“என்கிட்ட வராத டா”… வலுக்கட்டாயமாக முத்தம் கொடுக்க முயன்ற கள்ளக்காதலன்… உதட்டை கடித்து துப்பிய இளம்பெண்… பட்டப் பகலில் நடந்த பயங்கரம்…!

Spread the love

உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் பகுதியில் உள்ள கிராமத்தை சேர்ந்த சாம்பி(35) என்பவருக்கு திருமணம் ஆகி மனைவி உள்ளார். இதனிடையே அவருக்கு அதே கிராமத்தை சேர்ந்த இளம் பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டு அது கள்ளக்காதலாக மாறியுள்ளது. இருவரும் யாருக்கும் தெரியாமல் கள்ள காதலை வளர்த்து வந்த நிலையில் அந்த இளம் பெண்ணுக்கு வீட்டில் பெற்றோர் வேறொரு நபருடன் திருமண ஏற்பாடு செய்துள்ளனர். இதனால் கள்ளக்காதலை முறித்துக் கொள்ளும்படி இளம் பெண் கூறியுள்ளார். ஆனால் அதனை ஏற்க மறுத்த சாம்பி தன்னுடன் தொடர்ந்து கள்ளக்காதலில் இருக்க வேண்டும் என்று அந்த பெண்ணை வற்புறுத்தியுள்ளார்.

இந்நிலையில் இளம் பெண் நேற்று மதியம் கிராமத்தில் உள்ள குளத்துக்குச் சென்ற போது அவரை பின்தொடர்ந்து வந்த கள்ளக்காதலன் இளம் பெண்ணுக்கு வலுக்கட்டாயமாக முத்தம் கொடுத்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்றுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த இளம் பெண் முத்தம் கொடுக்க வந்த தனது கள்ளக்காதலனின் உதட்டை கடித்து துப்பியுள்ளார். இதில் அவரின் உதட்டில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியதால் அதிர்ச்சி அடைந்த ஜாம்பி வலியில் அலறி துடித்துள்ளார். அவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Nanthini

Recent Posts

TN உள்ளாட்சி தேர்தலுக்குள் இறங்கிய இளைஞர் காங்கிரஸ்… வைரலாகும் ‘மக்கள் சேவகன்’ பிளான்…!!

தமிழ்நாட்டில் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலைக் குறிவைத்து 'மக்கள் சேவகன்' என்ற புதிய இயக்கத்தை தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தொடங்கியுள்ளது. இது…

3 மணத்தியாலங்கள் ago

“என் முதல் ஹீரோ நீங்கதான் அப்பா…!” – தந்தையர் தினத்தில் ரோபோ சங்கர் மகள் உருகிய உருக்கமான பதிவு…!!

தந்தையர் தினத்தை முன்னிட்டு, மறைந்த பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கரை அவருடைய மகள் இந்திரஜா மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக நினைவு…

4 மணத்தியாலங்கள் ago

லக்னோவில் கோர விபத்து… மின்சார கேபிள் ஒயர்களைப் பிடித்து… உயிர் தப்பிய மாணவர்கள்… நெஞ்சை உலுக்கும் அதிர்ச்சி வீடியோ…!

லக்னோ அலிகஞ்ச் பகுதியிலுள்ள 'ஹெட் ஹாப்பர் 3டி ஆர்ட் ஸ்டுடியோ' கட்டிடத்தில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த…

4 மணத்தியாலங்கள் ago

“என்னது.. இந்த வயசுல இப்படியா…?! யார் இந்த ‘மினி ரொனால்டோ’…? – உலக கால்பந்து ஜாம்பவான்களையே திரும்பிப் பார்க்க வைத்த… அந்த ஒரு நிமிட வீடியோ…!”

சமூக ஊடகங்களில் ஒரு சிறிய சிறுவன் கால்பந்தாட்டத்துடன் அசத்தலான திறமைகளை வெளிப்படுத்தும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அந்த…

4 மணத்தியாலங்கள் ago

“”ஷேர் மார்க்கெட் பயம் இருக்கா..? கவலைய விடுங்க… முதலீடு ஒரு முறை… ஒவ்வொரு மாதமும் ₹9,250… மத்திய அரசின் அதிரடி உத்தரவு…!!”

இந்திய அஞ்சல் துறையால் இயக்கப்படும் POMIS திட்டம், சந்தை அபாயங்கள் ஏதுமின்றி பாதுகாப்பான மாதாந்திர வருமானத்தை எதிர்பார்க்கும் ஓய்வு பெற்றவர்கள்…

4 மணத்தியாலங்கள் ago

“உயிரைக் காப்பாற்றிக் கொள்ள முதல் மாடியிலிருந்து குதித்த கொடூரம்…” – லக்னோ தீ விபத்தில்… 15 பேர் பலியான பதறவைக்கும் பின்னணி… பிரதமர் மோடி அதிர்ச்சி இரங்கல்…!!

உத்தரப் பிரதேச மாநிலம், லக்னோவின் அலிகஞ்ச் பகுதியில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் திங்கட்கிழமை பிற்பகல் ஏற்பட்ட கொடூரமான தீ…

4 மணத்தியாலங்கள் ago