#image_title
தென்னிந்தியாவின் பிரபல நடிகரான ஜெகபதிபாபு ஆந்திர பிரதேச மாநிலத்தில் உள்ள மச்சிலி பட்டினத்தில் பிறந்தவர். இவரது தந்தை வி.பி ராஜேந்திர பிரசாத் சிறந்த தயாரிப்பாளரும் இயக்குனரும் ஆவார். கடந்த 1989-ஆம் ஆண்டு தெலுங்கில் ரிலீஸ் ஆன சிம்ம ஸ்வப்னம் திரைப்படத்தின் மூலம் ஜெகபதிபாபு திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார்.
அந்த படத்தை வி.மதுசூதன ராவ் இயக்கினார். ஜெகபதிபாபுவின் தந்தை விபி ராஜேந்திர பிரசாத் அந்த படத்தை தயாரித்தார். அந்த படம் சூப்பர் ஹிட் ஆனது. கடந்த 2000-ம் ஆண்டு மனோகரன் திரில்லர் படத்தில் நடித்தார். அந்த படத்தில் நடித்ததற்காக ஜெகபதிபாபுவுக்கு சிறந்த நடிகருக்கான நந்தி விருது வழங்கப்பட்டது.
இந்த நிலையில் ஜெகபதிபாபு தமிழில் மதராசி திரைப்படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்தார். இவர் விஜய் நடித்த பைரவா, அஜித் நடித்த விஸ்வாசம், ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும் ஜெகபதி பாபு ஏகப்பட்ட விளம்பரங்களிலும் நடித்துள்ளார். ஒரு படத்திற்கு மூன்று கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்குகிறார். ஆண்டுக்கு ஜெகபதி பாபு 36 கோடி ரூபாய் சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது.
அவரது மொத்த சொத்து மதிப்பு 120 கோடி ஆகும். அவருக்கு ஹைதராபாத்தில் இருக்கும் ஜுபிலி மலைப்பகுதியில் ஒரு மாளிகை உள்ளது. மேலும் நகரின் புறநகர் பகுதியில் பல்வேறு விருந்தினர் மாளிகைகள் இருக்கிறது. இது மட்டுமில்லாமல் ஹைதராபாத் மற்றும் மச்சிலிப்பட்டினம் பகுதியில் சொந்தமாக இடங்களும் உள்ளது. அவரிடம் Audi A6s, Toyota Land cruisers, Mercedes Benz கார்கள் உள்ளது.
#image_title
தமிழக சட்டமன்றத் தேர்தல் கடந்த ஏப்ரல் 23-ஆம் தேதி நடந்து முடிந்துள்ள நிலையில், ஒட்டுமொத்த தமிழகத்தின் பார்வையும் தற்போது கோவை…
திருச்சி விமான நிலையம் அருகிலுள்ள பசுமணிநகரைச் சேர்ந்த அசோக்குமார் (37), தனது குடும்பத்தினர் நால்வருடன் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்குப்…
தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் அதன் உச்சக்கட்ட பரபரப்பை எட்டியுள்ள நிலையில், ஒட்டுமொத்த அரசியல் நோக்கர்களின் பார்வையும் திருச்சி மாவட்டத்தின்…
மும்பையில் வசிக்கும் ஒரு நடுத்தர குடும்பத்தின் வறுமையையும், கணவன்-மனைவி இடையிலான உன்னதமான அன்பையும் இந்தச் சம்பவம் நெகிழ்ச்சியாக விவரிக்கிறது. மாதம்…
2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் களம், முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகாரப் பகிர்வு குறித்த விவாதங்களால் அனல் பறக்கத் தொடங்கியுள்ளது.…
அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம், தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ள நிலையில் தமிழக அரசியலில் பெரும்…