கோர்ட்டில் அரங்கேறிய கூத்து… இன்னைக்கு நான் தான்… நீதிபதி சீட்டில் அமர்ந்த பெண் செய்த ரகளையால்… நீதிமன்றத்தில் பரபரப்பு…!!

Spread the love

வாரணாசி நீதிமன்றத்தில் பெண் ஒருவர் நீதிபதியின் நாற்காலியில் அமர்ந்து ரகளை செய்த விசித்திரமான சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நீதிமன்ற அறைக்குள் நுழைந்த அந்தப் பெண், திடீரென மாவட்ட நீதிபதியின் இருக்கையில் போய் அமர்ந்து கொண்டார். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த நீதிமன்ற ஊழியர்களும் வழக்கறிஞர்களும் அவரை கீழே இறங்குமாறு எவ்வளவோ வற்புறுத்தியும், அவர் கேட்காமல் பிடிவாதம் பிடித்தார்.

அந்த இருக்கையில் அமர்ந்துகொண்டு, “இன்று நான் தான் மாவட்ட நீதிபதி, நானே தீர்ப்பு வழங்குவேன்” என்று அந்தப் பெண் சத்தமாகக் கூறினார். மேலும், அங்கிருந்த மேஜையைத் தட்டி, நீதிமன்றப் பாணியில் “ஆர்டர், ஆர்டர்” என்றும் கத்தினார். அவரை அங்கிருந்து அகற்ற முயன்ற பெண் காவலர்கள் மற்றும் ஊழியர்களுடன் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அவர்களைத் தாக்க முற்பட்டதால் நீதிமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

நீண்ட போராட்டத்திற்குப் பிறகு, பெண் போலீசார் அந்தப் பெண்ணை வலுக்கட்டாயமாக நாற்காலியில் இருந்து இறக்கி, நீதிமன்ற அறையை விட்டு வெளியே அழைத்துச் சென்றனர். விசாரணையில், அந்தப் பெண் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்துள்ளது. இந்த முழுச் சம்பவத்தையும் அங்கிருந்த யாரோ ஒருவர் தனது மொபைல் போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பகிர, அது தற்போது இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.

Swetha

Recent Posts

“உடலில் நெளிந்த புழுக்கள்…” மரணப்பிடியில் சிக்கி தவித்த முதியவர்… கடவுளாக வந்து உயிரைக் காப்பாற்றிய வாலிபர்… கண்கலங்க வைக்கும் நெகிழ்ச்சி சம்பவம்..!!

டெல்லியின் பளபளப்பான ஆடம்பர நகர வாழ்க்கைக்கு நடுவே, முதியவர் ஒருவர் ஆதரவின்றிச் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார். போதிய பராமரிப்பும் உணவும்…

8 minutes ago

“ஸ்டீயரிங்கை தொட்டுக் கும்பிட்டு கண்ணீர்…” பணி ஓய்வு நாளில் பஸ்சுக்கு முத்தம் கொடுத்து விடைபெற்ற டிரைவர்… கேரளாவில் நெகிழ வைக்கும் வீடியோ வைரல்…!!

கேரள மாநில அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் இடுக்கி மாவட்டம் குமளி டிப்போவில் ஓட்டுநராகப் பணியாற்றி வந்தவர் பால் குரியன். இவர்…

15 minutes ago

கோடாரி, வாளுடன் வாலிபரை தாக்க பாய்ந்த கும்பல்… தடுக்க முயன்ற பெண்… இணையத்தில் வைரலாகும் பயங்கர வீடியோ…!!

சமூக வலைத்தளங்களில் கோடாரி மற்றும் வாள் போன்ற கூர்மையான ஆயுதங்களுடன் இளைஞர் ஒருவரைத் தாக்கப் பாயும் நெஞ்சைப் பதறவைக்கும் வீடியோ…

28 minutes ago

அடபாவிங்களா…! காதலிக்காக மருத்துவமனை சென்ற வாலிபர்… வார்டில் ஒலித்த அந்த ஒரு பாட்டு… ஆஸ்பத்திரி பெட்டில் நடந்த விபரீத டுவிஸ்ட்…!!

காதலில் விழுந்தவர்கள் செய்யும் வேடிக்கையான குளறுபடிகளுக்கு என் நண்பன் ஒருவனின் வாழ்க்கையில் நடந்த சம்பவமே சிறந்த உதாரணம். அவனுக்குக் காரம்…

55 minutes ago

“திருவிழா முடியட்டும் கல்யாணம் பண்ணிக்கிறேன்!”… மாயமானதாக நாடகமாடிய காதலன்… 7 மாத கர்ப்பிணியை மூட்டையில் கட்டி கிணற்றில் வீசிய கொடூரம்…!!

சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் அருகே தானகுட்டிவளவு பகுதியில் உள்ள விவசாயக் கிணறு ஒன்றில், சாக்கு மூட்டையில் கட்டப்பட்ட நிலையில் அழுகிய…

1 மணத்தியாலம் ago