கிழிந்தது அதிமுக கோட்டை?… கொறடா உத்தரவை மீறிய 25 எம்.எல்.ஏ-க்கள்.. சபாநாயகர் எடுக்கப்போகும் அந்த ‘ஒரே ஒரு’ முடிவு… பதறப்போகும் எடப்பாடி கேம்ப்…!!

Spread the love

தமிழக சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு மீது நடத்தப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பு, பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவுக்குள் மிகப்பெரிய உள்கட்சிப் பூசலை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்துள்ளது. இந்த வாக்கெடுப்பில் தவெக அரசுக்கு ஆதரவாக 144 உறுப்பினர்கள் வாக்களித்த நிலையில், அதிமுகவின் எஸ்பி வேலுமணி தரப்பைச் சேர்ந்த 25 எம்.எல்.ஏக்கள் கட்சியின் அதிகாரப்பூர்வ கொறடா உத்தரவை மீறி ஆளும்கட்சிக்கு ஆதரவாக வாக்களித்துள்ளதுதான் தற்போதைய அரசியல் வட்டாரங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரம் வெளியான உடனேயே அதிரடி நடவடிக்கையில் இறங்கிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கட்சியின் கட்டுப்பாட்டை மீறிய வேலுமணி தரப்பு 25 சட்டமன்ற உறுப்பினர்களின் மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட அனைத்து முக்கியப் பொறுப்புகளையும் பறித்து, அவர்களைக் கட்சியிலிருந்தே நீக்குவதாக அறிவித்தார். அதனைத் தொடர்ந்து, கொறடா உத்தரவை மீறிச் செயல்பட்ட அந்த 25 எம்.எல்.ஏக்களையும் கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் உடனடியாகத் தகுதிநீக்கம் செய்ய வேண்டும் என்று எடப்பாடி தரப்பு சபாநாயகரிடம் மனு அளித்துள்ளது.

மறுபுறம், எஸ்பி வேலுமணி தரப்பினரும் சபாநாயகரைச் சந்தித்து, எடப்பாடி பழனிசாமி உட்பட 22 எம்.எல்.ஏக்களை தகுதிநீக்கம் செய்ய வேண்டும் எனக் கோரி பதில் மனு கொடுத்துள்ளனர். சட்டமன்றக் கொறடா பதவி யாருக்கு என்ற மோதலும் இத்துடன் வெடித்துள்ள நிலையில், எடப்பாடி தரப்பு அக்ரி கிருஷ்ணமூர்த்தியையும், தங்களுக்குத்தான் பெரும்பான்மை இருக்கிறது என்று கூறும் வேலுமணி தரப்பு சி.விஜயபாஸ்கரையும் கொறடாவாக அங்கீகரிக்க வேண்டும் என சபாநாயகரிடம் வலியுறுத்தி வருகின்றனர்.

இரு தரப்பு மனுக்களையும் பெற்றுக்கொண்டுள்ள சபாநாயகர் ஜேசிடி பிரபாகர், இதுகுறித்து சட்டமன்றச் செயலாளர் சீனிவாசனுடன் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார். சட்டரீதியாகக் கால அவகாசம் இருப்பதால் சபாநாயகர் உடனடியாக எந்தவொரு இறுதி முடிவையும் அறிவிக்க வாய்ப்பில்லை என்றாலும், கட்சி உத்தரவை மீறிய 25 பேரின் பதவி மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு கோட்டை வட்டாரத்தில் அதிகரித்துள்ளதோடு, அதிமுகவின் எதிர்கால நகர்வுகளும் சபாநாயகரின் முடிவை நோக்கியே நகர்கின்றன.

Muthu Mani

Recent Posts

பணத்திற்கான இப்படியா..? கணவனை கொன்று டிரம்மில் அடைத்த மனைவி… நடுநடுங்கிப்போன காவல்துறை…!!

மும்பை மும்ப்ரா பகுதியைச் சேர்ந்த அர்பாஸ் என்ற வாலிபர் அண்மையில் திடீரென காணாமல் போன நிலையில், அவர் பணத்திற்காகக் கொடூரமான…

3 minutes ago

டெல்லியில் நிஜ ‘DDLJ’ ட்விஸ்ட்!.. கூட்டத்தில் நழுவிய துப்பட்டா.. அடுத்த நொடியே ஹீரோ போல என்ட்ரி கொடுத்த இந்திய வாலிபர்… வைரலாகும் இந்தோனேசியப் பெண்ணின் வீடியோ…!!!

புது தில்லி ரயில் நிலையத்தில் இந்தோனேசியாவைச் சேர்ந்த உள்ளடக்கப் படைப்பாளியான (Content Creator) இந்தா என்ற பெண் பயணிக்கு ஏற்பட்ட…

6 minutes ago

தவெக கொடுத்த 10 அமைச்சர் பதவி… இபிஎஸ் பண்ண தப்பு… முன்னாள் அமைச்சர் வீரமணியின் பகீர் வாக்குமூலத்தால் அதிரும் அதிமுக..!!

தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள விஜய் தலைமையிலான தவெக அரசுக்கு, அதிமுக வெளியில் இருந்து ஆதரவு தரலாம் என்று தாம் முன்மொழிந்ததாக…

7 minutes ago

“டீச்சர் தயவுசெய்து ஒரு தடவை மட்டும் சிரிங்களேன்” அப்போ தான் நான் அழ மாட்டேன்… அடம்பிடித்த சிறுமி… வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ.!!

சமூக வலைதளங்களில் ஒரு பள்ளிச் சிறுமி தனது ஆசிரியையிடம் பேசும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி லட்சக்கணக்கான மக்களின் இதயங்களை…

11 minutes ago

“என் புள்ள இல்லாம” மகன் ஹாஸ்டல் சென்றதால் உடைந்த தாய்… பிரிவைத் தாங்க முடியாமல் கண்ணீர் வடித்த அம்மாவின் உருக்கமான வீடியோ வைரல்..!!

மகனுக்கும் தாய்க்கும் இடையிலான பாசப் பிணைப்பை உணர்த்தும் ஒரு நெகிழ்ச்சியான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தனது மகன்…

11 minutes ago

திருநங்கைகளுக்கும் மகளிர் உரிமைத்தொகை ரூ.2500… முதல்வர் விஜய்க்கு திருநங்கை சமூகத்தினர் அவசரக் கோரிக்கை..!!

தமிழ்நாட்டில் உள்ள தகுதியான அனைத்து திருநங்கைகளுக்கும் தங்கு தடையின்றி மகளிர் உரிமைத் தொகை வழங்கக் கோரி, தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்க்கு…

18 minutes ago