“கணவனின் நண்பனுடன் உல்லாசத்தில் இருந்த மனைவி”… இருவரின் நெற்றியை துளைத்த துப்பாக்கி குண்டு…. காசியாபாத்தில் கொடூர சம்பவம்…!!

Spread the love

உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத் பகுதியில், கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த மனைவியையும் தனது நண்பனையும் கணவனே 7 வயது மகன் கண்முன்னே துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. ட்ரோனிக்கா பகுதியைச் சேர்ந்த ரஷீத் (38) என்பவருக்கும், ஷப்னம் (36) என்பவருக்கும் திருமணமாகி 7 குழந்தைகள் உள்ளனர். இவர்களது மூத்த மகனுக்கு கடந்த ஆறு மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடந்து முடிந்துள்ளது. ரஷீத்துடன் வேலை பார்த்து வந்த ஃபாஹீம் என்பவர், ரஷீத்தின் வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்றபோது ஷப்னத்துடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறிய நிலையில், ரஷீத் இல்லாத நேரங்களில் இருவரும் தனிமையில் இருந்து வந்துள்ளனர். ஒருகட்டத்தில் தனது நண்பனுக்கும் மனைவிக்கும் இடையிலான தகாத உறவை அறிந்த ரஷீத், அவர்களைக் கடுமையாக எச்சரித்துள்ளார். இருப்பினும், இருவரும் தங்கள் உறவைக் கைவிடாமல், திருமணம் செய்துகொள்ளவும் முடிவு செய்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த ரஷீத், இருவரையும் தீர்த்துக்கட்டத் திட்டம் தீட்டினார். அதன்படி, கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஃபாஹீமை தனது வீட்டிற்கு வரவழைத்துள்ளார்.

வீட்டிற்கு வந்த ஃபாஹீம் மற்றும் மனைவி ஷப்னம் ஆகிய இருவரையும், தனது 7 வயது சிறுவன் பார்த்துக் கொண்டிருக்கும்போதே ரஷீத் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்தார். பின்னர் தனது மகனிடம் “இனிமேல் எல்லாம் சரியாகிவிடும்” எனக் கூறிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார். துப்பாக்கிச் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், ரத்த வெள்ளத்தில் கிடந்த இருவரையும் மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் அவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த காசியாபாத் போலீஸார், தலைமறைவாக இருந்த ரஷீத்தைக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Muthu Mani

Recent Posts

மாலை 3 மணிக்கு அதிரப்போகும் தமிழக அரசியல்… விஜய்யின் ‘மாஸ்டர் பிளான்’ வெளியாகிறது… 3 PM-க்கு லைவ் மிஸ் பண்ணாதீங்க….!

தமிழக வெற்றிக் கழகத்தின் முழுமையான தேர்தல் அறிக்கை இன்று மாலை 3 மணி அளவில் வெளியிடப்படும் என்று அக்கட்சியின் தலைவர்…

34 seconds ago

29 வயதே ஆன ரயில்வே ஊழியர்.. பக்கோடா கடை வாசலில் துடிதுடித்து மரணம்… நின்று கொண்டிருந்த போதே சரிந்து விழுந்த டிரைவர்… திடீர் மரணத்திற்கு இதுதான் காரணமா…?

இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…

10 மணத்தியாலங்கள் ago

அப்பாவி சிறுவனைத் தூக்கி வீசிய கொடூரன்… மின்தூக்கிக்குள் அரங்கேறிய அத்துமீறல்… புனேயில் வைரலாகும் பகீர் வீடியோ…!!!

புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…

11 மணத்தியாலங்கள் ago

தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய அர்ஜுன் தாஸ்… கார் டிக்கியில் கட்டுக்கட்டாக பணம்… 2026 தேர்தல் களம் சூடுபிடிக்குது…!!!

2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…

11 மணத்தியாலங்கள் ago

ஜிம் மாஸ்டர் தற்கொலை… அந்த 42 வயது பெண் செய்த பகீர் காரியம்… காதலா? சொத்துக்காக விரித்த வலையா?… கடைசியில் நடந்த விபரீதம்…!!!

பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…

11 மணத்தியாலங்கள் ago

“தாத்தா இது உங்களுக்காக தான்” விளையாட்டாக சொன்ன அந்த ஒரு பொய்… ஏம்மா என்னை ஏமாத்துற..? முதியவரின் கண்ணில் வழிந்த கண்ணீர்… அடுத்த நொடியே இளம்பெண் செய்த நெகிழ்ச்சி செயல்…!!

ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…

11 மணத்தியாலங்கள் ago