#image_title
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விக்ரம் தற்போது பா.ரஞ்சத் இயக்கத்தில் உருவான தங்கலான் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் வருகிற ஆகஸ்ட் மாதம் 15-ஆம் தேதி ரிலீசாக உள்ளது. வித்தியாசமான கதை களம் கொண்ட தங்கலான் படத்தில் விக்ரமின் நடிப்பை பார்க்க ரசிகர்கள் ஆவலோடு உள்ளனர். அடுத்ததாக விக்ரம் தனது 62-ஆவது படமான வீர தீர சூரன் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
அருண்குமார் இயக்கும் இந்த படத்துக்கு ஜிவி பிரகாஷ் இசை அமைக்கிறார். இதில் எஸ்.ஜே சூர்யா, மலையாள நடிகர் சுராஜ், துஷாரா விஜயன் உள்ளிட்டோர் இந்த படத்தில் நடிக்கின்றனர். மதுரையிலும் தென்காசியிலும் முதற்கட்ட படப்பிடிப்புகள் மும்முரமாக நடந்தது. எஸ்.ஜே சூர்யா காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார். இந்த படத்தை இரண்டு பாகமாக எடுக்கின்றனர்.
#image_title
தென்காசி ஷூட்டிங் இல் பாடல்களும் ஆக்ஷன் காட்சிகளும் படமாக்கப்பட்டுள்ளது. பொதுவாக ஒரு படத்தில் நடித்த முடித்த பிறகு தான் அடுத்த படத்திற்கான கதையை கேட்பார் விக்ரம். இந்த நிலையில் வீர தீர சூரன் பட ஷூட்டிங்கில் பிரேக் கிடைத்திருப்பதால் இயக்குனர்களிடம் விக்ரம் கதை கேட்க ஆரம்பித்துள்ளார். விக்னேஷ் ராஜா உள்ளிட்ட பல இயக்குனர்களிடம் கதை கேட்டு வந்தார். இந்த நிலையில் மௌனகுரு மகாமுனி ரசவாதி உள்ளிட்ட படங்களை இயக்கிய சாந்தகுமார் விக்ரமிடம் ஒரு ஸ்டோரியை கூறி இருக்கிறாராம்.
அந்த கதை விக்ரமுக்கு பிடித்து போனதாக கூறப்படுகிறது. சாந்தகுமார் ஏற்கனவே தரணியிடம் உதவியாளராக இருந்தபோது விக்ரமின் தூள், தில் ஆகிய படங்களில் வேலை பார்த்துள்ளார். இது போக மற்ற இளம் இயக்குனர்களிடமும் விக்ரம் கதை கேட்டு வருகிறார். அடுத்த மாத இறுதியில் விக்ரமின் அடுத்த படத்தை இயக்கப் போவது யார் என்ற தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு முடிந்து, வரும் மே 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கைக்காக ஒட்டுமொத்த மாநிலமும் காத்திருக்கும் நிலையில்,…
திருச்சி ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதி தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளரும், அக்கட்சியின் ஊடகப் பிரிவு மாநில ஒருங்கிணைப்பாளருமான ஸ்ரீரங்கம் ரமேஷின்…
பெங்களூரு மாகடி சாலையில் உள்ள பிரசன்னா திரையரங்கில், மறைந்த பழம்பெரும் நடிகர் விஷ்ணுவர்தனுக்காக வைக்கப்பட்டிருந்த 100 அடி உயர கட்-அவுட்…
கோயம்புத்தூர் அரசியல் களம் தேர்தல் முடிந்த பின்னரும் தணியாத வெப்பத்துடன் தகித்துக் கொண்டிருக்கிறது. குறிப்பாக, கோவை தெற்கு மற்றும் வடக்கு…
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான போர் பதற்றம் உலக நாடுகளை உன்னிப்பாகக் கவனிக்க வைத்துள்ள நிலையில், அமெரிக்காவின் 'War Powers'…
திருப்பூரில் இருந்து கரூர் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து, தென்னிலை அருகே நெடுஞ்சாலையோரம் உள்ள ஒரு தேநீர்க் கடையில் நிறுத்தப்பட்டது.…