வாய்ப்பு கிடைச்சும் வட சென்னை படத்தில் நடிக்காமல் போனதுக்கு இதுதான் காரணம்… ஓப்பனாக பேசிய விஜய் சேதுபதி..!

By Soundarya on மார்கழி 15, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர், தயாரிப்பாளர், பாடகர்,  நிகழ்ச்சி தொகுப்பாளர் மற்றும் பாடல் ஆசிரியர் என பன்முகங்களைக் கொண்டவர் விஜய் சேதுபதி. பின்னணியில் சிறிய கதாபாத்திரத்தில் நடிக்க தொடங்கிய விஜய் சேதுபதி 2010 ஆம் ஆண்டு தென்மேற்கு பருவக்காற்று என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானார். தொடர்ந்து பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சேதுபதி, 96, கருப்பன், விக்ரம் வேதா போன்ற தனக்கு கிடைத்த வாய்ப்பை நன்கு பயன்படுத்தி மிகக் குறுகிய காலத்தில் அதிகப்படியான படங்களில் நடித்து முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தை பெற்றவர் விஜய் சேதுபதி.

   

மற்ற நடிகர்கள் போல் ஹீரோ சப்ஜெக்ட் மட்டும் தான் நடிப்பேன் என்று கூறாமல் வில்லன் தோற்றத்திலும் வயதான தோற்றத்திலும் கேமியோ தோற்றத்திலும் என பல படங்களில் நடித்து தனித்துவமான புகழை பெற்றவர் விஜய் சேதுபதி.  தற்போது விடுதலை படத்தில் நடித்து முடித்துள்ளார்.

   

 

இந்நிலையில் விடுதலை திரைப்படத்தின் புரமோஷனுக்காக பல youtube சீனர்களுக்கு பேட்டி கொடுத்து வருகின்றார் விஜய் சேதுபதி. அப்போது வெற்றிமாறன் குறித்தும் அவரது இயக்கத்தில் பணியாற்றியது குறித்தும் பேசியுள்ளார். அதாவது, ‘முதலில் பொல்லாதவன் திரைப்படத்தை பார்த்துவிட்டுவெற்றிமாறன் இயக்கத்தில் ஒரு படத்திலாவது நடித்து விட வேண்டும் என்று ஆசைப்பட்டேன்.

டப்பிங் பணிகளை தொடங்கிய நடிகர்கள் விஜய் சேதுபதி மற்றும் சூரி / Actors Vijay  Sethupathi and Suri started the dubbing work for viduthalai part 2

இதனால் ஆடுகளம் பட ஆடிஷனில் கலந்து கொண்டேன். ஆனால் அதில் நடிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை. அதுக்கப்புறம் வடசென்னை திரைப்படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அந்த சமயத்தில் டேட் பிரச்சனையால்  அந்த படத்தில் நடிக்க முடியாமல் போனது. அதை நினைத்து நான் ரொம்பவே வருத்தப்பட்டேன். அதுக்கப்புறமா விடுதலை படத்தில் வெறும் எட்டு நாட்கள் மட்டுமே என்னிடம் கால்சீட் கேட்டார்கள் என்று பேசியுள்ளார்.