தெலுங்கானா மாநிலத்தில் சாலை இணைப்பு இல்லாததால் மருத்துவ சேவையை பெற முடியாமல் கர்ப்பிணி பெண் ஒருவர் சாலையோரத்தில் குழந்தையை பெற்றெடுத்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. பத்ராத்திரி மாவட்டத்தில் வசித்து வந்த கர்ப்பிணி திடீரென்று கடுமையான பிரசவ வலியால் அவதிப்பட்டு உள்ளார். இதனைத் தொடர்ந்து அவரது குடும்பத்தினர் உடனடியாக ஆம்புலன்ஸ் உதவியை நாடிய நிலையில் கிராமத்திற்கு சாலை வசதி இல்லாததால் ஆம்புலன்ஸ் அங்கு செல்ல முடியாமல் போனது. வேறு வழி இல்லாமல் கிராம மக்கள் தற்காலிகமாக ஒரு ஸ்ட்ரக்சர் தயார் செய்து அதில் அந்த கர்ப்பிணி பெண்ணை வைத்து காட்டுப்பகுதி வழியாக சுமந்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல தொடங்கினர்.
ஆனால் பாதி வழியிலேயே பிரசவ வலி தீவிரம் அடைந்ததால் அந்த பெண்ணின் உடல்நிலை மிகவும் மோசம் அடைந்தது. பிறகு கிராம மக்கள் உதவியோடு சாலையோரத்திலேயே அந்தப் பெண் குழந்தையை பெற்றெடுத்தார். பிறகு சம்பவ இடத்திற்கு வந்த ஆம்புலன்ஸ் தாயையும் புதிதாகப் பிறந்த குழந்தையையும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றது. தற்போது தாயும் குழந்தையும் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது போன்ற சூழல் பலமுறை நடந்து உள்ளதாகவும் அந்த பகுதிக்கு விரைவில் சாலை வசதி அமைத்து தர வேண்டும் என்றும் மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். தெலுங்கானா மட்டுமல்லாமல் நாட்டின் பல தொலைதூர கிராமங்களில் இது போன்ற நிலை தான் நிலவி வருகிறது.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே நிகழ்ந்த கோர விபத்தில் இரண்டு லாரி ஓட்டுநர்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர்.…
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், வேற்றுகிரகவாசிகள் (Aliens) மற்றும் அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்கள் (UFO) குறித்த ரகசிய ஆவணங்களை…
திருப்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரையாற்றிய தருணத்தைக் காட்டுகிறது. மத்தியில் ஆளும் பாஜக அரசு கொண்டு வந்த…
ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் டெல்லி-மும்பை எக்ஸ்பிரஸ்வேயில் நடந்த கோர விபத்து, ஒரு குடும்பத்தையே சிதைத்துள்ளது. இந்த…
சமூக வலைதளங்களில் ஒரு இளம்பெண் உணவகத்தில் உள்ள 'மெனு' (Menu) கார்டுக்கு ஒரு விசித்திரமான மற்றும் நகைச்சுவையான விளக்கத்தைக் கொடுக்கும்…
ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் தாயே தனது 4 வயதுப் பெண் குழந்தையை கழுத்தை நெரித்துக் கொன்ற…