#image_title
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பல குரல்களில் பாடி மக்கள் மனதில் இடம் பிடித்த ஹர்ஷினி நேத்ரா பத்தாம் வகுப்பில் சரியாக மதிப்பெண்கள் பெற முடியவில்லை என்று வருத்தப்பட்டுள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளம் இருக்கின்றது. இதில் ஜூனியர் மற்றும் சீனியர் என இரண்டு பிரிவுகளாக போட்டிகள் நடைபெறும்.
அதில் கலந்து கொள்ளும் குழந்தைகள் பாடுவதை கேட்பதற்கு அவ்வளவு அழகாக இருக்கும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலமாக பலர் சினிமாவில் பாடகர், பாடகிகளாக ஜொலித்து வருகிறார்கள். பல பிரபலங்களை உருவாக்கியுள்ள பெருமை சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை சேரும். அந்த வகையில் நடந்து முடிந்த சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுவர்தான் ஹர்ஷினி நேத்ரா.
இவர் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதி இருந்தார் இந்த தேர்வுக்கான முடிவுகள் நேற்று வெளியானது. இந்த ஆண்டும் வழக்கம் போல் மாணவர்களை விட மாணவிகளை அதிக தேர்ச்சி பெற்றிருக்கின்றார்கள். நல்ல மதிப்பெண் பெற்ற பல மாணவர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றது. இந்நிலையில் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய ஹரிஷினி நேத்ரா பெற்றோர்கள் எதிர்பார்த்தபடி மதிப்பெண் எடுக்க முடியவில்லை என்று கூறி இருக்கின்றார்.
இவர் பத்தாம் வகுப்பு பொது தேர்வில் 500க்கு 384 மதிப்பெண் எடுத்துள்ளார். இது குறித்து அவர் தெரிவித்திருந்ததாவது “சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நான் கலந்து கொண்டதால் பெற்றோர் ஆசைப்பட்டது போல் 450 மார்க்குக்கு மேல் எடுக்க முடியவில்லை. இருப்பினும் இது நல்ல மார்க்கு தான் என்று நினைக்கின்றேன். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியையும் படிப்பிலும் சமமான அளவு கவனம் செலுத்தினேன்” என்று தெரிவித்திருந்தார்.
இவர் சென்னையில் உள்ள அரசுப் பள்ளியில் படித்து வருகிறார். இவர் 11 ஆம் வகுப்பில் காமர்ஸ் குரூப் எடுத்து படிக்க விரும்புவதாகவும், பத்தாம் வகுப்பு தேர்வில் பெற்றோர்களின் ஆசையை நிறைவேற்ற முடியாமல் போனதால் 12 ஆம் வகுப்பில் கவனமாக படித்து அதிக மதிப்பெண் எடுத்து காட்டுவேன் என்று கூறியிருக்கின்றார். இதை பார்த்த பலரும் இவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார்கள்.
கோவை தெற்கு தொகுதியில் திமுக சார்பில் செந்தில்பாலாஜி தரப்பினர் ஒவ்வொரு வாக்காளருக்கும் தலா ₹5,000 வழங்கி வருவதாக பாஜக தேசிய…
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீதான தனிப்பட்ட விமர்சனங்களுக்கு அவரது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் மிகக் கடுமையான பதிலடி…
தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், அதிமுகவின் எதிர்காலத்தையும் எடப்பாடி பழனிசாமியின் (EPS) அரசியல் வாழ்வையும் தீர்மானிக்கும் ஒரு 'வாழ்வா…
நடிகர் விஜய் மற்றும் அவருடைய மனைவி சங்கீதா இடையிலான விவாகரத்து விவகாரம், கடந்த சில மாதங்களாகவே சமூக வலைதளங்களில் பெரும்…
நடிகர் விஜய்யின் கடைசி படமான 'ஜனநாயகன்' இணையதளத்தில் கசிந்த விவகாரம், தமிழ் திரையுலகிலும் அரசியலிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஹெச்.வினோத்…
திருவள்ளூர் நாடாளுமன்றத் தேர்தல் களம் தற்போது தனிநபர் புகார் ஒன்றால் பெரும் பரபரப்பைச் சந்தித்து வருகிறது. தமிழக வெற்றிக் கழகத்தின்…