“காரில் அலறிய பாட்டு.. உள்ளே நடந்த கொடூரம்! கள்ளக்காதலனுடன் சேர்ந்து மனைவி வெறி செயல்… கோவையில் நெஞ்சை உலுக்கும் சம்பவம்…!!

Spread the love

கோவை மாவட்டம் சூலூர் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் வாலிபர் ஒருவர் கடத்திக் கொலை செய்யப்பட்டு, வாய்க்காலில் வீசப்பட்ட கொடூரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எஸ்.குமாரபாளையம் கிராமத்தைச் சேர்ந்த சதீஷ்குமார் (35), தனது மனைவி சரண்யாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். சரண்யா தனது தாய் வீட்டில் வசித்து வந்த நிலையில், அவருக்கும் அவரது உறவினரான முருகன் என்பவருக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரம் சதீஷ்குமாருக்குத் தெரியவந்ததால் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

சம்பவத்தன்று, தனது குழந்தைகளைப் பார்ப்பதற்காக சரண்யாவின் ஊருக்குச் சென்ற சதீஷ்குமார், அங்கிருந்து திரும்பும்போது ஒருவரிடம் லிப்ட் கேட்டு இருசக்கர வாகனத்தில் பயணித்துள்ளார். அப்போது கார் ஒன்றில் வந்த முருகன் மற்றும் அவரது நண்பர்களான கோபிநாத், சிவலிங்கம் உள்ளிட்ட நால்வர் கும்பல், சதீஷ்குமாரை வழிமறித்து வலுக்கட்டாயமாகத் தூக்கிச் சென்றுள்ளனர். காரில் அதிக சத்தத்துடன் பாடல்களை ஒலிக்கச் செய்து, மற்றவர்களுக்குச் சத்தம் கேட்காதவாறு சதீஷ்குமாரைக் கொடூரமாகத் தாக்கியுள்ளனர்.

மது போதையில் இருந்த அந்தக் கும்பல், பிஏபி வாய்க்கால் கரைக்குச் சென்று மீண்டும் மது அருந்தியுள்ளனர். அப்போது சதீஷ்குமாரைப் பீர் பாட்டிலால் தலையில் கடுமையாகத் தாக்கி, உயிருடன் வாய்க்காலில் தள்ளிக் கொலை செய்துள்ளனர். இது குறித்து சுல்தான்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து தேடி வந்த நிலையில், திருப்பூர் மாவட்டம் நாதேகவுண்டன்பாளையம் அருகே வாய்க்காலில் ஒரு ஆண் சடலம் மிதப்பதாகத் தகவல் கிடைத்தது. தீயணைப்புத் துறையினர் உதவியுடன் மீட்கப்பட்ட அந்த உடல் சதீஷ்குமாருடையது என்பதை அவரது தந்தை கண்ணீர் மல்க உறுதி செய்தார்./

இந்தத் திட்டமிட்ட கொலை தொடர்பாகத் தலைமறைவாக இருந்த முருகன் மற்றும் அவரது நண்பர்கள் மூவரையும் போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர். விசாரணையில், கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் சதீஷ்குமாரைத் தீர்த்துக்கட்ட சரண்யா தகவல் கொடுத்ததும், அதன் அடிப்படையில் முருகன் இந்தக் கொலையை அரங்கேற்றியதும் தெரியவந்தது. கைதானவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். திருமணத்தை மீறிய உறவால் இரு குழந்தைகளின் தந்தை படுகொலை செய்யப்பட்ட சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Muthu Mani

Recent Posts

Real Life Money Heist!… 2 நிமிடத்தில் மாயமான கார்… உள்ளே இருந்த பணம் என்னாச்சு?… CCTV-க்கே தண்ணி காட்டிய பலே திருடர்கள்… நடுங்க வைக்கும் திருட்டு…!!

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில், சினிமா பாணியிலான துணிகரக் கொள்ளைச் சம்பவம் ஒன்று அப்பகுதி மக்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. வீட்டின்…

11 minutes ago

16 ஆண்டு அரசியல் கொள்கைக்கு திடீர் செக்?…. சீமானின் ‘பொது வேட்பாளர்’ மாஸ்டர் பிளான்…. இடைத்தேர்தலில் காத்திருக்கும் டுவிஸ்ட்…!

கடந்த 16 ஆண்டுகளாக திராவிடக் கட்சிகளான திமுக மற்றும் அதிமுகவை கொள்கை ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் கடுமையாக விமர்சித்து வந்த…

13 minutes ago

“கோடிக் கணக்கில் கொள்ளையா?…. பெரியார் அறிவுலகமா இல்லை ‘ஊழல் உலகமா”….. உலகமே கைகொட்டிச் சிரிக்கும் பகீர் ஊழல்…. கொதித்தெழுந்த முதல்வர் விஜய்….!

கோவையில் ரூ.300 கோடியில் அமைக்கப்பட்டு கடந்த மாதம் திறக்கப்பட்ட 'பெரியார் அறிவுலகம்' நூலகத்திற்கான புத்தகக் கொள்முதலில் மாபெரும் ஊழல் நடந்துள்ளதாக…

18 minutes ago

பைக் கேட்டு அடம் பிடித்த மகன்… பறிபோன 20 வயது இளைஞனின் உயிர்…. மொட்டை மாடியில் நடந்தது என்ன?… நடுங்க வைக்கும் உண்மை…!!

கம்மம் நகரில் தனியார் கல்லூரி ஒன்றில் மூன்றாம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வந்த ஜஸ்வந்த் தேஜா என்ற மாணவர், தனது…

22 minutes ago