“தோசை கல்லால் கணவனை அடித்துக் கொன்ற மனைவி”… பின்னணியில் இருக்கும் அதிர்ச்சி காரணம்…. நள்ளிரவில் அலறிய திண்டுக்கல்….!

Spread the love

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே குடும்பத் தகராறு காரணமாக, கணவனை மனைவியே தோசைக்கல்லால் அடித்துக் கொலை செய்த கொடூர சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் தாலுகா, வடமதுரை அருகே உள்ள உடையாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சுகராஜ் (வயது 49). இவர் அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் நூற்பாலையில் காவலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு முருகேஸ்வரி என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.

கடந்த சில தினங்களாகவே சுகராஜுக்கும் அவருடைய மனைவி முருகேஸ்வரிக்கும் இடையே குடும்பப் பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், சம்பவத்தன்று வீட்டிலிருந்த இருவருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் ஒரு கட்டத்திற்கு மேல் முற்றவே, இருவருக்கும் இடையே கடுமையான கைகலப்பாக மாறியுள்ளது. இதனால் ஆத்திரத்தின் உச்சக்கட்டத்திற்குச் சென்ற முருகேஸ்வரி, வீட்டில் இருந்த கனமான தோசைக்கல்லை எடுத்து சுகராஜின் தலையில் பலமாகத் தாக்கியுள்ளார்.

முருகேஸ்வரி தாக்கிய அதிர்ச்சியில், பலத்த காயமடைந்த சுகராஜ் நிலைகுலைந்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். கணவன் இறந்ததை உணர்ந்த முருகேஸ்வரி, உடனடியாக வடமதுரை காவல் நிலையத்திற்கு நேராகச் சென்று, நடந்த விபரங்களைக் கூறி போலீசாரிடம் சரணடைந்தார். கொலை குறித்து தகவல் அறிந்த வேடசந்தூர் டி.எஸ்.பி பவித்ரா தலைமையிலான போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ரத்த வெள்ளத்தில் கிடந்த சுகராஜின் உடலைக் கைப்பற்றினர்.

பின்னர், சுகராஜின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும், கொலைக்கு பயன்படுத்தப்பட்ட தோசைக்கல்லைப் பறிமுதல் செய்த போலீசார், சரணடைந்த முருகேஸ்வரியைக் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குடும்பத் தகராறில் மனைவியே கணவனைக் கொலை செய்து காவல் நிலையத்தில் சரணடைந்த இந்த கொடூரச் சம்பவம் உடையாம்பட்டி கிராம மக்களிடையே மிகுந்த சோகத்தையும், அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Nanthini

Recent Posts

BREAKING: அதிமுகவில் இருந்து கூண்டோடு நீக்கம்…. காலையிலேயே இபிஎஸ் பரபரப்பு உத்தரவு…!

விழுப்புரம் மாவட்ட அதிமுக தகவல் தொழில்நுட்ப (IT) பிரிவில் அதிரடி மாற்றங்களை மேற்கொண்டு அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி…

20 minutes ago

டாஸ்மாக் கடைகள் இனி அரசிடம் கிடையாதா?… கோட்டை வட்டாரத்தில் கசிந்த அந்த ‘ரகசிய’ திட்டம்…. விஜய் போட்ட புதிய மாஸ்டர் பிளான்…!

தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்ற சில நாட்களிலேயே, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறையில் அதிரடி மாற்றங்கள் அரங்கேறி வருகின்றன. முதலமைச்சர்…

23 minutes ago

“சந்தேகப் பேய் பிடித்த கணவன்… குழந்தைகள் கண் எதிரே எலக்ட்ரீசியன் செய்த பயங்கர சம்பவம்.. ரத்த வெள்ளத்தில் துடித்த மனைவி.. கேரளாவை உலுக்கிய கொடூரக் கொலை”..!!!

கேரள மாநிலம் திருவனந்தபுரம் வட்டியூர்காவு பகுதியைச் சேர்ந்த சுரேஷ்குமார் (46) என்ற எலக்ட்ரீசியனும், அவரது மனைவி ஹசீனா பீவியும் (36)…

26 minutes ago

தமிழகத்தில் அடுத்த அதிர்ச்சி…. 14 வயது சிறுமிக்கு மது ஊற்றி கொடுத்து…. கார் டிரைவர் செய்த உச்சக்கட்ட கொடூரம்….!

திருச்சியில் தோழி வீட்டுக்குச் சென்ற 14 வயது சிறுமிக்கு கார் ஓட்டுநர் ஒருவர் மது ஊற்றிக் கொடுத்து பாலியல் வன்கொடுமை…

27 minutes ago

திருச்சியில் பட்டப்பகலில் நடந்த பயங்கரம்… ஓடும் காரில் 17 வயது பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்… சாலையோரம் வீசப்பட்ட மாணவி.. தமிழகமே அதிர்ச்சி….!

திருச்சி மாநகரின் மையப்பகுதியில் பட்டப்பகலில் பள்ளி மாணவி ஒருவர் காரில் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட கொடூர சம்பவம், ஒட்டுமொத்த…

31 minutes ago

CM விஜய்யை இயக்கும் அந்த ‘நிழல்’ மனிதர்?… கோட்டை வட்டாரத்தை உலுக்கிய பகீர் ரகசியம்… அதிகாரிகளை அதிரவைக்கும் ‘ஒற்றை’ போன் கால்….!

தமிழக அரசியலில் தற்போதைய பேசுபொருளாக மாறியிருக்கும் முக்கிய விவகாரங்களை மையப்படுத்தி ஒரு தனியார் நாளிதழ் வெளியிட்டிருக்கும் செய்தி பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

35 minutes ago