#image_title
90ஸ் காலகட்டத்தில் மிகவும் கொடூரமான வில்லனாக வளம் வந்தவர் நடிகர் பொன்னம்பலம். மக்கள் மத்தியில் கபாலி என்ற பெயருடன் அழைக்கப்பட்ட இவர் வில்லன் கதாபாத்திரத்திற்கு பெயர் போனவர். ஆரம்ப காலகட்டத்தில் ஸ்டன்ட் காட்சிகளில் நடித்து வந்த இவர் வால்டர் வெற்றிவேல் என்ற திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்தார்.
அந்தப் படத்தில் கபாலி என்ற கதாபாத்திரத்தில் நடித்த காரணத்தினால் அவரை பலரும் கபாலி என்றே அழைக்க ஆரம்பித்தார்கள். பின்னர் முன்னணி நடிகர்களுக்கு வில்லனாக நடித்து மக்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்தார். அதிலும் நாட்டாமை திரைப்படத்தில் சரத்குமார் அவர்களுக்கு சரி சமமாக கொடூரமான வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அவர் அப்படத்தில் மனோரமாவை தாய்க்கிழவி என்று அழைப்பது இன்றளவும் ஃபேமஸ்-ஆக இருந்து வருகின்றது.
பின்னர் சினிமாவில் இருந்து காணாமல் போன பொன்னம்பலம் நீண்ட இடைவெளிக்கு பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதனைத் தொடர்ந்து அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் பல பிரபலங்கள் அவருக்கு உதவி செய்ததால் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியிருக்கின்றார்.
இவர் குணமாகி வீடு திரும்பியதும் தனது குடும்பத்துடன் எடுத்துக் கொண்டால் புகைப்படத்தை பகிர்ந்து இருக்கிறார். இந்நிலையில் சமீபத்தில் சரண்யா பொன்னம்பலம் என்ற பெண்ணின் புகைப்படம் இணையத்தில் வைரலானது. இதை பார்த்த பலரும் இவர்தான் பொன்னம்பலத்தின் மகள் இன்று கூறி வந்தார்கள்.
பொன்னம்பலத்திற்கு மகளா இது? என பலரும் கூறிவந்த நிலையில் இவர் பொன்னம்பலத்தின் மகள் இல்லையாம். சரண்யா பொன்னம்பலம் என்று இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருந்த காரணத்தினால் பலரும் இவரை பொன்னம்பலத்தின் மகள் இன்று தவறாக புரிந்து கொண்டனர். பொன்னம்பலத்தின் மகள் பெயர் கிருத்திகா. இந்த பிரச்சினையை தொடர்ந்து பொன்னம்பலத்தின் உண்மையான மகளின் புகைப்படமானது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
பீகார் மாநிலம் மேற்கு சம்பாரண் மாவட்டத்தில் உள்ள பகா (Bagaha) அரசு மருத்துவமனையில், ஒரு பாதுகாப்பு ஊழியர் (Security Guard)…
குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள ஒரு சொகுசு விடுதியின் (Resort) நீச்சல் குளத்தில், 33 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர்…
நீண்ட இடைவேளைக்குப் பிறகு, தனது அழகான மனைவியைக் காணப் போகிறோம் என்ற எதிர்பார்ப்புடன் ஒரு கணவன் வீட்டிற்கு விரைந்தார். ஆனால்,…
மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வந்த வாலிபர் ஒருவரை, செவிலியர் அதிகாரி பகிரங்கமாக மிரட்டியுள்ள அதிர்ச்சி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
பெற்றோரின் பேச்சைக் கேட்காமல் வீட்டை விட்டு வெளியேறித் திருமணம் செய்துகொண்ட ஒரு பெண்ணின் நிதர்சனமான வாழ்க்கைப் போராட்டத்தை இந்தப் பதிவு…
குருக்ராமில் உள்ள ஒரு பெருநிறுவனத்தில் பணிபுரிந்து வந்த அன்ஷிகா சிங் என்ற பெண், அங்குள்ள பரபரப்பான வாழ்க்கை முறை மற்றும்…