“வீட்டிலிருந்தே வேலை, பென்சில் பேக் பண்ணா போதும்”… அப்ளை செய்த 21 வயது இளம்பெண்… இறுதியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!

Spread the love

ஆன்லைன் வேலை என்று கூறிய மோசடியில் சிக்கிய பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேச மாநிலம் ஜான்சியில் சில நாட்களுக்கு முன்பு ஒரு பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. அவர் கொலை செய்யப்பட்டாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்று போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தது. ஜான்சி மாவட்டத்தில் உள்ள பர்வா சாகர் பகுதியை சேர்ந்த பாவ்னா பால் (21) என்ற பெண் காணாமல் போனதை தொடர்ந்து அவருடைய கணவர் காவல்துறையில் புகார் அளித்தார். அந்தப் பெண் வழக்கமாக கோவிலுக்கு செல்லும்போது ஒரு குவளையில் தண்ணீருடன் வீட்டை விட்டு சென்ற நிலையில் திரும்பி வரவில்லை என கூறப்படுகிறது.

பிறகு சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் அவர் செல்லும் வழியை கண்டறிந்து இறுதியாக ஆற்றின் கரையில் இறந்த நிலையில் அவர் உடல் கண்டெடுக்கப்பட்டது. அவர் கடுமையான மன அழுத்தத்தில் தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. அந்தப் பெண் பணம் சம்பாதிப்பதற்காக பல வழிகளை தேடிக்கொண்டிருந்த போது அதிக ஊதியத்துடன் வீட்டில் இருந்து வேலை என்று பென்சில் நிறுவனத்தின் பேக்கேஜிங் வேலை குறித்த விளம்பரத்தை ஆன்லைனில் பார்த்துள்ளார். வேலையை பதிவு செய்வதற்காக அவரிடம் 35 ஆயிரம் ரூபாய் பணம் செலுத்த வேண்டும் என கேட்டதால் அவரும் நம்பி பணத்தை அனுப்பியுள்ளார். ஆனால் அதன் பிறகு அவர்கள் அந்த பெண்ணை தொடர்பு கொள்ளவில்லை.

அவர்களுடைய தொலைபேசி எண்ணும் செயலில் இல்லை என தெரிகிறது. பிறகுதான் அவரது போலி விளம்பரம் என அறிந்து கொண்டார். பணத்தை இழந்ததால் மனமுடைந்த அவர் தற்கொலை செய்து கொண்டதாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. கடந்த 2023 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட அவருக்கு ஒரு வயதில் மகன் உள்ளார். மோசடிக்கு ஆளான அந்த பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Nanthini

Recent Posts

கிழிந்தது அதிமுக கோட்டை?… கொறடா உத்தரவை மீறிய 25 எம்.எல்.ஏ-க்கள்.. சபாநாயகர் எடுக்கப்போகும் அந்த ‘ஒரே ஒரு’ முடிவு… பதறப்போகும் எடப்பாடி கேம்ப்…!!

தமிழக சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு மீது நடத்தப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பு, பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவுக்குள் மிகப்பெரிய…

6 minutes ago

“₹27,400 கோடி திட்டம் காலி? அல்லது புதிய ரூட்டா?”… அதிகாரிகளுடன் விஜய் நடத்திய 3 மணி நேர சீக்ரெட் மீட்டிங்… பரந்தூர் திட்டத்தில் நடக்கப்போகும் ட்விஸ்ட்…!

தமிழகத்தின் மிகப்பெரிய உள்கட்டமைப்புத் திட்டங்களில் ஒன்றாகக் கருதப்படும் பரந்தூர் பசுமை விமான நிலையத் திட்டம், தற்போது அரசியல் மற்றும் நிர்வாக…

11 minutes ago

BREAKING: கனமழை வெளுத்து வாங்கும்… தமிழகத்திற்கு வந்த அலர்ட்… உங்க ஊர் இருக்கானு பாருங்க….!

இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுவடைந்து வருவதால்,…

18 minutes ago

தமிழகத்தில் இனி ரூ.1,000-ல் சொத்து மாற்றம்… பத்திரப்பதிவு ரொம்ப ஈஸி… அரசு சூப்பர் குட் நியூஸ்..!

தமிழகத்தில் குடும்பத் தலைவர் மறைவுக்குப் பிறகு, சொத்துக்களை வாரிசுதாரர்கள் பெயருக்கு மாற்றுவதில் உள்ள நடைமுறைச் சிக்கல்களும், அதிகப்படியான கட்டணச் சுமைகளும்…

23 minutes ago

“140 மணிநேரம்… 24 பிணங்கள்”… முதல்வர் விஜய் பதவியேற்ற 5 நாட்களில் 24 கொலைகளா?… ரத்தக் காடாகும் தமிழகம்?… புதிய அரசுக்குத் தொடரும் தலைவலி…!

தமிழகத்தில் அண்மையில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று, தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய் முதல்வராகப் பொறுப்பேற்று…

48 minutes ago

பற்றி எரியும் சென்னை ஓஎம்ஆர்… டெக் மகேந்திரா வளாகத்தில் பயங்கர தீ விபத்து… பதைபதைக்க வைக்கும் வீடியோ…!

சென்னையின் முக்கிய தகவல் தொழில்நுட்ப மையமான ஓஎம்ஆர் (OMR) சோழிங்கநல்லூர் - காரப்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள டெக் மகேந்திரா (Tech…

52 minutes ago