பெங்களூரு பிடரஹள்ளியில் உள்ள கித்தகனூர் முதன்மை சாலையில் உள்ள வீட்டில் 40 வயதான முபாரக் பாஷா என்பவர் கொடூரமான முறையில் இறந்து கிடந்தார். அவரது முகத்தில் காயங்களும், விதைகள் நசுக்கப்பட்ட அடையாளங்களும் இருந்ததோடு, மூச்சுத்திணறி உயிரிழந்திருப்பதும் தெரியவந்தது. கடந்த 10 மாதங்களாக இங்கு வசித்து வந்த இவர், தனது மனைவி ஷாஹினா பானுவின் கள்ளத்தொடர்பு காரணமான குடும்ப தகராறுகளுக்குப் பிறகு மனைவியுடன் மீண்டும் சேர்ந்து வாழத் தொடங்கியுள்ளார்.
செப்டம்பர் 9-ஆம் தேதி அதிகாலை 1 மணியளவில், முபாரக் கழிப்பறையைப் பயன்படுத்தும்போது இறந்துவிட்டதாக அவரது குடும்பத்தினருக்குத் தெரிவிக்கப்பட்டது. ஆனால், கிருஷ்ணகிரியைச் சேர்ந்த முபாரக்கின் சகோதரர் ஷாஹுல் மற்றும் குடும்பத்தினர் உடலைப் பார்க்க முயன்றபோது, மனைவி ஷாஹினா உடலைக் காட்ட மறுத்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த ஷாஹுல், ஆவளஹள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் ஷாஹினா, அவரது தாய், சகோதரன் மற்றும் ஷாஹினாவுடன் கள்ளத்தொடர்பில் இருந்ததாகக் கூறப்படும் நஹீம் உல்லா ஆகியோர் மீது சந்தேகம் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
உடற்கூறாய்வில் முபாரக்கின் மூக்கு மற்றும் தாடையில் காயங்கள் இருந்ததும், விதைகள் நசுக்கப்பட்டு மூச்சுத்திணறல் ஏற்படுத்தப்பட்டு அவர் கொலை செய்யப்பட்டிருப்பதும் உறுதியானது. இதையடுத்து, இந்தச் சம்பவத்தை கொலை வழக்காகப் பதிவு செய்த காவல்துறையினர், ஷாஹினா மற்றும் அவரது தாய் ஹசீனாவை உடனடியாகக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
அசாம் மாநிலம் உடல்புரி மாவட்டத்தைச் சேர்ந்த அபிஜித் கிண்டோ என்பவரும், குரியா என்ற பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். இதில் குரியா…
தாராபுரம் தொகுதிக்குட்பட்ட குண்டடம் பகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் ஒன்றிய செயலாளராகச் செயல்பட்டு வந்த பன்னீர்செல்வம், அக்கட்சியிலிருந்து விலகித் தனது…
தாய்லாந்து நாட்டின் பாங்காக் நகரில் உள்ள துங் சோங் ஹோங் பகுதியில் வீட்டின் வெளியே சிமெண்டால் கட்டப்பட்ட மீன் தொட்டியில்…
காஞ்சிபுரம் அருகே உள்ள வண்ணான்தாங்கல் பகுதியைச் சேர்ந்த விறகு வியாபாரி ஆறுமுகம் என்பவரிடம், சிங்காடிவாக்கம் இருளர் குடியிருப்பைச் சேர்ந்த ஆனந்தன்…
கேரள மாநிலத்தில் செல்போன் மற்றும் இணையதளங்கள் வாயிலாக இயங்கி வந்த ஆபாச வீடியோ விற்பனை சாம்ராஜ்ஜியத்தை அதிரடியாகக் கண்டுபிடித்து போலிஸார்…
உத்தரப்பிரதேச மாநிலம் ஆசம்கார் மாவட்டம் பூல்பூர் போலிஸ் எல்லைக்குட்பட்ட கான் ஜகான்பூர் பகுதியில் 17 வயதான சிறுமி ஒருவருக்குச் சூரஜ்…