தமிழ்நாட்டில் உள்ள தகுதியான அனைத்து திருநங்கைகளுக்கும் தங்கு தடையின்றி மகளிர் உரிமைத் தொகை வழங்கக் கோரி, தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்க்கு திருநங்கை சமூகத்தினர் அவசரக் கோரிக்கை விடுத்துள்ளனர். முந்தைய திமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் ஒரு சில திருநங்கைகளுக்கு மட்டுமே மாதாந்திர உதவித்தொகை கிடைத்ததாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். தங்களில் பெரும்பாலானோர் இத்திட்டத்திற்கு விண்ணப்பித்திருந்த போதிலும், பல்வேறு காரணங்களைச் சுட்டிக்காட்டி தங்களின் விண்ணப்பங்கள் தொடர்ந்து நிராகரிக்கப்பட்டதாக வேதனை தெரிவித்துள்ளனர்.
புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தவெக அரசு தனது தேர்தல் வாக்குறுதியின்படி மகளிர் உரிமைத் தொகையை ₹2,500 ஆக உயர்த்த திட்டமிட்டுள்ள நிலையில், இதற்கான புதிய அரசாணையில் அனைத்து திருநங்கைகளையும் உள்ளடக்குமாறு அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். திருநங்கைகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், பொருளாதார ரீதியாக அவர்களைத் தற்சார்பு அடையச் செய்யவும் எவ்வித நிபந்தனையுமின்றி இத்தொகை வழங்கப்பட வேண்டும் என்பதே அவர்களின் பிரதான கோரிக்கையாக உள்ளது. தவெக அரசு இந்த விவகாரத்தில் உடனடியாகத் தலையிட்டு உரிய அரசாணையை வெளியிட வேண்டும் எனப் போராட்டக் குழுவினர் எதிர்பார்ப்புகளுடன் காத்திருக்கின்றனர்.
மத்தியப் பிரதேச மாநிலம் நர்சிங்பூர் மாவட்டம், கோடேகாவ் பகுதியில் 8 வயது சிறுமி ஒருவர் ஏமாற்றி கடத்திச் செல்லப்பட்டு பாலியல்…
குஜராத் மாநிலம் மோர்பி மாவட்டத்தில் உள்ள வீர்பரடா கிராமத்தில் உள்ள ஒரு கிணற்றில், திடீரென நீரலைகள் பொங்கி எழுந்து அசைவுகள்…
பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் உள்ள NH -30 நெடுஞ்சாலையில் வெள்ளிக்கிழமை காலை ஒரு சோகமான விபத்து ஏற்பட்டது. மேற்கு…
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு காணொளியில், மலைப்பாங்கான பகுதியில் சிறுவர்கள் சிலர் கிரிக்கெட் விளையாடும்போது, போதுமான ஆட்டக்காரர்கள் இல்லாததால்…
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரின் கல்தா கேட் பகுதியில், மூன்று குழந்தைகளுக்குத் தந்தையான முன்னா என்ற தையல் தொழிலாளி தனது வீட்டில்…
தலைமைச் செயலகத்தில் 25 விவசாய சங்க பிரதிநிதிகளுடன் அமைச்சர்கள் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு, தமிழக காவிரி விவசாயிகள் சங்கத் தலைவர்…