கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டம் ராம துர்கா தாலுக்கா கோனகனூர் கிராமத்தை சேர்ந்த தேமப்பா என்பவருடைய மனைவி நாகவியா வந்தமுரி(28). நாகவ்யாவுக்கும் அதே பகுதியை சேர்ந்த மெகபூப் சாப் என்பவருக்கு இடையே பழக்கம் ஏற்பட்டு அது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதனை அறிந்த தேமப்பா தன்னுடைய மனைவியை கண்டித்தும் அவர் தனது கள்ளக்காதலை கைவிடுவதாக இல்லை. இதனைத் தொடர்ந்து கணவரை பிரிந்து கள்ளக்காதலனுடன் நாகவ்யா சென்றுவிட்டார்.
இருவரும் ராம துர்கா பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்த நிலையில் கள்ளக்காதலர் மதம் மாறும்படி நாகவ்யாவை தொடர்ந்து தொந்தரவு செய்து வந்துள்ளார். மேலும் மதம் மாறவில்லை என்றால் கொலை செய்து விடுவதாகவும் கூறி மிரட்டியதால் இருவருக்கும் தினம்தோறும் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மணமுடைந்த பெண் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உயிரிழந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வெயிலின் தாக்கத்தால் ஏற்படும் எண்ணெய் பசை, முகப்பரு மற்றும் கருமை போன்ற சருமப் பிரச்சனைகளுக்குத் தேன் ஒரு சிறந்த தீர்வாக…
வீட்டின் அழகைக் கூட்டும் ஸ்டீல் கதவுகள் மற்றும் பால்கனி கைப்பிடிகள், மழை மற்றும் தூசியால் துருப்பிடித்துப் பொலிவிழப்பதைத் தவிர்க்க எளிய…
நீச்சல் தெரியாதவர்கள் எதிர்பாராத விதமாக தண்ணீரில் விழுந்தால், உயிர் பிழைப்பதற்கான எளிய மற்றும் மிக முக்கியமான நுட்பம் குறித்த வீடியோ…
தபால் நிலையத்தின் 'நேர வைப்புத் திட்டம்' (Time Deposit Scheme) முதலீட்டாளர்களுக்குப் பாதுகாப்பான மற்றும் அதிக லாபம் தரும் வாய்ப்புகளை…
நகைக்கடையில் ஷாப்பிங் செய்ய வந்த பெண் ஒருவர் கைவரிசை காட்டிய அதிர்ச்சி வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடையில்…
கோடைக்காலத்தில் குளிர்ச்சிக்காகத் தயிரை விரும்பிச் சாப்பிட்டாலும், அதனைச் சரியான முறையில் உட்கொள்ளாவிட்டால் உடல் நலக் கோளாறுகள் ஏற்படும் என நிபுணர்கள்…