தமிழ் சினிமாவில் நடிகர் மற்றும் இயக்குனர் என பன்முக திறமையோடு கலக்கிக் கொண்டிருப்பவர் தான் பார்த்திபன். இயக்குனர் பாக்கியராஜ் இடம் உதவியாளராக இருந்து சினிமாவை கற்றுக் கொண்டவர் தான் இவர். சினிமாவில் தானும் ஒரு நடிகராக வேண்டும் என்ற ஆசையில் சென்னைக்கு வந்த பார்த்திபன் முதலில் சில நாடகங்களில் நடித்தார். அதன் பிறகு பாக்கியராஜ் இயக்கிய தாவணிக் கனவுகள் திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பின்னர் சினிமாவை இயக்கலாம் என்ற நம்பிக்கை வந்ததும் ஒரு கதையை எழுதி அந்த கதைக்கு கேள்விக்குறி என்று பெயர் வைத்தார்.
அந்த கதையை ரஜினி மற்றும் கமல் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் பலரிடம் கூறிய நிலையில் யாரும் ஆர்வம் காட்டவில்லை. பார்த்திபன் கதை சொன்ன ஹீரோக்களில் விஜயகாந்த் ஒருவர். இந்த கதை விஜயகாந்துக்கு மிகவும் பிடித்திருந்த நிலையில் பார்த்திபன் மீது நம்பிக்கை இல்லாததால் ஒரு புதுமுக இயக்குனரை நம்பி படத்தில் நடிக்க விஜயகாந்த் விருப்பம் காட்ட வில்லை. இதனால் கதை மற்றும் திரைக்கதை எல்லாம் பார்த்திபன் எழுதட்டும் வேறொரு இயக்குனரை வைத்து படமாக எடுப்போம் என்று விஜயகாந்த் நினைத்தார்.
ஆனால் அதற்கு பார்த்திபன் சம்மதிக்கவில்லை. அதேசமயம் சுந்தரம் என்ற தயாரிப்பாளர் இடம் கூறி அவரும் சம்மதம் தெரிவித்து விட்டார். ஹீரோ மட்டும் உறுதியாகாமல் இருந்ததால் அந்த கதையை கேட்ட விஜயகாந்தின் நண்பர் இப்ராஹிம் ராவுத்தர் இந்த கதையில் நீ நடிப்பதை விட கதையை சொன்ன பார்த்திபன் நடித்தால் சரியாக இருக்கும் என்று விஜயகாந்த்திடம் கூறியிருக்கிறார். உடனே தயாரிப்பாளர் சுந்தரத்திற்கு போன் போட்ட விஜயகாந்த் இந்த கதையில் மூர்த்தி என்ற நிஜப் பெயர் கொண்ட பார்த்திபன் நடித்தால் சரியாக இருக்கும், தமிழ் சினிமாவுக்கு ஒரு புதிய நடிகர் கிடைப்பார் என்று கூறிவிட்டார்.
அதனைப் போலவே இந்த கதையில் நடிப்பது தொடர்பாக சுந்தரமும் பார்த்திபனும் ரஜினியை சந்தித்து பேசிய நிலையில் அவரும் அதையே கூறியுள்ளார். இந்த கதையை நீங்கள் இவரை வைத்து எடுங்கள் சூப்பர் ஹிட் அடிக்கும் என்று கூற அப்படி பார்த்திபன் நடிப்பில் உருவான திரைப்படம் தான் புதிய பாதை. இந்தப் படத்தில் பார்த்திபனுக்கு ஜோடியாக சீதா நடித்திருந்த நிலையில் அப்போது இருவருக்கும் காதல் ஏற்பட்டு திருமணம் செய்து கொண்டனர். அதன் பிறகு சில காலம் வாழ்ந்து வந்த இவர்கள் விவாகரத்து பெற்று பிரிந்து தற்போது தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர்
கடந்த 2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின் போது, எடப்பாடி தொகுதியில் போட்டியிட்ட அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது…
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் (TVK) சார்பில் போட்டியிடும் வேட்பாளர் செங்கோட்டையன், அளுக்குளி எம்.ஜி.ஆர். நகரில்…
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள சித்துராஜபுரத்தில், அதிமுக வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான ராஜேந்திர பாலாஜி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டபோது…
சென்னையில் தேர்தல் பரப்புரையின் போது விதிகளை மீறியதாகத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது காவல்துறை வழக்குப் பதிவு…
தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று பிற்பகல் 3 மணிக்கு தனது…
கடலூர் மாவட்டத்தின் ஸ்ரீமுஷ்ணம், பாளையங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட விசிக தலைவர் திருமாவளவன், திமுக ஆட்சியைத் தொடர…