உத்தரப்பிரதேச மாநிலம் ஆசம்கார் மாவட்டம் பூல்பூர் போலிஸ் எல்லைக்குட்பட்ட கான் ஜகான்பூர் பகுதியில் 17 வயதான சிறுமி ஒருவருக்குச் சூரஜ் என்ற வாலிபருடன் காதல் இருந்துள்ளது. சம்பவத்தன்று நள்ளிரவு, சூரஜ் போன் செய்து வீட்டின் பின்பக்கம் உள்ள வயல்வெளிக்குத் தன்னை நேரில் வந்து சந்திக்குமாறு அச்சிறுமியைக் கூப்பிட்டுள்ளான்.
காதலனைச் சந்திக்கும் ஆசையில் அந்தச் சிறுமி நள்ளிரவில் வீட்டை விட்டு வெளியேறி வயல்வெளிப் பாதை வழியாக ஓடியுள்ளார். அப்போது, விலங்கினங்களிடம் இருந்து பயிர்களைப் பாதுகாப்பதற்காக வயல் உரிமையாளர் சட்டவிரோதமாகப் பாய்ச்சி வைத்திருந்த திறந்தவெளி மின்சாரக் கம்பி மீது சிறுமி எதிர்பாராதவிதமாக மிதித்துள்ளார். இதில் உயர் அழுத்த மின்சாரம் பாய்ந்து அந்தச் சிறுமி சம்பவ இடத்திலேயே துடிதுடித்துப் பரிதாபமாக உயிரிழந்தார்.
கொஞ்சூண்டு பயிரைப் பாதுகாக்க மனித உயிர்களைப் பலிவாங்கும் வகையில் மின்வேலி அமைப்பது குறித்துச் சமூக வலைத்தளங்களில் பலரும் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலிஸார், சிறுமியை நள்ளிரவில் வரவழைத்த காதலன் சூரஜ் மற்றும் மின்வேலி அமைத்த வயல் உரிமையாளர் ஆகிய இருவரையும் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
அசாம் மாநிலம் உடல்புரி மாவட்டத்தைச் சேர்ந்த அபிஜித் கிண்டோ என்பவரும், குரியா என்ற பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். இதில் குரியா…
தாராபுரம் தொகுதிக்குட்பட்ட குண்டடம் பகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் ஒன்றிய செயலாளராகச் செயல்பட்டு வந்த பன்னீர்செல்வம், அக்கட்சியிலிருந்து விலகித் தனது…
தாய்லாந்து நாட்டின் பாங்காக் நகரில் உள்ள துங் சோங் ஹோங் பகுதியில் வீட்டின் வெளியே சிமெண்டால் கட்டப்பட்ட மீன் தொட்டியில்…
காஞ்சிபுரம் அருகே உள்ள வண்ணான்தாங்கல் பகுதியைச் சேர்ந்த விறகு வியாபாரி ஆறுமுகம் என்பவரிடம், சிங்காடிவாக்கம் இருளர் குடியிருப்பைச் சேர்ந்த ஆனந்தன்…
கேரள மாநிலத்தில் செல்போன் மற்றும் இணையதளங்கள் வாயிலாக இயங்கி வந்த ஆபாச வீடியோ விற்பனை சாம்ராஜ்ஜியத்தை அதிரடியாகக் கண்டுபிடித்து போலிஸார்…
ஹரியானா மாநிலம் சோனிபட்டில் உள்ள முர்தால் சாலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வேளையில் பயங்கர வீதி விபத்து ஒன்று அரங்கேறியுள்ளது. 25…