ஹரியானா மாநிலம் சோனிபட்டில் உள்ள முர்தால் சாலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வேளையில் பயங்கர வீதி விபத்து ஒன்று அரங்கேறியுள்ளது. 25 வயதான வாலிபர் ஒருவர் தனது இரு நண்பர்களுடன் ஒரே மோட்டார் சைக்கிளில் அதிவேகமாகச் சென்று கொண்டிருந்துள்ளார்.
அப்போது எதிர்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள், சாலையின் நடுவே இருந்த தடுப்புச் சுவரில் பலமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில் பைக்கில் பயணித்த மூன்று இளைஞர்களும் தூக்கி வீசப்பட்டுச் சாலையில் பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் சரிந்தனர்.
இச்சம்பவத்தில் பைக்கை ஓட்டி வந்த 25 வயது வாலிபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயமடைந்த மற்ற இரு நண்பர்களும் மீட்கப்பட்டு தீவிர சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆபத்தான முறையில் டிரிபிள் ரைடிங் சென்றதும் அதிகவேகமுமே இந்தச் சோகத்திற்கு காரணம் எனச் சந்தேகிக்கப்படும் நிலையில், போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அசாம் மாநிலம் உடல்புரி மாவட்டத்தைச் சேர்ந்த அபிஜித் கிண்டோ என்பவரும், குரியா என்ற பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். இதில் குரியா…
தாராபுரம் தொகுதிக்குட்பட்ட குண்டடம் பகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் ஒன்றிய செயலாளராகச் செயல்பட்டு வந்த பன்னீர்செல்வம், அக்கட்சியிலிருந்து விலகித் தனது…
தாய்லாந்து நாட்டின் பாங்காக் நகரில் உள்ள துங் சோங் ஹோங் பகுதியில் வீட்டின் வெளியே சிமெண்டால் கட்டப்பட்ட மீன் தொட்டியில்…
காஞ்சிபுரம் அருகே உள்ள வண்ணான்தாங்கல் பகுதியைச் சேர்ந்த விறகு வியாபாரி ஆறுமுகம் என்பவரிடம், சிங்காடிவாக்கம் இருளர் குடியிருப்பைச் சேர்ந்த ஆனந்தன்…
கேரள மாநிலத்தில் செல்போன் மற்றும் இணையதளங்கள் வாயிலாக இயங்கி வந்த ஆபாச வீடியோ விற்பனை சாம்ராஜ்ஜியத்தை அதிரடியாகக் கண்டுபிடித்து போலிஸார்…
உத்தரப்பிரதேச மாநிலம் ஆசம்கார் மாவட்டம் பூல்பூர் போலிஸ் எல்லைக்குட்பட்ட கான் ஜகான்பூர் பகுதியில் 17 வயதான சிறுமி ஒருவருக்குச் சூரஜ்…