சென்னையில் இன்று நடைபெற்ற பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் ஒரு சுவாரசியமான, அதே சமயம் சிந்திக்க வைக்கும் நிகழ்வு அரங்கேறியுள்ளது. இந்த முக்கியக் கூட்டத்தில் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ், அவரது மனைவியும் பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவருமான சவுமியா அன்புமணி உள்ளிட்ட பல முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். கூட்டத்தில் பேசிய சவுமியா அன்புமணி, மேடைகளில் தலைவர்களுக்கு பொன்னாடை போர்த்தி மரியாதை செலுத்தும் வழக்கத்திற்குப் பதிலாக, புதியதொரு நடைமுறையைக் கொண்டு வர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.
நிர்வாகிகளிடையே உரையாற்றிய சவுமியா அன்புமணி, “நம்மைப் பார்க்கும்போது மரியாதை நிமித்தமாக பொன்னாடை போர்த்தும் வழக்கம் நம்மிடம் உள்ளது. கை எடுத்து கும்பிடுவது, வணக்கம் சொல்வது, மரியாதை செலுத்துவது எல்லாமே நல்ல விஷயங்கள் தான். ஆனால், அன்போடு வழங்கப்படும் அந்தப் பொன்னாடைகளை நாம் பிற்காலத்தில் எந்த அளவுக்குப் பயன்படுத்துகிறோம் என்பது தெரியவில்லை. எனவே, இனிவரும் காலங்களில் வீணாக பொன்னாடை வாங்குவதற்குப் பதிலாக, அந்தப் பணத்தைக் கட்சிக்கு நிதியாக வழங்கலாம்” என்று மனப்பூர்வமாகத் தனது கருத்தைப் பதிவு செய்தார்.
சவுமியா அன்புமணியின் இந்த ஆக்கப்பூர்வமான யோசனையைக் கேட்டதும், மேடையில் இருந்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உடனடியாக அதற்குப் பச்சைக்கொடி காட்டினார். மனைவியின் விருப்பத்தை வழிமொழிந்து பேசிய அவர், “அவர் என்ன சொல்கிறார் என்றால், இனி யாரும் யாருக்கும் ஷால் (பொன்னாடை) போர்த்த வேண்டாம். ஒரு பொன்னாடையை 50 ரூபாய், 100 ரூபாய், 500 ரூபாய், ஏன் சிலர் 1000 ரூபாய் கொடுத்து கூட வாங்குகிறீர்கள். அதன் பிறகு அந்த ஷாலை வைத்து நாம் என்ன செய்யப் போகிறோம்? அந்தப் பணத்தை ஏன் வீணாக்க வேண்டும்?” என்று எதார்த்தத்தைக் சுட்டிக்காட்டினார்.
மேலும், தொண்டர்களை உற்சாகப்படுத்தும் வகையில் ஒரு புதிய அறிவிப்பையும் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டார். “நமது கட்சியின் ‘பார் கோட்’ (QR Code) இருக்கிறது. பொன்னாடை வாங்கும் பணத்திற்குப் பதிலாக, அதில் ஒரு 50 ரூபாய் செலுத்திவிட்டு, அந்த ஸ்நாப்ஷாட்டை (Screenshot) எங்களிடம் காண்பித்தால், நாங்கள் உங்களுடன் மகிழ்ச்சியோடு இணைந்து புகைப்படம் (Photo) எடுத்துக் கொள்கிறோம்” என்று அவர் கலகலப்பாகக் கூறினார். தலைவர்களின் இந்த எளிய மற்றும் பயனுள்ள அணுகுமுறை பாமக தொண்டர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
கர்நாடக மாநிலம் பாதாமியில் உள்ள 6-ஆம் நூற்றாண்டு வரலாற்றுச் சிறப்புமிக்க குகைக் கோயிலுக்குள், பாரம்பரியமிக்க அந்தப் புனிதத் தலத்தின் விதிகளை…
அமெரிக்காவின் தென் கரோலினா மாகாணத்தில், 14 வயது வளர்ப்பு மகளைப் பல ஆண்டுகளாகப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தி வந்த வளர்ப்பு…
உத்தரப் பிரதேசத்தில் அரங்கேறியுள்ள இந்த அதிர்ச்சிகரமான குற்றச்சம்பவம் ஒட்டுமொத்தப் பகுதியையும் உலுக்கியுள்ளது. தாய் மற்றும் அவரது இளம் மகள் ஆகிய…
மத்திய அரசின் 'PM கிசான்' திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 3 தவணைகளாக தலா ₹2,000 வீதம் மொத்தம் ₹6,000…
மத்திய அரசு கடந்த வாரம் பெட்ரோல், டீசல் விலையை லிட்டருக்கு 3 ரூபாய் உயர்த்தியதைத் தொடர்ந்து, இன்று மீண்டும் 90…
போக்குவரத்துத்துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் பெற்றதாகப் பதிவு செய்யப்பட்ட மோசடி வழக்கில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை…