தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதி ஒட்டுமொத்த மாநிலத்தின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்தத் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் சீனிவாச சேதுபதி, வெறும் ஒரு வாக்கு வித்தியாசத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பதிவு செய்துள்ளார். முதல்முறையாகத் தேர்தல் களத்தைக் கண்ட தவெக, ஒரு மூத்த அமைச்சரையே மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வீழ்த்தியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
வாக்கு எண்ணிக்கையின் இறுதிவரை நீடித்த பரபரப்பில், தவெக வேட்பாளர் சீனிவாச சேதுபதி 83,375 வாக்குகளைப் பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக அமைச்சரும் மூத்த அரசியல்வாதியுமான பெரிய கருப்பன் 83,374 வாக்குகள் பெற்று, நூலிழையில் வெற்றியைத் தவறவிட்டார். ஒரு வாக்கு என்பது எவ்வளவு வலிமையானது என்பதைத் தேர்தல் முடிவுகள் நிரூபித்துள்ள நிலையில், திருப்பத்தூர் தொகுதியின் இந்த முடிவு தமிழகத் தேர்தல் வரலாற்றில் ஒரு முக்கியப் பதிவாக மாறியுள்ளது.
டேராடூனின் படேல் நகரில் நிகழ்ந்த துணிகரக் கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள…
மனைவியைப் பிரிந்து வாழ்ந்துவந்த ஆட்டோ ஓட்டுநரான ரமேஷ், பாபு என்பவரின் மகளோடு நட்பு பாராட்டி வந்துள்ளார். இந்தத் தொடர்பை பாபு…
சம்பல் மாவட்டம் பஹ்ஜோய் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில், கூடுதல் வரதட்சணையாக மோட்டார் சைக்கிளும் தங்கச் சங்கிலியும் தராத காரணத்தால் ராதா…
வீட்டில் பரிசோதித்த கர்ப்பப் பரிசோதனை முடிவும் வயிறு பெரிதானதும் ஒரு தாய்க்குத் தன் பதின்ம வயது மகள் மீது தவறான…
மத்தியப் பிரதேசத்தின் ராய்சென் மாவட்டம், தேவரி வட்டாரத்தில் அமைந்துள்ள படாய் கிராமத்து நர்மதை ஆற்றங்கரையில், விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள் மண்ணைத் தோண்டியபோது…
பீகார் மாநிலம் பாட்னா அருகிலுள்ள பார் பகுதியில் தீபாவளி பண்டிகையன்று இரவு அதிர்ச்சிகரமான குற்றச்சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. வெகுநேரமாகியும் வீடு…