“150 கட்சிகளுடன் ரகசிய கூட்டணி”…. விஜய்யின் அரசியல் வியூகத்தை உடைத்த சீமான்…. இதை யாராவது கவனிச்சீங்களா…?

Spread the love

தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய்யை நோக்கி, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் முன்வைத்துள்ள விமர்சனங்கள் தற்போது சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளன. வரும் சட்டமன்றத் தேர்தலில் தவெக தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ள நிலையில், கோயம்புத்தூர் தொண்டாமுத்தூர் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய சீமான், விஜய் மறைமுகமாக 150 கட்சிகளுடன் கூட்டணி வைத்திருப்பதாகக் கடுமையாகச் சாடியுள்ளார்.

விஜய்யின் அரசியல் நகர்வுகளை ‘கூட்டாஞ்சோறு’ அரசியலோடு ஒப்பிட்ட சீமான், மற்ற கட்சிகளில் சீட் கிடைக்காதவர்களையும், செல்வாக்கற்ற ‘லெட்டர் பேட்’ கட்சிக்காரர்களையும் திரட்டி விஜய் களம் காண்பதாகக் குற்றம் சாட்டினார். “150 பேரிடம் துணியை வாங்கி ஒட்டுப்போட்டுச் சட்டை தைத்தது போலவும், பத்து வீடுகளில் கையேந்திச் சோறு வாங்கி கூட்டாஞ்சோறு ஆக்கியது போலவும் விஜய்யின் வேட்பாளர் தேர்வு அமைந்துள்ளது” எனத் தனது பாணியில் கிண்டல் செய்துள்ளார்.

திமுக 22 கட்சிகளுடனும், அதிமுக 10 கட்சிகளுடனும் கூட்டணி வைத்துள்ள நிலையில், விஜய் வெளிப்படையாகத் தனித்து நிற்பதாகக் கூறினாலும் உண்மையில் 150 சிறிய அமைப்புகளைத் தன்னுள் இணைத்துக் கொண்டுள்ளதே நிதர்சனம் என்பது சீமானின் வாதம். ஒரு தலைவன் என்பவன் தன் மக்களையும், கொள்கையையும் மட்டுமே நம்பி நிற்க வேண்டும் என்றும், பலரைச் சார்ந்து நிற்பது மக்களின் மீதான நம்பிக்கையின்மையைக் காட்டுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

தொடர்ந்து பேசிய சீமான், தான் ஒரு தொகுதியில் மட்டுமே நின்று மக்களைச் சந்திப்பதாகவும், தோற்றாலும் அது தன் மக்களிடம் தோற்கும் கௌரவம் என்றும் பெருமிதம் கொண்டார். “எங்களை இனி எவராலும் தோற்கடிக்க முடியாது, அந்த அளவிற்குத் தோல்விகளைக் கடந்து நிமிர்ந்து நிற்கிறோம்” என்று குறிப்பிட்ட அவர், விஜய்யின் அரசியல் வருகைக்கும் அவரது வேட்பாளர் தேர்வுக்கும் இடையே உள்ள முரண்பாடுகளைத் தனது பேச்சின் மூலம் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளார்.

Nanthini

Recent Posts

“அட நம்ம தளபதியா இது?”… மாறுவேடத்தில் பைக் ரைடு சென்ற CM விஜய்..? இணையத்தை கலக்கும் சுவாரசிய பின்னணி…!!

திரைத்துறையிலிருந்து வந்து தமிழ்நாட்டை ஆளும் நான்காவது நபர் என்ற பெருமையுடன், தற்போது தமிழக முதலமைச்சராக விஜய் செயல்பட்டு வருகிறார். ஆரம்பத்தில்…

5 minutes ago

FLASH NEWS: அதிமுகவில் அண்ணாமலை… யாரும் எதிர்பாராத அரசியல் மாற்றம்… தமிழக அரசியலில் அடுத்த ட்விஸ்ட்…!

அதிமுகவிலிருந்து முன்னாள் அமைச்சர்களும், முன்னணி நிர்வாகிகளும் அடுத்தடுத்து வெளியேறி வரும் சூழலில், கட்சியை வலுப்படுத்த அண்ணாமலையை அதிமுகவிற்குள் கொண்டு வர…

6 minutes ago

“நான் குடிகாரியா..? 40 ஆயிரத்துக்கு சரக்கா..?!” – நடிகைனா என்ன வேணும்னாலும் பேசலாமா..? அடுக்கடுக்கான கேள்விகளால் அதிரவைத்த கஸ்தூரி…!!

முன்னணி நடிகையாக வலம் வந்த கஸ்தூரி, யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் சினிமா பிரபலங்கள் குறித்து சமூக வலைத்தளங்களில்…

12 minutes ago

அதிமுகவிற்கு அடுத்த ஷாக்… தவெக-வில் ஐக்கியமாகும் சி.வி.சண்முகம்… திண்டிவனத்தில் நள்ளிரவு பரபரப்பு… சற்றுமுன் அவசர ஆலோசனை…!

அதிமுகவின் முக்கியப் புள்ளியான சி.வி.சண்முகம், அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது கடும் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படும் நிலையில், விழுப்புரம்…

13 minutes ago

ரீல்ஸ் மோகம்…’காதல் கோட்டை’ க்ளைமேக்ஸ் ரீ-கிரியேஷன்… ஓடும் ரயிலில் இளைஞர்கள் செய்த காரியம்… வீடியோவால் எழுந்த சர்ச்சை…! கொதிக்கும் நெட்டிசன்கள்…!

ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்கள் ஆகியவை பொதுமக்களின் பயன்பாட்டிற்கானவை என்றாலும், அவை மிக முக்கியமான பாதுகாக்கப்பட்ட பகுதிகளாகும். எனவே, அங்கு…

19 minutes ago

“வீட்ல தனியா இருக்கீங்களா”… அத்துமீறிய டெலிவரி பாய்… ஓங்கி அறைந்து வேலையை பறித்த பெண்ணின் வைரல் வீடியோ…!

மனிதநேயத்திற்கு நேர்ந்த அவமானம்: தாகத்திற்குத் தண்ணீர் கொடுத்த பெண்ணிடம் அத்துமீறிய பிளிங்கிட் டெலிவரி பாய்! ஆன்லைன் மளிகைப் பொருள் விநியோக…

24 minutes ago