மியூசிக் டைரக்டர் நான் தான்.. ஆனா பாட்டு என்னோடது இல்ல.. சர்ச்சையை கிளப்பிய சந்தோஷ் நாராயணனின் பதிவு..!!

By Priya Ram on ஜூலை 26, 2024

Spread the love

90ஸ் காலகட்டத்தில் இளம் பெண்களின் கனவு நாயகனாக வலம் வந்தவர் பிரசாந்த். முதன்முதலில் டாப் ஸ்டார் பிரசாந்த் வைகாசி பொறந்தாச்சு திரைப்படத்தில் ஹீரோவாக நடித்தார். அந்த படம் சூப்பர் ஹிட் ஆனதால் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி முன்னணி நடிகராக உயர்ந்தார். ஆனால் ஒரு சில குடும்ப பிரச்சினைகள் காரணமாக சினிமாவில் சறுக்கல்களை சந்தித்தார்.

   

இந்த நிலையில் பல ஆண்டுகளுக்குப் பிறகு பிரசாந்த் மீண்டும் ஹீரோவாக நடிக்கிறார். ஹிந்தியில் ரிலீசான அந்தாதூன் என்ற திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனது. அந்த படத்தை தமிழில் அந்தகன் என்ற பெயரில் ரீமேக் செய்துள்ளனர். பிரசாந்தின் தந்தை தியாகராஜன் இந்த படத்தை இயக்கியுள்ளார். அந்தகன் படத்தில் கார்த்திக், பிரியா ஆனந்த், சிம்ரன், வனிதா விஜயகுமார் உள்ளிட்ட பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். வருகிற ஆகஸ்ட் மாதம் 15-ஆம் தேதி படம் ரிலீஸ் ஆக உள்ளது.

   

 

இந்த நிலையில் தளபதி விஜயும், பிரபுதேவாவும் இணைந்து அந்தகன் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளை ரிலீஸ் செய்தனர். அந்த பாடலை அனிருத்தும் விஜய் சேதுபதி இணைந்து பாடியுள்ளனர். சாண்டி மாஸ்டர் கோரியோகிராப் செய்துள்ளார். இந்த அளவில் சந்தோஷ் நாராயணன் தனது சமூக வலைதள பக்கத்தில் அந்தகன் ஆந்தம் பாடலின் லிங்கை ஷேர் செய்து வரலாற்றில் முதல் முறையாக ஆடியோ லேபிள் பார்வேற்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறது. இது எனது பாடலா என்பது ஆய்வு செய்வதற்கு நான் பணம் வாங்குவதில்லை என கிண்டலாக பதிவிட்டுள்ளார்.

இந்த வருஷம் 5 ஆல்பம் வெளியிட போறேன் - சந்தோஷ் நாராயணன் | I am going to  release 5 albums this year - Santhosh Narayanan - hindutamil.in

மேலும் வடிவேலுவின் ரியாக்ஷனையும் பகிர்ந்துள்ளார். அதற்கு அடுத்த பதிவில் இது நான் வழங்கிய இசையோ, மிக்ஸிங்கோ, அரேஞ்ச்மெண்டோ கிடையாது என கூறியுள்ளார். அந்தகன் ஆன்தம் பாடல் ரிலீசின் போது சந்தோஷ் நாராயணன் உடன் இல்லை. அவர் இசை அமைத்த பாடலில் ஏதாவது மாற்றங்கள் செய்து வெளியிட்டார்களா? அல்லது வேறு ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டதால் சந்தோஷ் நாராயணன் இப்படி கூறுகிறாரா? என ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.