டிசம்பர் 13 அன்று கொல்கத்தாவின் சால்ட் லேக் மைதானத்தில் அர்ஜென்டினா கால்பந்து நட்சத்திரம் லியோனல் மெஸ்ஸி பங்கேற்ற நிகழ்ச்சி மோசமாக நிர்வகிக்கப்பட்டதால் ஏற்பட்ட வன்முறை மற்றும் குழப்பத்திற்கு தார்மீகப் பொறுப்பேற்று மேற்கு வங்க விளையாட்டுத்துறை அமைச்சர் அரூப் பிஸ்வாஸ் ராஜினாமா செய்துள்ளார்.
மெஸ்ஸியின் வருகையின் போது மைதானத்தில் ரசிகர்கள் கட்டுக்கடங்காமல் நடந்துகொண்டனர், பொதுச் சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டன, மேலும் பல ரசிகர்கள் அதிக விலை கொடுத்து டிக்கெட் வாங்கியிருந்தும் மெஸ்ஸியை சரியாகப் பார்க்க முடியாமல் ஏமாற்றமடைந்தனர். இது பெரும் விமர்சனங்களை ஏற்படுத்தியது.
இந்தச் சம்பவம் குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த முதல்வர் மம்தா பானர்ஜி உத்தரவிட்டிருந்தார். விசாரணை நியாயமாக நடைபெறுவதற்காக தனது பதவியை ராஜினாமா செய்வதாக அரூப் பிஸ்வாஸ் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
பேரப்பிள்ளைகள் கேட்டுக்கொண்டார்கள் என்பதற்காக அவர்களுக்கு ஓட்டுப் போட்டதாகச் சிலர் கூறும் அளவுக்குத் தற்போதைய ஜனநாயகம் வேடிக்கையான ஒன்றாக மாறிவிட்டது என்று…
ஆன்லைன் மூலம் மருந்துகள் விற்பனை செய்யப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அகில இந்திய மருந்து வணிகர்கள் சங்கம் சார்பில் நாளை (மே…
தஞ்சாவூர் கேஎஃப்சி (KFC) உணவகத்தில் ஏற்பட்ட ஏசி வெடிப்பு விபத்தில் உயிரிழந்த ரவி ராஜ் என்பவரின் குடும்பத்தினருக்குத் தமிழ்நாடு முதலமைச்சர்…
தமிழக முதலமைச்சராகப் விஜய் பதவி ஏற்றுள்ளதைத் தொடர்ந்து, அவர் தினமும் காலை 9.30 மணி முதல் 10 மணிக்குள் மிகச்…
உத்தரபிரதேச மாநிலத்தில் பாலியல் வன்கொடுமை மற்றும் போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த நபர் ஒருவர்,…
கனடாவைச் சேர்ந்த ஷானன் என்ற இளம் பெண், தினமும் பெட்ரோல் குடிக்கும் விசித்திரமான மற்றும் ஆபத்தான பழக்கத்திற்கு அடிமையாகி சமூக…