திருப்பதிக்கு திடீர் விசிட் அடித்த நடிகர் தனுஷ்… குவிந்த ரசிகர்கள் கூட்டத்தில் ஏற்பட்ட தள்ளுமுள்ளு… இணையத்தில் வைரலாகும் வீடியோ…

By Divya

Published on:

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் தனுஷ். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி மற்றும் ஆங்கிலம் என பல மொழிகளில் நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான  ‘கேப்டன் மில்லர்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து தற்போது தனது 50 ஆவது பட பணிகளை கவனித்து வருகிறார் தனுஷ்.

   

இத்திரைப்படத்தில் எஸ் ஜே சூர்யா, சந்தீப் கிஷான், ஜெயராம் காளிதாஸ்,  நித்யா மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இதோடு மட்டுமின்றி  ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ என்ற தலைப்பில் ஒரு படம் இயக்கி வருகிறார். மேலும் அவர் ஹீரோவாக சேகர் கம்முலா இயக்கத்தில் ஒரு படம், மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு படம், அருண் மாதேஷ்வரன் இயக்கத்தில் ஒரு படம், இந்தியில் ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் ஒரு படம் என பல திரைப்படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார்.

இந்த நிலையில் சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாகும் படம் தனுஷின் 51வது படமாக உருவாகி வருகிறது. இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாக உள்ளதும் குறிப்பிடத்தக்கது. நடிகர் தனுஷுக்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனாவும்,  தெலுங்கு முன்னணி நடிகர் நாக அர்ஜுனா இத்திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

சமீபத்தில் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு  திருப்பதி அலிபிரி பகுதி மலையடிவாரத்தில் நடைபெற்றது. ஆனால் படப்பிடிப்பால் பக்தர்களுக்கு சிரமம் ஏற்படுவதாக கூறி, ஷூட்டிங் அங்கு ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் திருப்பதியில் இருக்கும் நடிகர் தனுஷ், நேற்று திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்தார். அங்கு அவரைக்காண உடனே நூற்றுக்கணக்கான ரசிகர்கள் சூழ்ந்ததால் திடீரென தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ரசிகர்கள் சிலர் நடிகர் தனுஷுடன் செல்ஃபியும் எடுத்துக்கொண்டனர். தற்பொழுது இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ…