நடுரோட்டில் ‘பிச்சைக்காரன்’ கெட்டப்பில் தனுஷ்.. இணையத்தில் வெளியாகி வைரலாகும் வீடியோ.. ஷாக்கான ரசிகர்கள்..

By Divya

Updated on:

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் தனுஷ்.  சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான  ‘கேப்டன் மில்லர்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து தற்போது தனது 50 ஆவது பட பணிகளை கவனித்து வருகிறார் தனுஷ். இத்திரைப்படத்தில் எஸ் ஜே சூர்யா, சந்தீப் கிஷான், ஜெயராம் காளிதாஸ்,  நித்யா மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.  இதோடு மட்டுமின்றி  ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ என்ற தலைப்பில் ஒரு படம் இயக்கி வருகிறார்.

   

மேலும் இவர் தற்பொழுது பல்வேறு திரைப்படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார். அதன்படி இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாகும் தனுஷின் 51வது திரைப்படத்தை  ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் தயாரிக்க உள்ளனர்.  இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் உருவாக உள்ளது.  2021 ஆம் ஆண்டு இறுதியில் இப்படத்தின் அறிவிப்பு வெளியானது. இதைத்தொடர்ந்து 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பூஜை நடைபெற்றது. இத்திரைப்படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா கமிட்டாகியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் தெலுங்கு முன்னணி நடிகர் நாகர்ஜுனா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். இந்நிலையில் திருப்பதி அலிபிரி பகுதியில் நேற்று மலையடிவாரத்தில் படப்பிடிப்பு  நடைபெற்றது. அந்த வழியாக வரும் பக்தர்களுக்கு மாற்று பாதை ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் அந்த பாதை குறுகிய பாதை என்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் சிரமப்பட்டனர். இதையடுத்து அங்கு படப்பிடிப்பை தொடர்வதற்கு அப்பகுதி மக்கள் கண்டனம் தெரிவித்ததை தொடர்ந்து, படப்பிடிப்பிற்கு தடை விதிக்கக்கோரி  திருப்பதி கிழக்கு காவல் நிலையத்தில் புகார்அளிக்கப்பட்டதால் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது.

தற்பொழுது நடிகர் தனுஷ் D51 திரைப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதில் பார்ப்பதற்கு அவர் அழுக்கு சட்டை, பரட்டை தலை என பார்ப்பதற்கு பிச்சைக்காரன் போல தோற்றமளிக்கிறார். இதனை பார்த்த ரசிகர்கள் ‘இதுதான் D51 திரைப்படத்தில் நடிகர் தனுஷின் கெட்டப்பா..?’ என கூறி வைரலாக்கி வருகின்றனர். இதோ அந்த வீடியோ…