Breaking: மெஸ்ஸி நிகழ்ச்சியில் வன்முறை – மேற்கு வங்க விளையாட்டுத்துறை அமைச்சர் ராஜினாமா…!!

By Soundarya on மார்கழி 16, 2025

Spread the love

டிசம்பர் 13 அன்று கொல்கத்தாவின் சால்ட் லேக் மைதானத்தில் அர்ஜென்டினா கால்பந்து நட்சத்திரம் லியோனல் மெஸ்ஸி பங்கேற்ற நிகழ்ச்சி மோசமாக நிர்வகிக்கப்பட்டதால் ஏற்பட்ட வன்முறை மற்றும் குழப்பத்திற்கு தார்மீகப் பொறுப்பேற்று  மேற்கு வங்க விளையாட்டுத்துறை அமைச்சர் அரூப் பிஸ்வாஸ்  ராஜினாமா செய்துள்ளார்.

மெஸ்ஸியின் வருகையின் போது மைதானத்தில் ரசிகர்கள் கட்டுக்கடங்காமல் நடந்துகொண்டனர், பொதுச் சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டன, மேலும் பல ரசிகர்கள் அதிக விலை கொடுத்து டிக்கெட் வாங்கியிருந்தும் மெஸ்ஸியை சரியாகப் பார்க்க முடியாமல் ஏமாற்றமடைந்தனர். இது பெரும் விமர்சனங்களை ஏற்படுத்தியது.

   

இந்தச் சம்பவம் குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த முதல்வர் மம்தா பானர்ஜி உத்தரவிட்டிருந்தார். விசாரணை நியாயமாக நடைபெறுவதற்காக தனது பதவியை ராஜினாமா செய்வதாக அரூப் பிஸ்வாஸ் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.