத்தையில் போலீசாருக்கு சந்தேகம் வந்ததால் விசாரணை நடத்தியதில் தனது கள்ளக்காதலன் உதவியுடன் மகளை கொன்றதை அவர் ஒப்புக்கொண்டார். இதனைத் தொடர்ந்து போலீசார் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Nanthini

Recent Posts

“யமராஜனின் மருமகன் வந்துட்டான்!”.. பழைய இரும்பில் உருவான எலும்புக்கூடு பைக்.. நெட்டிசன்கள் மிரண்ட வீடியோ..!!!

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவைச் சேர்ந்த ஜீத் (@wbjit64) என்ற பைக் வோல்கர், தனது அபாரமான 'தேசி ஜுகாட்' (Desi…

3 மணத்தியாலங்கள் ago

BREAKING: பயிர்க்கடன் தள்ளுபடி.. CM விஜய் அறிவித்தார்..!!!

தமிழக முதல்வர் விஜய், கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட பயிர்க் கடன்களைத் தள்ளுபடி செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த அறிவிப்பின்படி,…

3 மணத்தியாலங்கள் ago

“காய்ச்சல் வர்றதுக்கு முன்னாடி லீவ் லெட்டர் கொடு!”… முதலாளியின் விசித்திர ரூல்.. பாஸை வறுத்தெடுத்த பெண் ஊழியர்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ..!!

பெருநிறுவன வாழ்க்கையில் (Corporate life) நிலவும் விசித்திரமான மற்றும் நியாயமற்ற விதிமுறைகள் சமூக ஊடகங்களில் விவாதப் பொருளாக மாறுவது வழக்கமான…

3 மணத்தியாலங்கள் ago

“அனாதை பெண்களுக்கு மாப்பிள்ளை தேவை…” ஒரே ஒரு அறிவிப்பு, ஓடிவந்த 40 மணமகன்கள்… திருமண மேடையில் காத்திருந்த அந்த ‘ட்விஸ்ட்’.. மத்தியபிரதேசத்தில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்..!!

மத்தியப் பிரதேசத்தின் தேவாஸ் நகரில் அனாதை இல்லத்துச் சிறுமிகளுக்குத் திருமணம் செய்து வைப்பதாகக் கூறி, 40-க்கும் மேற்பட்ட இளைஞர்களிடம் லட்சக்கணக்கான…

4 மணத்தியாலங்கள் ago

சல்லி சல்லியாய் உடைந்த அதிமுக.. விஜய் போட்ட ‘ஸ்கெட்ச்’.. இபிஎஸ்-க்கு விழுந்த பலத்த அடி.. அதிமுகவில் இருந்து தவெக-விற்கு இணைந்த 3 எம்.எல்.ஏ-க்கள்…!!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், அதிமுகவைச் சேர்ந்த மூன்று முக்கிய எம்.எல்.ஏ-க்களான மரகதம் குமரவேல் (மதுராந்தகம்), ஜெயக்குமார்…

4 மணத்தியாலங்கள் ago

விவசாயிகளே அலர்ட்..! PM கிசான் 23-வது தவணை எப்போது..? அரசின் ரூ.2000 பெற உடனே செய்ய வேண்டிய இ-கேஒய்சி பணிகள்..!!

மத்திய அரசின் 'பிஎம் கிசான்' (PM-KISAN) திட்டத்தின் கீழ், தகுதியுள்ள விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 6,000 ரூபாய் நிதியுதவி தலா 2,000…

4 மணத்தியாலங்கள் ago