சேலம் மாவட்டம் ஓமலூர் – சங்ககிரி சாலையில் காரில் பிளை ஆஸ் பிரிக்ஸ் அதிபர் பூபதி ரத்த வெள்ளத்தில் கொல்லப்பட்டுக் கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தனது கணவரை வழிப்பறி கும்பல் மறித்து வெட்டிக் கொன்றுவிட்டு 12 பவுன் நகையைத் கொள்ளையடித்துச் சென்றுவிட்டதாக அவரது மனைவி சுஜிதாஸ்ரீ கதறி அழுதார். இருப்பினும், பூபதியின் குடும்பத்தினர் எழுப்பிய சந்தேகத்தின் அடிப்படையில் ஓமலூர் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், சொத்துத் தகராறு, குடும்பப் பிரச்சனை மற்றும் கள்ளத்தொடர்பு காரணமாக சுஜிதாஸ்ரீ தனது கணவரைக் தீர்த்துக்கட்ட சதித்திட்டம் தீட்டியது அம்பலமானது. நள்ளிரவில் தனது கள்ளக்காதலன் சந்தோஷ்ராஜ் மற்றும் 13 வயது மகனுடன் சேர்ந்து சுஜிதாஸ்ரீ வீட்டிலேயே பூபதியை வெட்டிக் கொன்றது தெரியவந்துள்ளது. அதன்பிறகு, சடலத்தை காரில் ஏற்றிச் சென்று, வழிப்பறி கும்பல் வழிமறித்துக் கொலை செய்ததாக அவர்கள் சினிமா பாணியில் நாடகமாடியதும் விசாரணையில் வெளிச்சத்திற்கு வந்தது.
இதனைத் தொடர்ந்து, கொலைச் செயலில் ஈடுபட்ட சுஜிதாஸ்ரீ, சந்தோஷ்ராஜ் மற்றும் 13 வயது சிறுவன் ஆகிய மூன்று பேரையும் காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்தனர். சுஜிதாஸ்ரீ சேலம் மத்திய மகளிர் சிறையிலும், சந்தோஷ்ராஜ் மத்திய சிறையிலும் அடைக்கப்பட்ட நிலையில், அந்த சிறுவன் சேர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டான். சொந்த மனைவியே கள்ளக்காதலனுடன் சேர்ந்து அரங்கேற்றிய இந்த கோரச் சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை காந்திவலி கிழக்கு லோகண்ட்வாலா மகாடா வளாகத்தில் கடந்த ஆகஸ்ட் 31-ஆம் தேதி காலை 11:33 மணியளவில் விகாஸ் குட்டே…
மும்பையின் மலாத் மேற்கு பகுதியில் உள்ள மாம்லதார் வாடி சந்திப்பு பகுதியில், கடந்த ஆகஸ்ட் 30 அன்று அதிவேகமாக வந்த…
ஈத்கா மோர் பகுதியில் செப்டம்பர் 2ஆம் தேதி அதிகாலையில், ஈரமான சாலையில் மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்த…
ஹோட்டல் ஒன்றில் அறை எடுத்துச் சுமார் 2 முதல் 4 நாட்கள் வரை தங்கியிருந்த வாடிக்கையாளர் ஒருவர், காலி செய்துவிட்டு…
உத்தரகாண்ட் மாநிலம் ஜஸ்பூர் பகுதியில் சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தபோது மனதை உலுக்கும் கொடூரச் சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. 9 வயதுச்…
பிரயாக்ராஜில் உள்ள சாஸ்திரி பாலத்தில் நிகழ்ந்த இந்தச் சம்பவம் மிகுந்த மன வேதனையையும் சிந்தனையையும் தருகிறது. எதிர்காலம் குறித்த கனவுகளுடன்…