உலகப்புகழ் பெற்ற நடிகர் கமல்ஹாசனின் மூத்த மகளான சுருதிஹாசன், தமிழ் மற்றும் இந்தி திரையுலகில் முன்னணி நடிகையாகவும், திறமையான பாடகி மற்றும் இசையமைப்பாளராகவும் விளங்கி வருகிறார். இந்நிலையில், சமீபத்தில் மும்பையில் உள்ள உணவகம் ஒன்றிலிருந்து வெளியே வந்த சுருதிஹாசனை, அங்கு திரண்டிருந்த புகைப்படக் கலைஞர்கள் தொடர்ந்து புகைப்படம் எடுத்தனர். அப்போது கூட்டத்தில் இருந்த ஒருவர் அவரை ‘அம்மா’ என்று விளித்து அழைத்தது, நடிகையை பெரும் அதிர்ச்சிக்கும் கோபத்திற்கும் உள்ளாக்கியது.
அந்த வார்த்தையை கேட்டவுடன் சட்டெனத் திரும்பிய சுருதிஹாசன், “யார் உங்களுக்கு அம்மா? என்ன உளறுகிறீர்கள்?” என்று மிகுந்த கோபத்துடன் கேள்வி எழுப்பினார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி தற்போது காட்டுத்தீயாய் பரவி வருகிறது. இந்த விவகாரத்தில், பொது இடங்களில் ஒரு பெண்ணின் வயது அல்லது நிலையை கருத்தில் கொள்ளாமல் அநாகரீகமாக விளிப்பதைக் கண்டித்து, சுருதிஹாசனின் துணிச்சலான பதிலுக்கு ஆதரவாக இணையவாசிகள் பலரும் தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
டாஸ்மாக் துறையில் தவெக அரசு மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். இத்துறையில் ஆண்டுக்கு 3,600 கோடி ரூபாய்…
உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், 21 வயது வாலிபர் ஒருவர் தனது சொந்தத்…
ராஜஸ்தான் மாநில காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு, ஏழை மற்றும் மைனர் பெண்களைப் பொய் வாக்குறுதிகள் அளித்து ஏமாற்றி, அவர்களை…
ஆந்திரப் பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தில், புது தில்லியிலிருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கிராண்ட் டிரங்க் (ஜிடி) எக்ஸ்பிரஸ் இரயில் மீது…
நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக சந்தித்த தோல்விக்கு உதயநிதி ஸ்டாலினின் தலைமையே முழு முதற்காரணம் என்று காங்கிரஸ்…
ஐஐஎம் பட்டதாரி ஒருவர், தனது முதல் பெருநிறுவன சம்பளத்தை பெற்ற கையோடு, அதனைத் ரொக்கமாக மாற்றித் தனது பெற்றோருக்குக் கொடுத்து…