தமிழகத்தில் அடுத்த அதிர்ச்சி…. 14 வயது சிறுமிக்கு மது ஊற்றி கொடுத்து…. கார் டிரைவர் செய்த உச்சக்கட்ட கொடூரம்….!

Spread the love

திருச்சியில் தோழி வீட்டுக்குச் சென்ற 14 வயது சிறுமிக்கு கார் ஓட்டுநர் ஒருவர் மது ஊற்றிக் கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ள அதிர்ச்சிச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி கீரைக்கடை பகுதியைச் சேர்ந்த சிறுமி ஒருவர், தனது தோழியின் வீட்டுக்குச் சென்றுள்ளார். அப்போது, தோழியின் தாயார் வெளியூர் செல்வதற்காக வாடகை கார் ஒன்றை வரவழைத்திருந்தார். அந்த காரை ஓட்டி வந்த மாரிசெல்வன் (43) என்ற ஓட்டுநர், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தைப் பயன்படுத்தி அச்சிறுமியிடம் நயமாகப் பேசி, தனியாக அழைத்துச் சென்றுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, அந்தச் சிறுமி கீரைக்கடை பகுதியில் மது போதையில் சுயநினைவின்றி ஆபத்தான நிலையில் கிடந்துள்ளார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், சிறுமியிடம் விசாரித்தபோது கார் ஓட்டுநரின் கொடூரச் செயல் வெளிச்சத்திற்கு வந்தது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், குற்றம் சாட்டப்பட்ட கார் ஓட்டுநர் மாரிசெல்வனைப் பிடித்து சரமாரியாகத் தாக்கி, உடனடியாக காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், மாரிசெல்வன் மீது போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாதிக்கப்பட்ட சிறுமி தற்பொழுது சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள மகாத்மா காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இக்கொடூரச் சம்பவத்தை அறிந்து மருத்துவமனையில் குவிந்த சிறுமியின் உறவினர்களும் பொதுமக்களும், குற்றவாளிக்குக் கடுமையான தண்டனை வழங்கக் கோரி திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இச்சம்பவம் திருச்சி பகுதியில் பெரும் பதற்றத்தையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Nanthini

Recent Posts

அதிர்ச்சி..! டாஸ்மாக் கடைகளை தனியாருக்கு தாரை வார்க்கிறதா அரசு..? தலைமைச் செயலக ரகசிய திட்டத்தால் 25,000 ஊழியர்கள் பரிதவிப்பு..!!

தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்றதைத் தொடர்ந்து பள்ளிகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு அருகில் இருந்த 717 டாஸ்மாக்…

4 minutes ago

மின்வாரிய தலைமையகத்தில் நள்ளிரவு சதி..? 10 ஹார்டு டிஸ்க்குகள் மாயம்.. சிசிடிவி-யை அலசும் போலீஸ்…!

சென்னை அண்ணாசாலையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில், நிலக்கரி கொள்முதல் தொடர்பான முக்கிய ரகசிய தகவல்கள் அடங்கிய…

9 minutes ago

“என் கஷ்டமெல்லாம் தீர்ந்துரும்” நிலத்தை வித்து மகளை டாக்டருக்கு படிக்க வச்ச தந்தை… 25 வயதில் விளையாடிய விதி… கண்ணீர் விட்டு கதறும் தந்தை..!!

தங்கள் பிள்ளைகளின் எதிர்காலக் கனவுகளுக்காகத் தங்களிடம் உள்ள அனைத்தையும் தியாகம் செய்யும் பெற்றோருக்கு, விதி சில நேரங்களில் மீளாத் துயரத்தையே…

11 minutes ago

ஒருபுறம் கொடூர தாக்குதல்… மறுபுறம் அமெரிக்காவுடன் ரகசிய பேச்சுவார்த்தை.. ஈரானில் நடப்பது என்ன..?

ஈரான் நாட்டில் ஏற்பட்டுள்ள பெரும் அரசியல் மற்றும் ராணுவ மாற்றங்களுக்கு மத்தியில், அந்நாட்டின் மிக முக்கியமான முடிவுகளை எடுக்கும் அதிகாரம்…

19 minutes ago

“தேர்தல் முடிஞ்சி 1 மாசம் ஆச்சி… இன்னும் வந்து எட்டி கூட பாக்கல..” சொன்ன வாக்குறுதியை காப்பாத்தலையே.. CM விஜய்யை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்..!

தேர்தல் பரப்புரையின் போது, வெற்றி பெற்றால் தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன் என்று தமிழக முதல்வர் விஜய் வாக்குறுதி அளித்திருந்தார்.…

25 minutes ago

திருச்சியில் கொடூரம்..! 14 வயது சிறுமிக்கு மது ஊற்றிக் கொடுத்து… பாலியல் வன்கொடுமை செய்த ஓட்டுநர்…!!

திருச்சியில் தோழியைப் பார்ப்பதற்காகச் சென்ற 14 வயதுச் சிறுமி ஒருவருக்கு, ஓட்டுநர் ஒருவர் மது ஊற்றிக் கொடுத்துப் பாலியல் தொல்லை…

33 minutes ago