sira

மீனாவின் தொழிலுக்கு எதிராக நடக்கும் சதி… புது வீட்டுக்கு செல்ல விஜயா பண்ணும் அலப்பறைகள்… சிறகடிக்க ஆசையில் இன்று…

By admin on மார்கழி 16, 2024

Spread the love

சிறகடிக்க ஆசை தொடரின் சனிக்கிழமை எபிசோடில் அனைவரும் ரோகிணி மனோஜ் வாங்கும் வீட்டிற்கு இரண்டு நாள் தங்கப் போகலாம் என்று முடிவு எடுக்கின்றனர். அட்வான்ஸ் கொடுக்க செல்லும்போது அபசகுனமாக ரோகினியின் கால் பட்டு நிறைகுடம் கீழே விழுகிறது. அதோடு அன்றைய எபிசோடு முடிந்தது.

   

இன்றைய எபிசோடில் மீனாவுக்கு ஏற்கனவே மண்டபத்தில் ஆர்டர் கொடுத்தவர்கள் போன் செய்து மறுபடியும் புதிய ஆர்டர் டெக்கரேஷன் கொடுப்பதற்காக வரவைக்கின்றனர். மீனா வருகிறாள் கூடவே அங்கு ஏற்கனவே ரெகுலராக செய்து வரும் ஒரு பெண்மணி மீனாவின் மீது பொறாமை கொண்டு அவளுக்கு கொடுக்க விடக்கூடாது வளர விடக்கூடாது என்று அவரும் வருகிறார்.

   

அப்போது ஒரு கஸ்டமர் வந்து எங்களது மகள் கல்யாணத்துக்கு சூப்பரா டெக்கரேஷன் பண்ணனும். மீனா ஏற்கனவே பண்ணியிருந்தது பிடிச்சிருந்தது என்று கூறுகிறார்கள். ஆனால் மேனேஜர் நாங்க தான் பண்ணுவோம் நாங்க ரெகுலரா பண்றவங்களுக்கு தான் கொடுப்போம் என்று கூறுகிறார். உடனே அவர்கள் ஒரு ஐடியா செய்கிறார்கள். அதாவது மேரேஜ் ஹாலில் இரண்டு பேருக்கும் என்னென்ன டெக்கரேஷன் வேண்டும் என்று சொல்லிவிட்டு யார் கொட்டேஷன் கம்மியாக கொடுக்கிறார்கள் என்று பார்க்கலாம் என்கிறார்கள்.

 

மீனா பட்ஜெட் ஒரு லட்ச ரூபாய்க்கு மேலிருந்தது ஆனால் அந்த பெண்மணி பட்ஜெட்டை வேண்டுமென்றே நஷ்டமானாலும் பரவாயில்லை என்று 60,000 முடித்து தருவதாக கூறுகிறார். எவ்வளவோ மீனா 60,000 க்கு வாய்ப்பே கிடையாது அதுவும் முகூர்த்த நாளில் எப்படி பண்றாங்கன்னு தெரியலன்னு என்று சொல்லியும் கேட்கவில்லை. ஆர்டர் மீனாவின் கையை விட்டு போய்விடுகிறது.

அடுத்ததாக வீட்டில் புது வீட்டுக்கு செல்ல போகிறோம் பங்களா வீட்டில் போய் தங்க போகிறோம் என்று விஜயா பல அலப்பறைகளை பண்ணிக் கொண்டிருக்கிறார். என்ன சேலை எடுத்துட்டு போவது எப்படி பேக் பண்ணுவது என்று ஓடிக்கொண்டிருக்கிறார். ரோகினியை அழைத்து எனக்கு செலக்ட் பண்ணி கொடு என்று கேட்கிறார். அடுத்ததாக ஸ்ருயும் ரவியும் எத்தனை நாளைக்கு பேக் பண்ணனும்னு தெரியல எனக்கு வேலை வேற இருக்குது என்று பேசிக் கொண்டே மீனாவிடம் போய் கேட்கின்றனர்.

மீனா அவசரமாக பூக்கட்டி கொண்டிருக்கிறார். எனக்கு இந்த பூவெல்லாம் காலைல கொடுக்கணும் என்று கூறுகிறார். உடனே விஜயா வந்து ஏன் ஒரு நாளைக்கு லீவு போட முடியாதா என்று கத்துகிறார். ரோகினி காலைக்குள்ள கட்டிருவேன்னு சொல்றாங்க அவங்க வேலையை முடிக்கட்டும் என்று சொல்கிறார். இரண்டு நாளைக்கு துணி எடுத்துக்கலாமா மீனா என்று ஸ்ருதி கேட்கிறார். ஆமாம் ஸ்ருதி ரெண்டு நாளைக்கு நம்ம எடுத்து வச்சுக்கலாம் என்று கூறுகிறார். அனைவரும் புது வீட்டிற்கு செல்ல வேண்டும் என்று ஆர்வத்துடன் கிளம்பி கொண்டிருக்கிறார்கள் அண்ணாமலை விஜயாவை நக்கலடித்துக் கொண்டு இருக்கிறார். அதோடு இன்றைய எபிசோடு முடிந்தது.