இயக்குனர் ஷங்கரின் மூத்த மகளான ஐஸ்வர்யாவிற்கு கடந்த 15 ஆம் தேதி மிக பிரம்மாண்டமான முறையில் திருமணம் நடைபெற்றது. இந்த திருமண விழாவில் கோலிவுட், டோலிவுட், பாலிவுட் என இந்திய சினிமாவைச் சேர்ந்த முக்கிய நடிகர்களும் சினிமா பிரபலங்களும் கலந்துகொண்டனர்.
இந்த நிலையில் இத்திருமண விழாவில் நடிகர் விஷாலும் கலந்துகொண்டார். அவர் மணமக்களை பார்ப்பதற்காக காத்திருந்தபோது முதல்வர் ஸ்டாலின் மேடையில் நின்றுகொண்டிருந்தாராம். ஆதலால் ஸ்டாலின் போன்பிறகு விஷாலை மணமக்களை சந்திக்கப் போக சொல்லியிருக்கிறார்கள். அதுவரை கொஞ்சம் பொறுமையாக இருங்கள் என்றும் அங்கிருந்தவர்கள் கூறியிருக்கிறார்கள்.
ஆனால் விஷாலோ “முதல்வர் இருந்தா, நான் போகக்கூடாதா?” என்று சொல்லிவிட்டு அங்கிருந்தவர்களின் பேச்சை கேட்காமல் முன்னேறி சென்று மணமக்களை பார்த்து வந்தாராம். இந்த தகவலை வலைப்பேச்சு அந்தணன் ஒரு பேட்டியில் பகிர்ந்துகொண்டுள்ளார்.
விஷாலும் உதயநிதி ஸ்டாலினும் மிக நெருங்கிய நண்பர்களாக இருந்தவர்கள். ஆனால் சமீப காலமாகவே விஷால் ரெட் ஜெயண்ட் குறித்து மிக கடுமையாக பேசி வருவதாக செய்திகள் வருகின்றன. மேலும் 2026 ஆம் ஆண்டு தனிகட்சி தொடங்கவுள்ளதாகவும் ஒரு நிகழ்ச்சியில் விஷால் கூறியிருந்தார். இந்த நிலையில்தான் விஷால் ஷங்கர் இல்லத் திருமண விழாவில் அப்படி நடந்துகொண்டார் என கூறப்படுகிறது.
உத்தரபிரதேசத்தில் ஒரு பஞ்சர் கடை நடத்தி வரும் மெக்கானிக் பிரஜாபதி என்பவருக்கு ரூ100 கோடி வர்த்தகத்திற்கான ஜிஎஸ்டி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.…
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தான் எந்தக் கூட்டணியிலும் இல்லை என்று அறிவித்துள்ளது. இது மு.க.ஸ்டாலினுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, திமுகவுக்கு…
மொஹர்ரம் பண்டிகையை முன்னிட்டு வரும் வெள்ளிக்கிழமை 26.06.2026 அன்று அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அன்று பள்ளிகள், கல்லூரிகள்,…
மத்தியப் பிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தில் உள்ள தராம்பூர் காவல் எல்லைக்குட்பட்ட சதைனி கிராமத்தில், தக்காளி விலையைக் கேட்டு ஏற்பட்ட…
பீகார் மாநிலத்தின் பாட்னா சந்திப்பு இரயில் நிலையத்திலிருந்து அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அங்குள்ள…
சமூக வலைதளங்களில் பரவி வரும் நடிகர் மற்றும் தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து…