விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்ப்பதற்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போது ஏழாவது சீசன் தொடங்கி நான்காவது வாரத்தை நெருங்கி வருகிறது. இந்த சீசனில் பூர்ணிமா, கூல் சுரேஷ், ரவீனா தாஹா, பிரதீப் ஆண்டனி, சரவணா விக்ரம், நிக்ஸன், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு, விஜய், ஜோவிகா, அக்ஷயா உதயகுமார், மணிசந்திரா, யுகேந்திரன் வாசுதேவன், வினுஷா தேவி, விசித்திரா, பாவா செல்லதுரை, விஜய் வர்மா ஆகியோர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றனர்.
பிக் பாஸ் முதல் வாரத்தில் அனன்யா வெளியேறிவிட்டார். இதனையடுத்து பாவா தன்னால் இனி நிகழ்ச்சியில் விளையாட முடியாது என அவராகவே வெளியேறிவிட்டார். இரண்டாவது வாரம் எவிக்ஷனில் யாரும் எதிர்பார்க்காதவிதமாக விஜய் வர்மா வெளியேற்றப்பட்டார். அதற்கு முக்கிய காரணம் பிக் பாஸில் ஒரு கன்டென்ட் கொடுக்கும் போட்டியாளராகவே விஜய் வர்மா இருந்துள்ளார்.
அதோடு ஏற்கனவே அவரை எச்சரித்த நிலையில் டாஸ்கின் போது விஜய் வர்மா நடந்து கொண்ட விதம் பிரச்சனையை ஏற்படுத்தி உள்ளது. மேலும் ஆக்சிஜன் சிலிண்டர் டாஸ்க்கில் விஜய் வர்மா செய்தது சர்ச்சையை கிளப்பியது. விஜய் வர்மா காலை பிரதீப் இருக்க பிடித்து கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் வெளியே வர முடியாமல் தவித்த விஜய் வர்மா பிரதீப்பை அப்படியே தரையில் தூக்கி அடித்ததால் அவர் சுருண்டு விழுந்தார்.
இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவியது. இந்நிலையில் பிக் பாசில் இருந்து வெளியே வந்த பிறகு விஜய் வர்மா ஒரு பேட்டியில் கலந்து கொண்டார். அப்போது நிகழ்ச்சி தொகுப்பாளர் பட்டிஸ்டாவின் புகைப்படத்தை காண்பித்தார். அதனை பார்த்த விஜய் வர்மா சிறு வயதில் இருந்து எனக்கு பட்டிஸ்டாவை பிடிக்கும்.
நான் 16 வயதிலேயே வேலைக்கு செல்ல ஆரம்பித்து விட்டேன். அதன்பிறகு டிவி பார்ப்பதற்கு நேரம் கிடைப்பதில்லை. பட்டிஸ்டாவை எனக்கு ரொம்ப பிடிக்கும் அவரைப் போலவே பிரதீப்பை தூக்கி போட்டேன் என கூறுகிறார்கள். பிரதீப்பை தூக்கி போட்டது தான் எல்லாரும் பார்த்தார்கள். அதற்கு முன்பு என்ன நடந்தது என்பது யாருக்கும் தெரியாது என கூறியுள்ளார்.
அசாமின் தேமாஜி மாவட்டம் ஜோனை நகரில் உள்ள தெலாம் பஜாரில், பள்ளி ஆசிரியர் ஒருவர் தனது மனைவி மற்றும் இரண்டு…
ஜெய்ப்பூரின் மான்சரோவர் பகுதியில் செப்டம்பர் 2 அன்று அதிவேகமாக வந்த கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று பல வாகனங்கள் மீது…
ஹரியானா மாநிலம் கைத்தல் மாவட்டத்தில் நேற்று காலை நேர்ந்த கோர சாலை விபத்தில், பள்ளிக் கல்வி பயின்று வந்த இரண்டு…
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் மைலார்தேவ்பள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அலீநகர் பகுதியில் செப்டம்பர் 2 ஆம் தேதி புதன்கிழமை நள்ளிரவில்…
ஒரு புதிதாகத் திருமணமான தம்பதி ஒன்றாகப் பயணம் செய்தபோது, மனைவியின் கடந்தகால இரகசியத் தொடர்பு தற்செயலாகத் தெரியவந்தது. கணவன் எவ்வளவோ…
உத்தரப் பிரதேசத்தில் கிராமப் பஞ்சாயத்து தலைவர் ஒருவர், தன் கிராமத்தைச் சேர்ந்த பெண் உறுப்பினரிடம் அரசு சம்பந்தப்பட்ட முக்கியப் பணி…