வின்னர், லண்டன், கிரி, தலைநகரம் மற்றும் நகரம் திரைப்படங்களுக்கு பிறகு மீண்டும் சுந்தர் சி மற்றும் வடிவேலு காம்போவில் உருவாகி இருக்கும் திரைப்படம் தான் கேங்கர்ஸ். அரண்மனை மற்றும் மதகஜராஜா படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் சிரிப்பு சரவெடியை சுந்தர் சி கொடுக்க முயற்சி செய்த படம் தான் இது. ரசிகர்களின் நீண்ட எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று வெளியான இந்த திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. சுந்தர் சி இயக்கி நடித்து இருக்கும் இந்த படத்தில் கேத்தரின் தெரசா, வாணி போஜன் மற்றும் வடிவேலு உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இந்த படத்தின் முதல் காட்சி வழக்கமான சுந்தர் சி படங்களில் வரும் அரசியல்வாதிகளிடமிருந்து தான் தொடங்குகின்றது.
அரசு பள்ளியில் படிக்கக்கூடிய மாணவி ஒருவர் திடீரென்று காணாமல் போகின்றார். அதே பள்ளியில் ஆசிரியராக பணியாற்றும் சுஜிதா கதாபாத்திரத்தில் நடித்துள்ள கேத்தரின் தெரசா மாணவி காணாமல் போனதை கண்டுபிடிக்க கமிஷனருக்கு மனு எழுதுகின்றார். மேலும் அதே பள்ளியில் பி டி மாஸ்டர் ஆக சிங்காரம் கதாபாத்திரத்தில் நடிக்கும் வடிவேலு பணியாற்றுகின்றார். அவருக்கு போட்டியாக சரவணன் கதாபாத்திரத்தில் சுந்தர் சி புதிதாக வருகிறார். உள்ளூர் அரசியல்வாதிகள் ஆன மைம் கோபி மற்றும் அருள் தாஸ் பள்ளியை தங்களுடைய சாராய விற்பனை மற்றும் இன்னும் சில தவறான செயல்களுக்கு பயன்படுத்துகின்றனர். இதனை பொறுத்துக் கொள்ள முடியாத சுந்தர் சி இருவரையும் மறைந்திருந்து அட்டாக் செய்கின்றார்.
ஆனால் ஒவ்வொரு முறையும் ஹீரோவுக்கு பதில் காமெடி எண்கள் மாற்றுவது போல வடிவேலு போடும் கெட்டப் புகழால் சிக்கலை தேடிக்கொள்கின்றார். படத்தின் முதல் பாதியோடு டைவர்ஷன் எடுத்து இரண்டாம் பாதியில் புதிய ரூட்டில் கங்கர்ஸ் திரைப்படம் செல்கிறது. இந்தப் படத்தில் கதை என்று புதிதாக சொல்வதற்கு எதுவும் இல்லை. வழக்கமாக சுந்தர் சி படங்களில் இடம்பெறும் அதே பழைய டெம்ப்லேட் மசாலாக்கள் நிறைந்த காமெடி படமாக இருக்கிறது. முதல் பாதையில் வடிவேலுவின் காமெடி காட்சிகள் ஓரிரு இடங்களில் மட்டுமே சிரிக்க வைக்கின்றன. கதை இதுதான் என்பதை யூகிக்க முடிந்தாலும் சகிக்க முடியவில்லை .
ஒரு அரசுப் பள்ளியில் படிக்கக்கூடிய மாணவிகள் காணாமல் போவதாக கதை தொடர்வதும் பிறகு கதை செல்லும் விதமும் நகைச்சுவையாக உள்ளது. இரண்டாம் பாதியில் தான் ஒட்டுமொத்த கதையையும் வைத்து பார்வையாளர்களை சுந்தர் சி சிரிக்க வைத்துள்ளார். இரண்டாம் பாதியில் வடிவேலு மற்றும் சுந்தர் சி காம்போ ஒர்க் அவுட் ஆகி உள்ளது. இந்த படத்தில் முழுக்க முழுக்க சுந்தர் சி நாயகனாக இருந்தாலும் கேங்கர்ஸ் படத்தை வடிவேலு தூக்கி நிறுத்தியுள்ளார்.
வடிவேலு இந்த படம் மூலம் தன்னால் முடிந்த அளவுக்கு ரசிகர்களை சிரிக்க வைத்துள்ளார். 100 கோடியை கொள்ளையடிப்பது தான் கதை என்றாலும் அரசு பள்ளியில் மாணவிகள் காணாமல் போவது அதை கண்டுபிடிக்க போலீஸ் மாறுவேடத்தில் பள்ளிக்கு வருவது என விறுவிறுப்பாக காட்சிகள் செல்கிறது. புது கூட்டணியோடு காமெடியில் வடிவேலு இந்த திரைப்படத்தில் கலக்கியுள்ளார். ஆக மொத்தத்தில் படம் முடிந்த அளவுக்கு ரசிகர்கள் மத்தியில் பாசிட்டி விமர்சனங்களை பெற்று வருகிறது.
சூரிய பகவான் மேஷ ராசியில் உச்சம் பெற்றுள்ள இந்த பெயர்ச்சி, மேஷம், மிதுனம், சிம்மம், துலாம், மகரம் மற்றும் கும்பம்…
இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 'Happiest Places to Work' விருதுகள், வெறும் லாபத்தை மட்டுமே இலக்காகக் கொண்டு இயங்கும் நிறுவனங்களுக்கு ஒரு…
தமிழக வெற்றிக் கழகத்தின் முழுமையான தேர்தல் அறிக்கை இன்று மாலை 3 மணி அளவில் வெளியிடப்படும் என்று அக்கட்சியின் தலைவர்…
இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…
புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…
2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…