410 நாள் ஜெயில்.. மீண்டும் செந்தில் பாலாஜிக்கு வந்த புது நெருக்கடி… விஜய் கையில் தான் எல்லாமே…. 87-ஆம் பக்கத்தை காட்டும் அன்புமணி….!

Spread the love

போக்குவரத்துத்துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் பெற்றதாகப் பதிவு செய்யப்பட்ட மோசடி வழக்கில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை விசாரிக்க அனுமதி கோரி தமிழக அரசுக்கு அமலாக்கத்துறை கடிதம் அனுப்பியுள்ளது. இந்நிலையில், இந்த வேலைவாய்ப்பு மோசடி வழக்கை நீதிமன்றத்தில் தொடர்ந்து நடத்த அமலாக்கத்துறைக்கு தமிழக அரசு உடனடியாக அனுமதி அளிக்க வேண்டும் என்று பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். அரசு நிர்வாகத்தில் தூய்மையை ஏற்படுத்தும் நோக்குடன் மேற்கொள்ளப்பட்டுள்ள அமலாக்கத்துறையின் இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது என்றும் அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2011-15 காலப்பகுதியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக செந்தில் பாலாஜி பணியாற்றிய போது, அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் ஓட்டுனர், நடத்துனர் மற்றும் பொறியாளர்கள் உள்ளிட்ட பணிகளை வழங்குவதாகக் கூறி பல்லாயிரக்கணக்கானோரிடம் கோடிக்கணக்கில் பணம் வசூலித்து ஏமாற்றியதாக சென்னை மத்தியக் குற்றப்பிரிவு காவல்துறை வழக்குப் பதிவு செய்தது. இந்த வேலைவாய்ப்பு மோசடி மூலம் கிடைத்த பணத்தை சட்டவிரோதமாகப் பரிமாற்றம் செய்ததாக செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் மீது அமலாக்கத்துறையும் தனியாக வழக்குப் பதிவு செய்தது. இக்குற்றச்சாட்டின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டு 410 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னாள் அமைச்சர்கள் மீது சட்டப்படி வழக்குத் தொடர அரசின் அனுமதி கட்டாயம் தேவை என்ற சூழலில், கடந்த ஆண்டு மே மாதம் ஆளுநரிடம் அமலாக்கத்துறை கோரிய அனுமதி நிராகரிக்கப்பட்டது. முன்னாள் அமைச்சர்கள் மீதான விசாரணைக்கு அரசிடம் தான் நேரடியாக விண்ணப்பிக்க வேண்டும் என்று கூறப்பட்டதைத் தொடர்ந்து, தற்போது அமலாக்கத்துறை உரிய ஆதாரங்களுடன் தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கு அதிகாரப்பூர்வமாக கடிதம் அனுப்பியுள்ளது. இந்த அனுமதிக் கடிதத்திற்கு தமிழக அரசு சாதகமான முடிவை வழங்கினால் மட்டுமே முடங்கிக் கிடக்கும் நீதிமன்ற விசாரணையைத் தொடங்க முடியும் என்ற நிலை உள்ளது.

போக்குவரத்துக் கழகங்களில் வேலை வழங்குவதாகக் கூறி பணம் வாங்கியதை செந்தில் பாலாஜியே ஒப்புக்கொண்டு, பாதிக்கப்பட்ட பலருக்குப் பணத்தைத் திருப்பிக் கொடுத்ததாக உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளதை அன்புமணி ராமதாஸ் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், லஞ்சத்திற்கு எதிராக ‘ஜீரோ சகிப்புத்தன்மை’யுடன் செயல்படுவோம் என தற்போதைய தமிழக அரசின் தேர்தல் அறிக்கையிலேயே கூறப்பட்டுள்ளதால், அதற்குச் செயல்வடிவம் கொடுக்கும் வகையில் செந்தில் பாலாஜி மீதான சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கிற்கு முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக அரசு உடனடியாக அனுமதி அளிக்க வேண்டும் என்று அவர் தனது அறிக்கையின் வாயிலாக வலியுறுத்தியுள்ளார்.

Nanthini

Recent Posts

மசாஜ் சென்டர் பெயரில் நடந்த கொடூரம்… போதைப்பொருள் கடத்தல் மன்னன் அக்பர் அலி… போலீசிடம் சிக்கியது எப்படி?…

கொச்சி கடவந்தரா காவல் நிலையத்தில் 2025-ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட ஒழுக்கக்கேடான மனித கடத்தல் வழக்கின் முக்கிய குற்றவாளியாக அக்பர்…

49 minutes ago

ஐயோ கொடுமையே… வேடிக்கை பார்த்த நொடியில் விபரீதம்… குடிநீர் குழாய் பள்ளத்தில்… திடீரென சுருண்டு விழுந்த சிறுவன்… நெஞ்சை பதறவைக்கும் CCTV வீடியோ…!!

சுள்ளியாவின் ஸ்ரீராமப்பேட்டையில் உள்ள சாலையோரக் குடிநீர் திட்டப் பணிகளின் போது, திறந்தவெளி சாக்கடையில் சிறுவன் ஒருவன் விழுந்து அதிர்ஷ்டவசமாக உயிர்…

50 minutes ago

பார்த்தா ரத்தம் உறைஞ்சிடும்!… கையில் பச்சிளம் குழந்தை… கொடூரமாக பாய்ந்த வெறி மாடு… தாத்தாவின் பாசப் போராட்டம்… வைரல் சிசிடிவி காட்சி…!!

தெருவில் தனது பேரக் குழந்தையை கைகளில் ஏந்தியவாறு நடந்து சென்ற முதியவர் ஒருவரை, அங்கு நின்றுகொண்டிருந்த வெறி கொண்ட காளை…

53 minutes ago

அடக்கடவுளே!.. வெடிகுண்டு இல்ல… அமேசான் அலுவலகம் அருகே பயங்கர வெடிப்பு… பின்னணியில் இருந்த “ஒற்றை எலி”… வெளிவந்த பகீர் உண்மை…!!

பகலூர் சாலையில் உள்ள அமேசான் அலுவலகப் பகுதியில் அண்மையில் நிகழ்ந்த எதிர்பாராத வெடிவிபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது…

58 minutes ago

“என் நண்பனுக்கு ட்ரீட்மெண்ட் பண்ணுங்க…” ஈசிஜி மானிட்டர் ஒயரை பிடித்து இழுத்த வாலிபர்… ஹாஸ்பிடலில் அராஜகம் செய்த வாலிபர்… பரபரப்பு சம்பவம்…!!

மதுரை அரசு மருத்துவமனையில் காயமடைந்த தனது நண்பனுக்கு உடனடியாகச் சிகிச்சை அளிக்கக் கோரி இளைஞர் ஒருவர் கடும் ரகளையில் ஈடுபட்டுள்ளார்.…

1 மணத்தியாலம் ago

ஐயோ… வயசுக்குக் கூட மரியாதையில்லையா?… மெட்ரோ சீட் தகராறில்… முதியவரை உதைத்துத் தள்ளிய பெண்… இணையத்தில் ஷாக்கிங் வீடியோ வைரல்…!!

பெண்களுக்கான முக்கியத்துவமும் உரிமைகளும் பெண்களை மேன்மைப் படுத்துவதற்காகத்தானே தவிர, மற்றவர்களை வன்முறையால் ஒடுக்குவதற்காக அல்ல. பொதுவெளியில் நடைபெறும் இதுபோன்ற சம்பவங்கள்,…

1 மணத்தியாலம் ago