மும்பையின் மலாத் மேற்கு பகுதியில் உள்ள மாம்லதார் வாடி சந்திப்பு பகுதியில், கடந்த ஆகஸ்ட் 30 அன்று அதிவேகமாக வந்த கார் ஒன்று ஆக்டிவா ஸ்கூட்டர் மீது மோதிய விபத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. இந்த கோர விபத்தில் பெண் வழக்கறிஞர் ஒருவர் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்ததுடன், அவரது கணவரும் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பியோட முயன்ற கார் ஓட்டுநரை காவல்துறையினர் உடனடியாக கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். ஆனால், நீதிமன்றம் அந்த ஓட்டுநருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது இச்சம்பவத்தில் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
https://twitter.com/IndiaToday/status/2095418629710102537/video/1
போக்குவரத்து விதிகளை மீறி அதிவேகமாக வாகனம் இயக்கி ஒருவரின் உயிரைப் பறித்த குற்றவாளிக்கு எளிதில் ஜாமீன் கிடைத்திருப்பது குறித்து பல தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் எழுந்து வருகின்றன. மேலும், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும், இதுபோன்ற விபத்துகளைத் தவிர்க்க கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் மைலார்தேவ்பள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அலீநகர் பகுதியில் செப்டம்பர் 2 ஆம் தேதி புதன்கிழமை நள்ளிரவில்…
ஒரு புதிதாகத் திருமணமான தம்பதி ஒன்றாகப் பயணம் செய்தபோது, மனைவியின் கடந்தகால இரகசியத் தொடர்பு தற்செயலாகத் தெரியவந்தது. கணவன் எவ்வளவோ…
உத்தரப் பிரதேசத்தில் கிராமப் பஞ்சாயத்து தலைவர் ஒருவர், தன் கிராமத்தைச் சேர்ந்த பெண் உறுப்பினரிடம் அரசு சம்பந்தப்பட்ட முக்கியப் பணி…
மத்தியப் பிரதேச மாநிலம் அசோகநகர் மாவட்டத்தில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றும் பூஜா ரகுவன்ஷி, கடுமையான முதுகுத் தண்டுவடம் பாதிப்பு மற்றும்…
சமூக வலைத்தளங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராமில் நெஞ்சைப் பதறவைக்கும் வீடியோ ஒன்று தற்போது மிக வேகமாகப் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி…
குடும்பத்தினருடன் காது சியாம்ஜி கோயிலில் தரிசனம் முடித்துவிட்டு மெயின்புரி கிஷ்ணி பகுதிக்குத் திரும்பிய பக்தர்கள் ஹரியானா மாநிலம் பால்வால் பகுதியில்…