Categories: சினிமா

அப்பா வரலைன்னா என்ன மகன் வந்துருக்காரே… ஷங்கர் மகள் திருமணத்தில் ஆஜரான விஜயின் மகன்… வைரலாகும் புகைப்படம்…

Spread the love

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் நடிப்பில் தற்பொழுது லியோ  திரைப்படம் வெளியாகி நல்ல விமர்சனத்தையும் வசூலில் சாதனையும் படைத்தது. இதை தொடர்ந்து GOAT திரைப்படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். நடிகர் விஜய்க்கு ஜேசன்  சஞ்சய் என்ற மகன் உள்ளார் என்பதை நாம் அனைவரும் அறிவோம்.

இவர் சினிமா துறை சார்ந்த படிப்பை கடந்த ஆண்டு முடித்தார். இதை தொடர்ந்து அவர் சினிமாவில் விரைவில் காலடி எடுத்து வைப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், தனது தந்தையைப் போல ஹீரோவாக அல்லாமல் இயக்குனராக அவதாரம் எடுத்துள்ளார். ஏற்கனவே ஒரு சில குறும்படங்களை இயக்கியுள்ளார். சமீபத்தில் சஞ்சய் ‘புல் தி டிரிக்கர்’ என்கிற குறும்படத்தை இயக்கியிருந்தார். இந்த குறும்படம் யூடியூபில் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில், லைகா நிறுவனம் தயாரிக்கும் திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார் நடிகர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் என அதிகாரப்பூர்வ அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டது லைகா நிறுவனம். மேலும்  நடிகர் கவினை வைத்து தனது முதலாவது திரைப்படத்தை ஜேசன் இயக்குவார் என்று ஒரு சில தகவல்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகியும் வருகின்றன.

இந்நிலையில் இயக்குனர் ஷங்கர் அவர்களின் மூத்த மகள் ஐஸ்வர்யாவின் திருமணம் சமீபத்தில் நடந்து முடிந்தது. இதில் திரைபைரபலங்கள் பலர் கலந்து கொண்டனர். இத்திருமண புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வந்தது. முன்னதாக  இத்திருமண விழாவில் கலந்து கொண்ட நடிகர் விஜயின் மனைவி சங்கீதா அவர்களின் புகைப்படம் வைரலாக பார்க்கப்பட்டது. மேலும் இத்திருமணவிழாவில் தளபதியின் மகனும் கலந்து கொண்டுள்ளாராம். இதைப்பார்த்த ரசிகர்கள் ‘அப்பா வரலைன்னா என்ன மகன் வந்துருக்காரே’ என்று கமெண்ட் செய்து வருகின்றனர். நடிகர் விஜய் GOAT படத்தின் ஷூட்டிங்கிற்காக வெளிநாட்டில் இருப்பதால் திருமண விழாவில் கலந்து கொள்ள முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Begam

Recent Posts

உயிரா? செல்போனா? 15,000 ரூபாய் போனைப் பாதுகாக்க உயிரை விட்ட வாலிபர்… நெஞ்சை உலுக்கும் வீடியோ வைரல்…!!

மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில் நிகழ்ந்துள்ள இந்தச் சம்பவம், இன்றைய டிஜிட்டல் யுகத்தில் ஒரு சாமானிய மனிதனின் வாழ்வாதாரப் போராட்டம்…

4 minutes ago

டிகிரி முடித்திருந்தால் போதும்… மாதம் ரூ.41,000 சம்பளத்தில் LIC-ல் வேலை.. உடனே விண்ணப்பிக்கவும்..!!

LIC ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம், நாடு முழுவதும் காலியாக உள்ள இளநிலை உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய  அறிவிப்பை…

15 minutes ago

வயசான காலத்துல இது தேவையா..? “சட்டை பட்டனை போடுங்க..” ஆபாசமாக பேசிய நபருக்கு விமானப்படை அதிகாரி கொடுத்த மாஸ் பதிலடி..!!

பெண்கள் ஒருவருக்கொருவர் துணையாக இருக்க வேண்டிய சமூக ஊடக வெளியில், சக பெண்ணையே ஆடை மற்றும் கண்ணியம் என்ற பெயரில்…

22 minutes ago

KG படிக்க ரூ.2.25 லட்சமா..? “டுவிங்கிள் டுவிங்கிள் லிட்டில் ஸ்டார்” தானே சொல்லி கொடுப்பாங்க… எல்.கே.ஜி கட்டணத்தைப் பார்த்து தலைசுற்றிப்போன நெட்டிசன்கள்..!!

இந்தியாவில் தனியார் பள்ளிக் கட்டணங்கள் விண்ணைத் தொடும் அளவிற்கு உயர்ந்து வருவது குறித்த விவாதத்தை இந்தச் செய்தி கிளப்பியுள்ளது. சமூக…

27 minutes ago

நெகிழ்ச்சி..! 3 மாதக் குழந்தையைத் தன் குட்டி என நினைத்து தூக்கிச்சென்ற குரங்கு… ஒன்றரை மணி நேரம் அரவணைத்த அதிசயம்..!!

உத்தரப் பிரதேச மாநிலம் முசாபர்நகரில் ஒரு குரங்கு, மூன்று மாதக் குழந்தையைத் தனது குட்டி என நினைத்து நீண்ட நேரம்…

32 minutes ago