கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற துபாரே யானைகள் முகாமில், இரு யானைகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் சென்னையைச் சேர்ந்த பெண் சுற்றுலாப் பயணி ஒருவர் உயிரிழந்ததோடு, காயம் அடைந்த ஒரு யானையும் பரிதாபமாக உயிரிழந்துள்ளது. இந்த அடுத்தடுத்த துயரச் சம்பவங்களைத் தொடர்ந்து, குஷால்நகர் அருகே உள்ள துபாரே யானைகள் முகாமை மறு உத்தரவு வரும் வரை தற்காலிகமாக மூட வனத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். தமிழகத் தலைநகர் சென்னையைச் சேர்ந்த 33 வயதான ஜியுனேஷ் என்ற பெண், வார இறுதி விடுமுறையைக் கொண்டாடத் தனது குடும்பத்தினருடன் குடகு பகுதிக்குச் சென்றுள்ளார். அங்கு காவிரி ஆற்றில் நடக்கும் புகழ்பெற்ற யானைகள் குளியல் நிகழ்வைக் காணச் சென்றபோதுதான் இந்த விபரீதம் நிகழ்ந்துள்ளது.
ஆற்றில் பல யானைகள் குளிப்பாட்டப்பட்டுக் கொண்டிருந்தபோது, ‘கஞ்சன்’ மற்றும் ‘மார்த்தாண்டா’ ஆகிய இரு யானைகளுக்கு இடையே திடீரென எதிர்பாராதவிதமாகச் சண்டை வெடித்தது. சண்டையின் போது கஞ்சன் என்ற யானை மார்த்தாண்டாவை ஆக்ரோஷமாகத் தாக்கியதில், நிலைதடுமாறிய ஒரு யானை எதிர்பாராதவிதமாக அங்கு நின்று கொண்டிருந்த ஜியுனேஷ் மீது விழுந்தது. யானையின் இமாலய எடையில் நசுங்கி, பலத்த காயமடைந்த அந்தப் பெண், அதிர்ச்சியில் உறைந்திருந்த சுற்றுலாப் பயணிகளின் கண் முன்னாடியே சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் ஆற்றுப் பகுதியில் திரண்டிருந்த நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் அலறியடித்துக் கொண்டு ஓடியதால் அங்கு பெரும் கூச்சலும் குழப்பமும் நிலவியது. உடனே விரைந்து வந்த வனத்துறையினரும் போலீசாரும் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்து, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விசாரணையைத் தொடங்கினர்.
இந்த மோதலில் மார்த்தாண்டா யானையின் வயிறு மற்றும் காது பகுதிகளில் ஆழமான காயங்கள் ஏற்பட்டன. அதற்கு முகாமிலேயே மருத்துவர் முஜிப் தலைமையிலான குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வந்தபோதிலும், அது சிகிச்சை பலனின்றிப் பரிதாபமாக உயிரிழந்தது. மற்றொரு யானையான கஞ்சன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தனியாகப் பிரித்து வைக்கப்பட்டுள்ளது. இத்தகைய பெருந்துயரத்திற்கு மத்தியிலும், உயிரிழந்த ஜியுனேஷின் குடும்பத்தினர் அவரது கண்களைத் தானம் செய்ய முன்வந்தது அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு சென்னைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது. குடகின் முக்கிய சுற்றுலாத் தலமான இந்த முகாம், பாதுகாப்பு வழிமுறைகளை மறுஆய்வு செய்யும் வரை மூடப்பட்டிருக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முழுக்க முழுக்க 7 நாட்கள் மாயமாகிவிட்டு, ஒரு நாள் நள்ளிரவில் ராஜு தன் வீட்டிற்குத் திரும்பியபோது, வாசலில் கிடந்த அந்த…
தமிழக அரசின் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ், ரேஷன் கார்டில் கணவரின் பெயர் குடும்பத் தலைவராக இருந்தாலும் தகுதியுள்ள…
சென்னையில் இன்று நடைபெற்ற பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் ஒரு சுவாரசியமான, அதே…
தமிழக அரசியலில் புதிய திருப்பமாக, முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சகாயம் விரைவில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான 'தமிழக வெற்றிக் கழகத்தில்'…
தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக எதிர்பார்த்த வெற்றியைப் பெற முடியாமல் மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டதைத் தொடர்ந்து, கட்சிக்குள் ஏற்பட்டுள்ள அதிகாரப்…
உத்தரகாண்ட் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் புவன் சந்திர கந்தூரி (91) இன்று (மே 19, 2026) காலமானார் என்ற துயரச்…