#image_title
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர், தயாரிப்பாளர், பாடகர், நிகழ்ச்சி தொகுப்பாளர் மற்றும் பாடல் ஆசிரியர் என பன்முகங்களைக் கொண்டவர் விஜய் சேதுபதி. பின்னணியில் சிறிய கதாபாத்திரத்தில் நடிக்க தொடங்கிய விஜய் சேதுபதி 2010 ஆம் ஆண்டு தென்மேற்கு பருவக்காற்று என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானார். தொடர்ந்து பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சேதுபதி, 96, கருப்பன், விக்ரம் வேதா போன்ற தனக்கு கிடைத்த வாய்ப்பை நன்கு பயன்படுத்தி மிகக் குறுகிய காலத்தில் அதிகப்படியான படங்களில் நடித்து முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தை பெற்றவர் விஜய் சேதுபதி.
மற்ற நடிகர்கள் போல் ஹீரோ சப்ஜெக்ட் மட்டும் தான் நடிப்பேன் என்று கூறாமல் வில்லன் தோற்றத்திலும் வயதான தோற்றத்திலும் கேமியோ தோற்றத்திலும் என பல படங்களில் நடித்து தனித்துவமான புகழை பெற்றவர் விஜய் சேதுபதி. தற்போது விடுதலை படத்தில் நடித்து முடித்துள்ளார்.
இந்நிலையில் விடுதலை திரைப்படத்தின் புரமோஷனுக்காக பல youtube சீனர்களுக்கு பேட்டி கொடுத்து வருகின்றார் விஜய் சேதுபதி. அப்போது வெற்றிமாறன் குறித்தும் அவரது இயக்கத்தில் பணியாற்றியது குறித்தும் பேசியுள்ளார். அதாவது, ‘முதலில் பொல்லாதவன் திரைப்படத்தை பார்த்துவிட்டுவெற்றிமாறன் இயக்கத்தில் ஒரு படத்திலாவது நடித்து விட வேண்டும் என்று ஆசைப்பட்டேன்.
இதனால் ஆடுகளம் பட ஆடிஷனில் கலந்து கொண்டேன். ஆனால் அதில் நடிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை. அதுக்கப்புறம் வடசென்னை திரைப்படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அந்த சமயத்தில் டேட் பிரச்சனையால் அந்த படத்தில் நடிக்க முடியாமல் போனது. அதை நினைத்து நான் ரொம்பவே வருத்தப்பட்டேன். அதுக்கப்புறமா விடுதலை படத்தில் வெறும் எட்டு நாட்கள் மட்டுமே என்னிடம் கால்சீட் கேட்டார்கள் என்று பேசியுள்ளார்.
தேசிய நெடுஞ்சாலை 24-ல் நிலைதடுமாறி பைக்கிலிருந்து கீழே விழுந்து படுகாயமடைந்த 30 வயது இளைஞர் நிதினுக்கு, காசிப்பூர் காவல் துறையினர்…
வறுமையின் பிடியிலும் சதுரங்கப் பலகையில் தன் விடாமுயற்சியால் வியக்கத்தக்க சாதனை படைத்தவர் 18 வயது இளம் வீராங்கனை அஞ்சலி விஸ்வகர்மா.…
உத்தரப் பிரதேச மாநிலம் பதோஹி பகுதியில் 20 வயது நிரம்பிய இளம்பெண் ஒருவர், பூட்டப்பட்ட வீட்டிற்குள் மிகவும் பரிதாபகரமான மற்றும்…
பஞ்சாப் மாநிலம் லூதியானாவின் அமன் நகர் பகுதியில் சுமார் 20 பள்ளி குழந்தைகளுடன் சென்று கொண்டிருந்த பிசிஎம் ஆர்யா பள்ளி…
ஜாலான் மாவட்டம் ஏட் காவல் எல்லைக்குட்பட்ட ஜகௌலி கிராமத்தில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே, ஜான்சி-கான்பூர் நெடுஞ்சாலையில் அதிவேகமாக வந்த…
அயோத்தியிலிருந்து லக்னோ சென்ற ரயிலில் ரசூலி ரயில் நிலையம் அருகே பயணச்சீட்டுப் பரிசோதகர்கள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். டிக்கெட் இன்றி…