கிளாசிக் தமிழ் சினிமாவில் முன்னணி பாடகர் ஆக பல சூப்பர் ஹிட் பாடல்களை பாடியவர் தான் டி எம் சௌந்தரராஜன். தமிழ் சினிமாவில் தனது குரல் வளத்தின் மூலம் பல சூப்பர் ஹிட் பாடல்களை பாடியுள்ளார். எம்ஜிஆர் மற்றும் சிவாஜி உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் முதல் பலருக்கும் தனது திறமையின் மூலமாக திரையில் அவர்கள் பாடுவது போலவே பாடி அசத்திய டி எம் சௌந்தர்ராஜன் எந்த நடிகருக்காக பாடினாலும் திரையில் அதே நடிகரை பாடும் அளவுக்கு அவர்களின் குரல் போன்ற தோற்றத்தில் பாடும் திறன் பெற்றவர். அதனைப் போலவே சினிமாவில் ஒரு சில படங்களில் இவர் நடித்துள்ளார்.
கிளாசிக் இசையமைப்பாளர் கேவி மகாதேவன் தொடங்கி எம் எஸ் வி உள்ளிட்ட முன்னணி இசையமைப்பாளர்கள் பலருடன் இணைந்து பல சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்துள்ள டி எம் சௌந்தரராஜன் இளையராஜாவின் முதல் படமாக அன்னக்கிளி படத்தில், அதனைத் தொடர்ந்து சிவாஜி மற்றும் ரஜினிகாந்த் ஆகியோரின் படங்களுக்கு இளையராஜா இசை அமைத்த போது அவர்களுக்காக பாடல்கள் பாடியுள்ளார். ஒரு கட்டத்தில் டீ எம் சௌந்தரராஜனுக்கு வாய்ப்பு கொடுக்காத இளையராஜா மற்ற பாடகர்களுக்கு வாய்ப்பு கொடுத்திருந்தார்.
இது பற்றி ஒரு பழைய பேட்டியில் பேசிய டி எம் சௌந்தரராஜன், இளையராஜா இசையில் சிவாஜி படங்களுக்கு பாடியிருக்கிறேன். அன்னக்கிளி படத்தில் அன்னக்கிளி உன்னைத் தேடுதே என்ற பாடலை பாடி கொடியேற்றி வைத்தேன். அதன் பிறகு சிவாஜிக்கு நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் இங்கே, ரஜினிக்கு நண்டு ஊருது நரி ஊருது உள்ளிட்ட பாடல்களை பாடி இருந்தேன். இளையராஜா இசையில் அருமையான பாடல்களை பாடி இருக்கிறேன். இப்போது அவர் இசையில் பாடாததற்கு காரணம் நான் குறையாக சொல்லவில்லை. நான் ஒருவருக்கு உதவி செய்கிறேன் என்றால் என்னை பற்றி மற்றவர்கள் பேசினால் தான் உதவி செய்ததற்கான அர்த்தம் இருக்கும். இளையராஜா டி எம் சௌந்தரராஜன் பாட வைத்தார்.
ஏராளமான பாடல்கள் ஹிட் ஆனது. ஆனாலும் இளையராஜா டி எம் சௌந்தரராஜன் எவ்வளவு அழகாக பாட வைத்து விட்டார் என்று யாரும் சொல்லவில்லை. மாறாக இளையராஜா இசையில் டிஎம்எஸ் எவ்வளவு அழகாக பாடிவிட்டார் பாருங்கள் என்று சொல்லிவிட்டார்கள். இதுதான் அவர் மனதில் இருந்தது. என்னதான் நான் பாட்டு சொல்லிக் கொடுத்தாலும் இந்த குரலை தானே பாராட்டுகிறார்கள். குரலே இல்லாமல் பாட வைக்க வேண்டும் என்று இளையராஜா முடிவு செய்துவிட்டார் என டி எம் எஸ் அந்த பேட்டியில் கூறி இருந்தார். இதனிடையே டி எம் எஸ் மற்றும் இளையராஜா இடையேயான மோதல் பற்றி டிஎம்எஸ் மகள் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். அதில், அப்பா எம் எஸ் வி சார்கிட்ட சொல்ற மாதிரி இளையராஜாவிடம் இந்த பாடலில் இப்படி பண்ணலாமா அப்படி பண்ணலாமா என்று சொல்லி இருக்கிறார்.
அதனைக் கேட்ட இளையராஜா இங்கு நான்தான் இசையமைப்பாளர் நான் சொல்ற மாதிரி தான் நீங்க பண்ணனும். இங்கு அப்படி பாடின அங்க அப்படி பாடின என்று சொல்வதை எல்லாம் நான் ஏத்துக்க மாட்டேன். நான் சொல்ற மாதிரி தான் நீங்க பாடணும் என்று இளையராஜா சொல்ல அதற்கு என் அப்பா டி எம் எஸ் சரிப்பா அப்படியாப்பா என்று தலையாட்டிக் கொண்டு அங்கிருந்து கிளம்பிவிட்டார். அதன் பிறகு இளையராஜா இசையில் அப்பாவும் பாடவில்லை இளையராஜாவும் என் அப்பாவை கூப்பிடவே இல்லை. இருந்தாலும் அதன் பிறகு என் அப்பாவை சந்திக்கும்போது இளையராஜா பாராட்டினாலும் அவர் மனதில் என்ன இருந்தது என்று யாருக்கு தெரியும் என டிஎம்எஸ் மகள் அந்த பேட்டியில் பேசியுள்ளார்.
தமிழகத்தில் இன்றைய நிலவரப்படி (ஏப்ரல் 16), தங்கம் விலை மீண்டும் அதிரடியாக உயர்ந்து இல்லத்தரசிகளுக்கும் முதலீட்டாளர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச…
தங்கம் இன்று சாமானியர்களின் கைக்கு எட்டாத ஒரு கனியாக மாறிக்கொண்டிருப்பதன் பின்னணியில் உள்ள உலகளாவிய அரசியல் மற்றும் பொருளாதார காரணிகளை…
உலகளாவிய சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை தற்போது அதிரடி உயர்வைச் சந்தித்து வருகிறது. இதற்கு முதன்மையான காரணமாக ஈரான்…
தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், திரைத்துறையினரின் அரசியல் வருகையும் கருத்துகளும் விவாதப்…
தமிழகத்தில் 1 முதல் 9-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு நாளை (ஏப்ரல் 17) முதல் கோடை விடுமுறை தொடங்குகிறது.…
மத்திய அரசின் தொகுதி மறுவரையறை (Delimitation) மசோதாவுக்கு எதிராகத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரடியாகக் களமிறங்கி தனது கடுமையான…