இன்று ஒரு படத்தில் நடித்து ஹிட் ஆனாலே அந்த ஸ்டார் இந்த ஸ்டார் என்று பெயருக்கு முன்னால் பட்டங்கள் போட்டுக் கொள்ளும் நடிகர்களுக்கு மத்தியில் வித்தியாசமான ஒரு பட்டப் பெயருடன் நடித்தவர் தான் சித்ரா. இவரை வெறும் சித்ரா என்று சொன்னால் தெரியாது ‘நல்லெண்ணய்’ சித்ரா.
ஒருவிரல் கிருஷ்ணாராவ், ஓமக்குச்சி நரசிம்மன், காக்கா ராதாகிருஷ்ணன் என வித்தியாசமான பெயர்களைக் கொண்ட நடிகர்களுக்கு மத்தியில் நல்லெண்ணய் சித்ராவும் இடம்பிடித்துள்ளார். கேரளாவைச் சேர்ந்த சித்ரா மலையாளப் படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின் சில 18+ படங்களிலும் நடித்தார். பின்னர் அதிலிருந்து விடுபட்டு தமிழில் அபூர்வ ராகங்கள் படத்தில் ஒரு கேரக்டரில் நடிக்க தமிழ் சினிமா அவரை வாரிக் கொண்டது.

#image_title
அதன்பின் நடித்த சில படங்கள் இவரை அடையாளபடுத்தா விட்டாலும் சின்ன பூவே மெல்ல பேசு என்ற திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்தது. அதன் பிறகு கே.பாலச்சந்தர் இயக்கத்தில் உருவான மனதில் உறுதி வேண்டும் என்ற திரைப்படத்தில் சுகாசினியின் கணவருக்கு இரண்டாவது மனைவியாக நடித்திருப்பார்.
இவ்வாறு சினிமாவில் பிஸியான சித்ரா இடையில் நல்லெண்ணெய் விளம்பரம் ஒன்றில் நடித்தார்.அந்த விளம்பரம் மிகப்பெரிய அளவில் மக்களின் கவனத்தை ஈர்த்ததால் அவருக்கு “நல்லெண்ணெய்” சித்ரா என்ற பெயர் ஏற்பட்டது. இதனை அடுத்து சித்ராவுக்கு அடுத்தடுத்து படங்கள் வெற்றி படங்களாக அமைந்தது.
குறிப்பாக மனோபாலா இயக்கத்தில் ரஜினிகாந்துடன் இவர் நடித்த ’ஊர்க்காவலன்’ என்ற திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த படத்தில் இவரது கதாபாத்திரம் தான் படத்தின் மையப்புள்ளி என்பது குறிப்பிடத்தக்கது.

#image_title
அதே போல் பிரபு நடித்த என் தங்கச்சி படிச்சவ, ராம்கி நடித்த வெள்ளைய தேவன் ஆகிய படங்களில் நடித்த சித்ரா அதன்பின் சேரன் பாண்டியன் என்ற திரைப்படத்தில் சரத்குமாரின் தங்கையாக அற்புதமாக நடித்திருப்பார். இப்படம் இவருக்கு பெரிய வரவேற்பைக் கொடுத்தது.
திருமணத்திற்குப் பின் குடும்பத் தலைவியாக வாழ்க்கையை நடத்தியவர் சில தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்தார். எதிர்பாரா விதமாக 2021-ல் மாரடைப்பால் உயிரிழந்தார் சித்ரா.

#image_title