நடன அமைப்பாளராகத் திரையுலகில் அறிமுகமாகி, ‘முனி’, ‘காஞ்சனா’ உள்ளிட்ட பேய் பட வரிசைகள் மூலம் முன்னணி ஹீரோவாக உயர்ந்தவர் ராகவா லாரன்ஸ். கடந்த பல வருடங்களாக அனாதைக் குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்ப்பது, ஏழைகளுக்கு உதவுவது எனச் சமூக சேவைகளில் தீவிரமாக ஈடுபட்டு வரும் இவர், தற்போது தவெக கட்சியில் இணைந்து திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடப் போவதாகத் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், தான் அரசியலுக்கு வரலாமா வேண்டாமா என்று ரசிகர்களிடம் கருத்து கேட்டு ராகவா லாரன்ஸ் சமூக வலைத்தளத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது உணவு வழங்கியதே தனது அரசியல் தொடக்கமாக இருந்தது என்றும், ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவில்லை என்று அறிவித்தபோது தான் மிகவும் சோர்ந்துவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். பின்னர், தான் அரசியலுக்கு வருவதை அவரது தாய் கடுமையாக எதிர்த்த நிலையில், அண்மையில் நடந்த தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, “விஜய் அனைத்தையும் மாற்றிவிட்டார்” என்று கூறி லாரன்ஸ் அரசியலுக்கு வர அவரது தாய் பச்சைக்கொடி காட்டியுள்ளார். தனது தாயின் சம்மதம் கிடைத்துவிட்டதால், ரசிகர்களாகிய உங்களுடைய முடிவு என்ன என்பதை கமெண்ட்டில் தெரிவிக்குமாறு லாரன்ஸ் அந்த வீடியோவில் கோரியுள்ளார்.
லாரன்ஸின் இந்த அரசியல் வருகை அறிவிப்பு சமூக வலைத்தளங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ள நிலையில், நெட்டிசன்கள் சிலர் இதனை நகைச்சுவையாக அணுகத் தொடங்கியுள்ளனர். அவர் அரசியலுக்கு வருவதாக அறிவித்த சில மணி நேரங்களிலேயே, ‘ராகவா லாரன்ஸ்.. ஆவிகள் மற்றும் பேய், பிசாசு நலத்துறை அமைச்சர்’ என்று குறிப்பிட்டு அவரது புகைப்படத்தை வைத்து மீம்ஸ் கிரியேட்டர்கள் உருவாக்கிய எடிட் புகைப்படம் ஒன்று இணையத்தில் பயங்கரமாக ட்ரெண்டாகி வருகிறது. இதைப் பார்த்த ரசிகர்கள், “அதுக்குள்ள அமைச்சராகவே ஆக்கிட்டீங்களா, என்னப்பா இவ்வளவு ஸ்பீடா இருக்கீங்க!” என கமெண்ட் செய்து சிரிப்பலைகளை உருவாக்கி வருகின்றனர்.
தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…
கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…
உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…
உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…
பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள ஒரு பரபரப்பான சந்தைப் பகுதியில், கட்டுப்பாட்டை இழந்து அதிவேகமாகப் பாய்ந்து வந்த கார் ஒன்று…
குஜராத் மாநிலத்தில் விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த 35 வயது இளைஞரின் உறுப்புகளைத் தானம் செய்ய அவரது மனைவி முன்வந்ததன்…