Categories: சினிமா

அந்தப் பாட்டுல நான் நிஜமாவே அழுதுட்டேன்.. என் கணவர் மருத்துவமனையில் இருக்கும் போது என்ன ஆட கூப்பிட்டாங்க.. மனம் திறந்த டான்ஸ் மாஸ்டர் சுஜாதா.!

Spread the love

சசிகுமார் இயக்கத்தில் வைபவ் நடிப்பில் தனது 2010 ஆம் ஆண்டு வெளியான ஈசன் திரைப்படத்தில் ஜில்லா விட்டு ஜில்லா வந்த கதைய நீயும் கேட்டியா என்ற பாடல் பட்டி தொட்டி எங்கும் பிரபலமடைந்தது. டான்ஸ் மாஸ்டர் தினேஷ் கோரியோகிராப் செய்த இந்த பாடல் சிறந்த நடன அமைப்புக்கான பல்வேறு விருதுகளையும் தட்டி சென்றது. இந்தப் பாடல் முழுவதையும் பாடியவரே இந்த பாடலின் இறுதியில் செம ஆட்டம் போட்டு தனது நடனத்தின் மூலம் பலரையும் கவர்ந்த நடிகை தான் சுஜாதா. சிறுவயதிலிருந்தே கோடம்பாக்கத்தில் இருந்து வளர்ந்த இவர் நடனத்தின் மீது அதிக ஆர்வம் கொண்டவராக இருந்துள்ளார். பிறகு நடனப் பள்ளியில் சேர்ந்து பல்வேறு பரிசுகளையும் வாங்கி உள்ளார்.

அதன் மூலம் சினிமாவில் குரூப் டான்ஸராக சேர்ந்து ஆடத் தொடங்கியவர் முதலில் ரகு மாஸ்டரிடம் குரூப் டான்ஸ் ஆக சேர்ந்தார். அதன் பிறகு சுந்தரம் மாஸ்டர் இடம் சேர்ந்த இவர் சூப்பர் ஸ்டார் நடித்த தளபதி திரைப்படத்தில் ராக்கம்மா கையத்தட்டு, காட்டு குயிலு போன்ற பாடல்களில் குரூப் டான்ஸ் ஆடி உள்ளார். இவர் விஜய் நடிப்பில் வெளியான கில்லி திரைப்படத்தில் திரிஷாவின் அம்மாவாக நடித்திருந்தார். அதே சமயம் இயக்குனர் கதிர் இயக்கிய காதல் தேசம் என்ற திரைப்படத்தில் இடம் பெற்ற முஸ்தபா முஸ்தபா என்ற பாடல் மூலம் தான் மாஸ்டராக இவர் அறிமுகமானார். அதன் மூலம் இவருக்கு நல்ல பெயர் கிடைக்க தொடங்கிய நிலையில் சுமார் 200க்கும் மேற்பட்ட படங்களுக்கு நடனம் அமைத்துள்ளார்.

தற்போது பல்வேறு படங்களில் நடன இயக்குனராக பணியாற்றி வரும் இவ்வாறு விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலில் மீனாவுக்கு வில்லியாக ஒரு கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார்.  இப்படியான நிலையில் சுஜாதா சமீபத்தில் அளித்த பேட்டியில் ஈசன் திரைப்படத்தின் நடித்த அனுபவம் குறித்து பகிர்ந்துள்ளார். அதில், ஈசன் திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாட வேண்டும் என்று முதலில் என்னை கூப்பிட்டாங்க. பாட்டுக்கு மட்டும் இருக்கணும் அவ்வளவு பெருசா ஆட வேண்டியது இருக்காது என்று சொன்னார்கள்.

அப்போ எதுக்கு என்ன கூப்பிடுறீங்க என்று கேட்டதும் இல்ல ஒரு முக்கியமான காட்சி இருக்கு அதுல நீங்க அந்த பாடலில் நடிச்சா நல்லா இருக்கும் என்று சொல்லித்தான் என்ன கூட்டிட்டு போனாங்க. இந்தப் பாடல் காட்சி எடுப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு என்னுடைய கணவருக்கு இரண்டாவது அட்டாக் வந்துவிட்டது. அப்போ அவரை மருத்துவமனையில் அனுமதித்து விட்டு ஐந்து நாட்கள் அவருடன் தான் இருந்தேன். சூட்டிங் எடுக்க போறோம் நீங்க வரணும் என்று என்ன கூப்பிட்டதும் எனக்கு போகவே மனசு இல்ல. அப்போ என்னுடைய கணவர் டாக்டர் இருக்காங்க என்ன பார்த்துப்பாங்க நீ போய் உன்னுடைய வேலைய பாரு என்று சொல்லி அனுப்பி வச்சாரு. அதன் பிறகு ஜில்லா விட்டு ஜில்லா வந்த கதையை நீயும் கேட்டியா என்ற பாடலில் நடித்த சமயத்தில் இறுதியாக ஒரு பாடல் வரிகளை பாடி நான் அழும் காட்சி இடம் பெற்று இருக்கும். உண்மையிலேயே அந்த காட்சியில் என் கணவரை நினைத்து நான் மனம் வருந்தி அழுதுவிட்டேன்.

 

எப்படியோ நடித்து முடித்துவிட்டு வந்து பத்து மாதங்கள் ஆகியும் படம் தாமதமாகத்தான் ரிலீஸ் ஆனது. படம் ரிலீஸ் ஆனதும் நான் பார்க்கவே இல்லை. கோவிலுக்கு சென்ற சமயத்தில் அங்கிருந்த பூசாரி படத்தை பார்த்து நன்றாக இருந்தது பாட்டில் வேற லெவலில் ஆடி இருக்கீங்க என்று சொல்லி பாராட்டினார். அதன் பிறகு வினு சக்கரவர்த்தி மற்றும் சமுத்திரகனி ஆகியோர் எனக்கு போன் செய்து படம் ரொம்ப நல்லா இருக்கு முதலில் படத்தை பாருங்கள் என்று சொல்லி பாராட்டினார்கள். அதன் பிறகு படம் பார்க்கும்போது எனக்கே மனம் கலங்கி விட்டது என்று சுஜாதா அந்த பேட்டியில் பேசியுள்ளார்.

Nanthini

Recent Posts

சிக்கலில் எடப்பாடி பழனிசாமி..? வேட்புமனுவில் சொத்து விவரங்கள் மறைப்பு… 4 வாரத்தில் விளக்கம் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு..!!

கடந்த 2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின் போது, எடப்பாடி தொகுதியில் போட்டியிட்ட அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது…

8 minutes ago

“எடப்பாடிக்கு ரூ.50,000 கோடி சொத்து” யாரால் வந்தது தெரியுமா..? தேர்தல் முடியட்டும் எல்லாத்தையும் போட்டு உடைக்கிறேன்… பகீர் கிளப்பிய செங்கோட்டையன்..!!

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் (TVK) சார்பில் போட்டியிடும் வேட்பாளர் செங்கோட்டையன், அளுக்குளி எம்.ஜி.ஆர். நகரில்…

14 minutes ago

அதிமுக மாஜி அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பிரச்சாரத்தில் பணப்பட்டுவாடா…? வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பு..!!

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள சித்துராஜபுரத்தில், அதிமுக வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான ராஜேந்திர பாலாஜி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டபோது…

18 minutes ago

FLASH NEWS: காலையிலேயே விஜய்க்கு செம ஷாக்…. சென்னையில் நள்ளிரவில் பாய்ந்த அதிரடி வழக்கு…!

சென்னையில் தேர்தல் பரப்புரையின் போது விதிகளை மீறியதாகத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது காவல்துறை வழக்குப் பதிவு…

21 minutes ago

5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி… காலையில் மகிழ்ச்சி செய்தி… தமிழக மக்களுக்கு குட் நியூஸ்….!

தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று பிற்பகல் 3 மணிக்கு தனது…

25 minutes ago

அரசியல் வட்டாரமே ஷாக்..! NDA கூட்டணி வென்றால் மசூதி, சர்ச் இடிக்கப்படும்… பரபரப்பை கிளப்பிய திருமாவளவன்..!!

கடலூர் மாவட்டத்தின் ஸ்ரீமுஷ்ணம், பாளையங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட விசிக தலைவர் திருமாவளவன், திமுக ஆட்சியைத் தொடர…

27 minutes ago