Categories: சினிமா

‘வாய்தா’ பட நடிகையின் தற்கொலைக்கு காரணம் காதல் தோல்வியா…… டைரியில் சிக்கிய தகவல்கள்….. அதிர்ச்சியில் ரசிகர்கள்…..

Spread the love

சென்னை விருகம்பாக்கத்தில் தனது அப்பார்ட்மெண்டில் ‘வாய்தா’ பட நடிகையான நடிகை தீபா என்கிற ஜெசிக்கா பவுலின் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்பொழுது அவர் தனது நண்பர்களுக்கு அனுப்பியுள்ள எஸ் எம் எஸ் செய்தியும் தனது டைரியில் காதலன் குறித்தும் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

சமூக வலைத்தளங்களில் புகைப்படங்கள் ,வீடியோக்கள் வெளியிட்டு சினிமாவுக்குள் நுழைபவர்கள் ஏராளம். அப்படி வெள்ளி திரையில் நுழைந்தவர் தான் நடிகை தீபா என்கிற ஜெசிக்கா பவுலின். இவர் வாய்தா படத்தின் மூலம் ஹீரோயினாக திரையுலகில் அறிமுகமானார். இதை தொடர்ந்து துப்பறிவாளன் படத்தில் விஷால் உடன்  இணைந்து நடித்துள்ளார். ஜெசிகா ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர்.

சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள அவரது அப்பார்ட்மெண்டில் கடந்த இரண்டு ஆண்டுகளாக வசித்து வந்துள்ளார். தற்பொழுது நேற்று முன்தினம் மாலை அவரது நண்பரான பிரபாகரன் தீபாவை பார்க்க வீட்டிற்கு சென்றுள்ளார்.வீட்டின் கதவு உட்புறமாக பூட்டப்பட்டு இருந்தது. பலமுறை கதவைத் தட்டியும் கதவு திறக்கப்படவில்லை. எனவே சந்தேகம் அடைந்த பிரபாகரன் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார்.

விரைந்து வந்த கோயம்பேடு போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அப்பொழுது துப்பட்டாவால் மின்விசிறியில் நடிகை தீபா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதைப் பார்த்த அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். உடலை மீட்ட போலீசார் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். பெற்றோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது .பின்னர் அவரது சகோதரர் ரமேஷ் புகார் கொடுத்ததை  அடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

தீபாவின் வீட்டை சோதனையிட்டபோது அதில் அவர் தனது நண்பர்களுக்கு ‘இந்த உலகத்தில் எனக்கு வாழ பிடிக்கவில்லை. எனக்காக யாரும் இல்லை. எனவே நான் தற்கொலை செய்யப் போகிறேன்’ என்று எஸ்எம்எஸ் அனுப்பியுள்ளார். மேலும் அவரது டைரியில் ‘தான் ஒருவரை ஒரு வருடமாக காதலிப்பதாகவும், அவர் தனது காதலை ஏற்க மறுத்ததால் தற்கொலை முடிவு எடுத்ததாகவும்’ குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக கோயம்பேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இவரது காதலன் யார்? இவர் உண்மையிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது இது கொலையா? என்று விசாரித்து வருகின்றனர்.

Begam

Recent Posts

வெயிலின் உக்கிரம்.. “ஏசி-யே இல்லாத ஊருக்கு என்னாச்சு?.. வீட்டிற்குள்ளேயே உருகும் கிரேயான்கள்”… மிரண்டு போன மக்கள்… பெங்களூரு பெண் பகிர்ந்த ஷாக் வீடியோ..!!!

இதமான வானிலைக்குப் பெயர் பெற்ற பெங்களூரு நகரம், தற்போது சந்தித்து வரும் கடுமையான வெப்ப உயர்வு குறித்த விவாதங்களை ஒரு…

7 minutes ago

“வீட்டிலேயே ஒரு மினி குற்றாலம்!… இதைவிட ஒரு அழகான குளியலை நீங்கள் பார்த்திருக்க முடியாது!”… நெட்டிசன்களை நெகிழ வைத்த சிறுவன்… வைரலாகும் க்யூட் வீடியோ…!!

மகிழ்ச்சி என்பது விலை உயர்ந்த பொருட்களில் இல்லை, அது நம்மைச் சுற்றியுள்ள எளிய விஷயங்களிலும், நமது பார்வையிலும் தான் இருக்கிறது…

17 minutes ago

சாமியை கும்பிடறதா…? இயற்கையை அழிக்கிறதா….? நதிகளை மாசுபடுத்துபவர்களுக்கு முன்னாள் நீதிபதி வைத்த ‘செக்’…!!

மதச் சடங்கு என்ற பெயரில் நீர்நிலைகளை மாசுபடுத்துவது மற்றும் உணவுப் பொருட்களை வீணாக்குவது குறித்து உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி…

31 minutes ago

“ஒரே நாளில் 12,000 கோடி”… 8000 ரூபாய் கூப்பனில் ஒளிந்திருக்கும் அந்த கேம் சேஞ்சர்… சீக்ரெட்டை அவிழ்த்துவிட்ட ப. சிதம்பரம்…!

தமிழக அரசின் ரூ. 8,000 மதிப்பிலான இல்லத்தரசிகளுக்கான கூப்பன் திட்டம் தற்போது அரசியல் மற்றும் பொருளாதாரத் தளங்களில் பெரும் விவாதப்…

32 minutes ago

படுக்கையறையில் காத்திருந்த எமன்.. தலையணைக்கு அடியில் இருந்த பாம்பு… 8 வயது சிறுவன் துடிதுடிக்க உயிரிழப்பு..!!

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் கொடாலி பகுதியில், தூக்கத்தில் பாம்பு கடித்ததில் 8 வயது சிறுவன் அல்ஜோ பரிதாபமாக உயிரிழந்த…

34 minutes ago

ராகுல் ஒன்னு சொல்ல…. செல்வா ஒன்னு சொல்ல…. ராணிப்பேட்டையில் நடந்த செம சொதப்பல்…. சிரிப்பாய் சிரிக்கும் காங்கிரஸ் மேடை…!!

ராணிப்பேட்டையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பேசிய உரையைத் தமிழக காங்கிரஸ் தலைவர்…

39 minutes ago