தென்னிந்தியாவின் பிரபல நடிகரான ஜெகபதிபாபு ஆந்திர பிரதேச மாநிலத்தில் உள்ள மச்சிலி பட்டினத்தில் பிறந்தவர். இவரது தந்தை வி.பி ராஜேந்திர பிரசாத் சிறந்த தயாரிப்பாளரும் இயக்குனரும் ஆவார். கடந்த 1989-ஆம் ஆண்டு தெலுங்கில் ரிலீஸ் ஆன சிம்ம ஸ்வப்னம் திரைப்படத்தின் மூலம் ஜெகபதிபாபு திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார்.
அந்த படத்தை வி.மதுசூதன ராவ் இயக்கினார். ஜெகபதிபாபுவின் தந்தை விபி ராஜேந்திர பிரசாத் அந்த படத்தை தயாரித்தார். அந்த படம் சூப்பர் ஹிட் ஆனது. கடந்த 2000-ம் ஆண்டு மனோகரன் திரில்லர் படத்தில் நடித்தார். அந்த படத்தில் நடித்ததற்காக ஜெகபதிபாபுவுக்கு சிறந்த நடிகருக்கான நந்தி விருது வழங்கப்பட்டது.
இந்த நிலையில் ஜெகபதிபாபு தமிழில் மதராசி திரைப்படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்தார். இவர் விஜய் நடித்த பைரவா, அஜித் நடித்த விஸ்வாசம், ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும் ஜெகபதி பாபு ஏகப்பட்ட விளம்பரங்களிலும் நடித்துள்ளார். ஒரு படத்திற்கு மூன்று கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்குகிறார். ஆண்டுக்கு ஜெகபதி பாபு 36 கோடி ரூபாய் சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது.
அவரது மொத்த சொத்து மதிப்பு 120 கோடி ஆகும். அவருக்கு ஹைதராபாத்தில் இருக்கும் ஜுபிலி மலைப்பகுதியில் ஒரு மாளிகை உள்ளது. மேலும் நகரின் புறநகர் பகுதியில் பல்வேறு விருந்தினர் மாளிகைகள் இருக்கிறது. இது மட்டுமில்லாமல் ஹைதராபாத் மற்றும் மச்சிலிப்பட்டினம் பகுதியில் சொந்தமாக இடங்களும் உள்ளது. அவரிடம் Audi A6s, Toyota Land cruisers, Mercedes Benz கார்கள் உள்ளது.

#image_title