#image_title
தமிழ் சினிமாவின் டாப் ஹீரோக்களில் ஒருவரும் புகழ் பெற்ற நடிகருமாக இருந்து வருபவர் விஜய். இவரது தந்தை எஸ்ஏ சந்திரசேகர் தமிழ் சினிமாவில் பணியாற்றிய தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் ஆவார். அதன் மூலம் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு விஜய்க்கு கிடைத்தது.
1990களில் தனது 17வது வயதில் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானார் விஜய். அதற்கு பிறகு குடும்ப கதையம்சம் கொண்ட படங்களில் நடித்தார். 2000 களின் காலகட்டத்திற்கு பிறகு சமூக நீதி கருத்துக்கள் கொண்ட நல்ல கதையம்சம் கொண்ட படங்களில் நடித்ததன் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தார்.
தற்போது விஜயின் படங்கள் வெளிவந்தாலே ஹிட் தான் வசூல் சாதனை படைக்கும் என்ற அளவுக்கு புகழின் உச்சியில் இருக்கிறார். ஆனாலும் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று சினிமாவில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து அரசியல் கட்சியை ஆரம்பிக்க போவதாகவும் கூறியிருந்தார் விஜய்.
அதன்படி தனது அரசியல் கட்சியின் பெயர் தமிழக வெற்றி கழகம் எனவும் கட்சியின் கொடி பாடல் மற்றும் மாநாட்டையும் நடத்தி முடித்து இருக்கிறார் விஜய். இதுவரை சினிமா வட்டாரத்தில் இருந்து நேரடியாக களப்பணிக்கு சென்று நடிகர் விஜய்க்கு ஆதரவாக நிற்பவர்கள் நடிகர்கள் தாடி பாலாஜி மற்றும் சௌந்தர் ராஜா ஆகியோர்தான். ஆனால் இவர்கள் இருவரும் தற்போது செய்து தரும் செயல்கள் விஜயின் அரசியலுக்கு பாதிப்பாக அமையும் என்று கூறுகிறார்கள்.
அதாவது சமீபத்தில் தாடி பாலாஜி விஜய் அவர்களின் முகத்தை தனது நெஞ்சில் டேட்டூ குத்தியிருந்தார். அது மட்டுமில்லாமல் சௌந்தர்ராஜா ஒரு நிகழ்ச்சிக்கு செல்லும்போது நான்கு பவுன்சர்களை கூட்டி செல்வதும் ஏற்புடையதாக தெரியவில்லை. இது விஜய் கவனத்திற்கு சென்றால் கண்டிப்பாக அவர் கண்டிக்க வேண்டும். இதுபோல மூடநம்பிக்கைகளை அவர் வளர்த்து விட்டால் நாளை மக்கள் இவருக்கு நம்பி ஓட்டு போடுவார்களா என்பது தெரியவில்லை. இது அவரது கட்சிக்கு மைனஸ் ஆகத்தான் இருக்கும் என்று பிரபலங்கள் கூறியிருக்கிறார்கள்.
தமிழ்நாடு அரசு விளையாட்டுத் துறையையும், சர்வதேச அரங்கில் பதக்கங்களை வெல்லும் விளையாட்டு வீரர்களையும் ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு சிறப்புத் திட்டங்களைச்…
திரைப்பட இயக்குநரும் நடிகருமான மிஷ்கின், 'டோரதி' என்ற திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு வழக்கம்போல தனது அதிரடி கருத்துகளால்…
தமிழக சட்டமன்றத்தில் தவெக அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவரப்படலாம் என்ற சூழல் எழுந்துள்ள நிலையில், கம்யூனிஸ்ட் கட்சிகளின்…
பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னரான முத்துக்குமரன் மீது வஹிதா என்ற பெண் உடல் ரீதியான தொடர்பு…
திருவைகுண்டம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் கு. சரவணன் மீது நிதி மோசடி உள்ளிட்ட கடுமையான புகார்கள் கிளம்பியுள்ள நிலையில், இது…
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் நாகோல் பகுதியில் உள்ள 100 அடி சாலை அருகேயுள்ள பாழடைந்த இடத்தில், 9 நாட்களாகக் காணாமல்…